Monday, 31 December 2018

*🎆🥰🎇TNPTF அயனின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🎇🥰🎆*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf_31.html



🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇

*🎂கடந்த கால கசப்புக்கள் மறையவும்... இப்போது இருக்கின்ற சந்தோஷங்கள் நிலைக்கவும்... செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும்.*


*🎂இந்த வருடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வெற்றியின் துவக்கமாய் இருக்கவும் இறைவனை வேண்டி அன்புடன் _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்*

🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday, 30 December 2018

*🖤TNPTF இரங்கல் செய்தி🖤*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf_30.html


*🖤உழைக்கும் வர்க்கத்தின்,அடித்தட்டு மக்களின் உற்ற தோழனாய்,*

*🖤ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாய்,*

*🖤பொதுவுடைமைக் கொள்கையின் வழிநடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் _அன்புத்தோழர்.ஜோதிராம்_ அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.*


*😢கண்ணீருடன்;*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*NHIS - மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழு பணப் பலன்களை பெற்றுத்தந்து சாதனை படைத்து வரும் "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி"*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/nhis.html


💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

*TNPTF - வெற்றி தொடர்கையில்  அடுத்த வெற்றி*



*⭐புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர் திருமதி.சௌ.சண்முகப்பிரியா (TNPTF வட்டாரச் செயலாளர், புதுக்கோட்டை) அவர்களுக்கு சென்னை இந்து மிஷன் மருத்துவமனையில் (ஆஞ்ஜியோ அறுவை சிகிச்சைக்கு)  இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.75600/- மட்டுமே அனுமதித்தது.*


*🌟முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி  புதுக்கோட்டை மாவட்ட மையம் மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் மாநில மையத்தின்  உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் திரு.செல்வகணேஷ் ,மாநில ஒருங்கிணைப்பாளர்  அவர்களின்  தொடர் நடவடிக்கைகள் மூலமாக ( 29.12.2018 இன்று ) NHIS - மூலம் தொகை ரூ 210000/- ஐ  பெற்றுக் கொடுத்தது TNPTF  மாநில மையம்.*


*⚡இது TNPTFன் மகத்தான சாதனை*  


*🙏NHIS க்கான  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.செல்வ கணேஷ் (TNPTF) அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டக்கிளையின் சார்பில் நன்றி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 24 December 2018

*TNPTF அயனின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf.html


🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅

*மகிழ்ச்சி பொங்கும் கிறிஸ்துமஸ் திருநாளில் அனைத்து கிறித்தவ சகோதர சகோதரிகளுக்கும் _TNPTF அயன்_ சார்பாக இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகளை உளமார தெரிவித்துக்கொள்கிறோம்.*

🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄🎅🎄



*💐வாழ்த்துகளுடன்;*

*_அயன் சரவணன்_*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் - செய்தி துளிகள் மற்றும் புகைப்படத்தொகுப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡




https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_24.html


📡

*⭐TNPTF - மதுரையில் 16/12/18 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு முடிவின் படி மாநிலத்தில் முதல் மாவட்டமாக சேலம் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்  இன்று 23/12/18 முற்பகல் 11மணிக்கு ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டதலைவர் _தோழர். கணேசன்_ தலைமையில்  நடைபெற்றது*


📡

*_தோழர். அழகானந்தம்_ நலத்துறை வட்டார செயலாளர் வரவேற்புரை வழங்கினார்.* 


📡

*_தோழர். செ.செல்வம்_ மேனாள் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.*


📡

*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.பெரியசாமி_ வேலை அறிக்கையை வாசித்தார்.*


📡

*⚡வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் _தோழர். ரமேஷ்_ சமர்பித்தார் ஒப்புதல் பெறப்பட்டு ஏற்பு செய்யப்பட்டது.*



*_சிறப்புரை:_*

📡

*_தோழர்.அ. ரஹீம்,_ மாநில துணைத்தலைவர் அவர்கள் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு 17 (B) பெற்ற வீர மறவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஜாக்டோ - ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிகழ்வுகளை மிகச்சிறப்பாக விளக்கி கூறினார். மேலும் 2019 ஜன-8,9ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் CPS- யை இரத்து செய்ய நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை முடித்தார்.*


📡

*⚡இதில் ஆத்தூர், ஆதி திராவிடர்நலக்கிளை கிளை,கெங்கவல்லி,தலைவாசல், சங்ககிரி,தாரமங்கலம் மேச்சேரி,கொளத்தூர்,நங்கவள்ளி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.* 


📡

*⚡மாவட்ட பொருளாளர் _தோழர்.ரமேஷ்_  நன்றி கூற சிறப்பு பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நன்றியுரையுடன் முடிந்தது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм













Sunday, 23 December 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_23.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் (23.12.2018) ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.*


*🌟மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் _தோழர்.செ.கணேசன்_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*


*_முன்னிலை:_*

*⚡முன்னாள் மாவட்டச் செயலாளர் _தோழர்.செ.செல்வம்_ அவர்கள்,*


*_வேலை அறிக்கை:_*

*⚡மாவட்டச் செயலாளர் _தோழர். ந.பெரியசாமி_ அவர்கள்,*


*_சிறப்புரை:_*

*⚡மாநில துணைத்தலைவர் _தோழர்.அ.ரஹும்_ அவர்கள்,*


*_நன்றியுரை:_*

*⚡மாவட்டப் பொருளாளர் _தோழர்.ர.ரமேஷ்_ அவர்கள்,*


*🌟மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு மாவட்ட மையத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*🤝தகவல் பகிர்வு;*


*_செல்வம்_*

*வட்டார செயலாளர்,*

*கொளத்தூர் வட்டாரம்,*

*சேலம் மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday, 22 December 2018

*அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ளபொய் வழக்குகளை ரத்து செய்ய கோரி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_59.html


*⭐சிவகங்கை: அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் தலையீட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*



*⚡ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் _திரு.செல்வக்குமார், திரு.முத்துச்சாமி, திரு.ரவிச்சந்திரன்_  தலைமை வகித்தனர்.*


*⚡இணை ஒருங்கிணைப்பாளர்கள் _திரு.முத்துப்பாண்டியன்,_ _திரு.நாகேந்திரன்,_  முன்னிலை வகித்தனர்.*


*⚡மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் _திரு.சங்கர், திரு.ஜோசப் சேவியர்_ கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.* 


*⚡மாநில ஒருங்கிணைப்பாளர் _திரு.சுப்பிரமணியன்_ கண்டன பேரூரை ஆற்றினார்.*


*⭐ஆர்ப்பாட்டத்தில் உறுப்பு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.*


*⚡ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் _திரு.சுப்பிரமணியன்_ செய்தியாளர்களிடம் கூறியதாவது*


*⭐சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் அரசியல் தலையீடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் நிலை உள்ளது.*


*⭐கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஊரக வளர்ச்சி துறையின் மாவட்ட திட்ட இயக்குனரையே அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது.*


*⭐அலுவலகத்தில் அத்து மீறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டிய காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது மிகவும் மோசமான நிர்வாகத்திறனை காட்டுகிறது.*


*⭐இந்த மாவட்டத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவதில் தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்ட காவல்துறை முன்னிலை வகிக்கிறது. இதனை ஜாக்டோ ஜியோ சட்ட ரீதியாகவும், போராட்டத்தின் மூலமாகவும் எதிர்கொள்வோம்.*


*⭐எங்கள் ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.*


*தோழமையுடன்;*


*_முத்துப்பாண்டியன்,_*

*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,*

*ஜாக்டோ ஜியோ,*

*சிவகங்கை மாவட்டம்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*மாவட்டத்திற்குள் 'டிரான்ஸ்பர்' CEO க்கள் அதிகாரம் ரத்து*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/12/ceo.html


*🌟பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.*


*🌟பள்ளிக்கல்வித்துறையில் இந்த ஆண்டு ஜுனில் நிர்வாக சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்த பல அதிகாரங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியான CEO க்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரியான DEO க்களுக்கு வழங்கப்பட்டன.*


*🌟இதன்படி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவரவர் மாவட்டத்தில் நிர்வாக ரீதியான இடமாறுதல் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் சில மாவட்டங்களில் CEO க்கள் தேவையற்ற மாறுதல் செய்தும், காலி இடங்களைத் தலைமையகத்துக்கு தெரியப்படுத்தாமலும் குளறுபடி செய்துள்ளனர். அதனால் CEO க்களுக்கு பள்ளிக்கல்வி ஊழியர்களை நிர்வாக மாறுதல் செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.*


*_இது தொடர்பாக CEO க்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:_*


*🌟மாவட்ட அளவிலான இடமாறுதல்களால் பள்ளிக்கல்வி இயக்கத்தின் நிர்வாக பணிகளில் காலியிட பட்டியலை சரியாக பராமரிக்க முடியவில்லை. எனவே பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களை CEO க்கள் இடமாறுதல் செய்ய வேண்டாம்.*


*🌟நிர்வாக அவசரமாக இருந்தால் பள்ளிக்கல்வி இயக்குனரகம் மற்றும் இணை இயக்குனரகத்தின் ஒப்புதல் பெற்று மேற்கொள்ள வேண்டும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*"ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வழியிலேயே நடைபெறும்"- பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_22.html


*⭐"ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வழியிலேயே நடைபெறும்"- நடப்பாண்டு முறைகேடு சர்ச்சை வெடித்ததால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு*



*⭐ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவு*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Friday, 21 December 2018

*⭐ கஜா புயல் நிவாரண நிதியாக 13.12.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அவர்களின் செய்தி வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/13122018.html


*செய்தி வெளியீடு எண்: 940, நாள்:19.12.2018*


*⭐“கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும்,முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் 19.11.2018 அன்று பத்திரிகைகளின்வாயிலாக நாட்டு  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.*


⭐மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, தமிழ்நாட்டில் “கஜா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கு ஏற்கனவே *87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய்* வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்.


*_13.12.2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்._*


⚡மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான *13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395* ரூபாய்க்கான காசோலை.


⚡L&T நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.எஸ்.என். சுப்ரமணியன் அவர்கள் *1 கோடியே 50 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.



⚡அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் திரு.விஜயகுமார்ரெட்டி மற்றும் மகன் திரு.கார்த்திக் ரெட்டி ஆகியோர் *1 கோடி* ரூபாய்க்கான காசோலை.


⚡சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் செயலாளர் திரு.விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் சார்பில் *74 லட்சத்து 62 ஆயிரத்து 221* ரூபாய்க்கான காசோலை மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் இந்திரா பானர்ஜி அவர்கள் வழங்கிய *25 ஆயிரம்* ரூபாய்க்கான காசோலை.


⚡ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் திரு.ஆர்.எஸ். முனிரத்தினம் அவர்கள் *50 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையத்தின் தலைவர் திரு.ரெ.காயாம்பு, பொதுச்செயலாளர் திரு.ஜெ.இராஜாமற்றும் நிர்வாகிகள் *11 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡சத்திரப்பட்டி பொது சுத்திகரிப்பு நிறுவனத்தின் (Chatrapatti Common Effluent Treatment Plant Pvt, Ltd.,) தலைவர் திரு.ஏ.சீனிவாசன் அவர்கள் *10 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் _மாநிலத் தலைவர்  திருமதி மூ.மணிமேகலை_ அவர்கள் _10 லட்சம்_ ரூபாய்க்கான காசோலை.*


⚡செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு.கே.ரத்தினசேகர் மற்றும் நிர்வாகிகள் *10 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⚡சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் திரு.ஏ. பாலாஜி மற்றும் நிர்வாகிகள் *5 லட்சம்* ரூபாய்க்கான காசோலை.


⭐மேலும், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை வழங்கப்பட்ட தொகை *108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாயாகும்.*



*📩வெளியீடு:*


*_இயக்குநர்,_* 

*செய்தி மக்கள் தொடர்புத்துறை,*

*சென்னை-9*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Thursday, 20 December 2018

*UTA சார்பாக ஆசிரியர்களுக்கு Android Application Creation Workshop பயிற்சி குறித்த செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/uta-android-application-creation.html


*⭐Universal Teacher's Academy சார்பாக ஆசிரியர்களுக்கு Android Application Creation Workshop பயிற்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (23.12.2018) அன்று கள்ளக்குறிச்சி தச்சூரில் உள்ள Oxaliss CBSE School ல் நடைபெற உள்ளது.*


*⭐தேனீர் மற்றும் சிற்றுண்டி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மதிய உணவு ஏற்பாடு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*


*⭐தாங்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து WhatsApp Group ல் இணைந்து தங்கள் வருகையை உறுதி செய்யவும், நாளை மாலைக்குள் உறுதிசெய்யவும். நன்றி!*

https://chat.whatsapp.com/D32Js8CF4Ud3AYaFe8HFWQ


*⭐இப்பயிற்சிக்கு 40 முதல் 50 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதுவரை 28 ஆசிரியர்கள் பதிவு செய்து தேர்வாகியுள்ளார்கள். இன்னும் 22 ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் தங்கள் வருகையை விரைந்து பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*பதவி உயர்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் _தோழர் ச.மயில்_ அலைபேசி உரையாடல் குறித்த செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_20.html


*⭐பதவி உயர்வு கலந்தாய்வை (காலிப்பணியிடம் உள்ள மாவட்டங்கள்) டிசம்பர் 31க்குள் நடத்திக் கொள்ளலாம் எனவும்,*


*⭐தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை பொறுத்தவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மற்றும் புதிய பள்ளிகளை தவிர்த்து ஏனைய பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என இசைவு தெரிவித்துள்ளார்கள்*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday, 18 December 2018

*சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொடர் அரசியல் தலையீட்டை எதிர்த்து டிச 21ல் ஆர்ப்பாட்டம். ஜாக்டோ ஜியோ பங்கேற்க முடிவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/21.html


*⭐சிவகங்கை: அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.*



*⭐டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தை நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்திலும், மதுரை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.*


*⭐டிச 3ல் நடந்த விசாரனையில் நீதி மன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இவ்வழக்கின் தொடர் விசாரனை கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மதுரையில் மீண்டும் நடந்தது.*


*⭐இதில் தமிழக அரசு ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கையையும், பென்சன் திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கையையும் சீலிட்ட கவரில் வைத்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.*


*⭐21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரனை ஜனவரி 7 அன்று நடக்கும் என்றும் உத்தரவிட்டனர். இதனால் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ மீண்டும் ஒத்தி வைத்தது. இதற்கான நீதி மன்ற விளக்கக் கூட்டம் சிவகங்கையில்,*


*⚡மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் _முத்துப்பாண்டியன்,_ _நாகேந்திரன்_ தலைமையில் நடைபெற்றது.*


*⚡இணை ஒருங்கிணைப்பாளர்கள் _செல்வக்குமார்,_ _முத்துச்சாமி,_ _ரவிச்சந்திரன்_ முன்னிலை வகித்தனர்.*

*⚡மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் _சங்கர்_ கோரிக்கைகளை விளக்கி பேசினார்.*

*⚡மாநில ஒருங்கிணைப்பாளர் _பொன் செல்வராஜ்_ நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரனை குறித்து விளக்கமளித்தார்.*

*⚡இக்கூட்டத்தில் உறுப்பு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*


*⭐சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் அரசியல் தலையீடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.*


*⭐இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஊரக வளர்ச்சி துறையின் மாவட்ட திட்ட இயக்குனரையே அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கியது என்பது மாவட்ட ஆட்சித் தலைவரே பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வருவதையே காட்டுகிறது.*


*⭐எனவே மாவட்டத்தில் தொடர்ந்து வரும் அரசியல் தலையீட்டை கண்டித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் டிசம்பர் 21 அன்று மாலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டே ஜியோ தார்மீக ஆதரவு அளிப்பது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்தில் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.*


*_குறிப்பு:_*

*அனைத்து உறுப்பு சங்கங்களும் தங்களது உறுப்பினர்களை திரளாக பங்கேற்க செய்யவும்.*


*🤝தோழமையுடன்;*


*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*

*ஜாக்டோ ஜியோ,*

*சிவகங்கை மாவட்டம்*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 10,00,000 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/12/1000000.html



*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதியை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் பத்து லட்சம் ரூபாய்கான வங்கி வரைவோலை நேரில் அளிக்கப்பட்டது.*

*⭐இது தொடர்பாக சென்னையில் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  அவர்களை 17.12.2018 அன்று கூட்டணியின்*

*⚡மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_*

*⚡மாநிலப்பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு,_*

*⚡துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில  இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்_*

*ஆகியோர் மாநில அமைப்பின் சார்பில் பத்துலட்சம் ரூபாய்க்கான  வங்கி வரைவோலை அளித்தனர்.*


*⭐இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.மயில், “கஜா புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் நேரடியாக எழுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ள நிலையில், இத்துயர் துடைக்கும் பணியில் மேலும் உதவும் பொருட்டு மாநில அமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பத்துலட்சம் ரூபாய் அளித்துள்ளோம்.*



*⭐மேலும், எங்களது இயக்க உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக்கங்களில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு பத்துலட்சம் ரூபாய் அளித்த இயக்கம் _“ உரிமைக்குக் குரல் கொடுப்பதிலும், உதவிக்கு கரம் கொடுப்பதிலும் எங்கள் இயக்கம் என்றும் முன்னணியில் நிற்கும்”_ என்று தெரிவித்தார்.*


*ஊடகச்செய்தி:*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Monday, 17 December 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக்கூட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்.*

https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_17.html


*_நாள் :_*

*16.12.2018*



*_இடம் :_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம், மதுரை*


*_தலைமை:_*

*_திருமதி.மூ.மணிமேகலை,_ மாநிலத்தலைவர்*



*⭐கூட்ட முடிவுகள்:*


*_தீர்மானம் : 1_*


*⚡உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பல்வேறு போராட்டக்காலங்களில் நமது இயக்கத்திற்கு உறுதுணையாக விளங்கியவருமான தோழர்.கோ.வீரய்யன் அவர்களின் மறைவிற்கு இம்மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*



*_தீர்மானம் : 2_*


*⚡தமிழ்நாடு அரசின் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை மீட்பதற்காக கடந்த 9 ஆண்டுகாலமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு சரிசெய்யப்படாத நிலையில்,  அதன் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று மாவட்டத்தலைநகரங்களில்  நடத்திய அரசாணை எரிப்புப்  போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி மற்றும் மேல்முறையீடு விதி 17(ஆ)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்திருப்பதை ஆசிரியர்களின் நலன் கருதி  திரும்பப்பெற வேண்டும் எனவும், கோரிக்கையின் பேரில் ஜனநாயக ரீதியாகப்  போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை கல்வித்துறை கைவிட வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறையை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.*



*_தீர்மானம் : 3_*


*⚡ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்ட தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் உட்பட பல்வேறு மக்கள் நலக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரு நாட்கள் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு STFI)  முடிவெடுத்துள்ள நிலையில், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் மேற்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் : 4_*


*⚡ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்கு 07.01.2019 அன்று விசாரணைக்கு வரும் நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்து, ஏற்கனவே ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு தீர்மானித்தவாறு 08.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்திட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை இம்மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*_தீர்மானம் : 5_*


*⚡கஜா புயலால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் நேரடியாக எழுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை இதுவரை வழங்கியுள்ள நிலையில், இத்துயர் துடைக்கும் பணியில் மேலும்  உதவும் பொருட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாநில  அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,00,000(ரூபாய் பத்துலட்சம் மட்டும்) அளித்திட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் : 6_*


*⚡26.11.2018 அரசாணை எரிப்புப்போராட்டம் மற்றும் அது தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்டக்கிளைகளும் சிறப்புப் பொதுக்குழுக்களைக் கூட்டுவதெனவும், அக்கூட்டங்களில் மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விளக்க உரையாற்றுவது எனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் : 7_*


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார ,மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்களுக்கு 2019 மார்ச் மாதத்தில் சென்னையில்  இரண்டு நாட்கள் “இயக்க பயிற்சி முகாம்” நடத்துவதெனவும், அதற்கு கட்டணமாக பங்கேற்கும் பொறுப்பாளர்களிடமிருந்து ரூ500-(ரூபாய் ஜநூறு மட்டும்) கட்டணமாக வசூலிப்பது எனவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் : 8_*


*⚡கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழக அரசு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக் கொள்கிறது.*



*_தீர்மானம் : 9_*


*⚡தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது, அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது, தேசிய  கல்விக்கொள்கை அறிவியல் மனப்பான்மையுடன் உருவாக்கப்படுதல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 22 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI) உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் சார்பில் 19.02.2019 அன்று புதுதில்லியில் நடைபெறும் அகில இந்தியஅளவிலான “ SAVE CAMPUS SAVE EDUCATION & SAVE NATION” பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப்பொதுக்குழுவில் இடம்பெறும் அனைவரும் பங்கேற்பது எனவும் அதற்குரிய பயணத்திட்டத்தை மாநில மையம் விரைந்து அறிவிப்பது எனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் : 10_*


*⚡2019 ஆம் ஆண்டிற்கான இயக்க நாட்குறிப்பு, நாட்காட்டி, அரசாணைப்புத்தகம்  ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த விலை ரூ.250 (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) எனவும், தனித்தனி விலையாக நாட்குறிப்பு ரூ 100, நாள்காட்டி ரூ 50, அரசாணைப்புத்தகம் ரூ 100-எனவும் விலைநிர்ணயம்  செய்து இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 10 December 2018

*JACTTO-GEO போராட்டம் ஒத்திவைப்பா? வதந்திகளை நம்ப வேண்டாம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/jactto-geo_10.html


```POST TIMIE : 3.41PM 10.12.2018```


⭐சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (10.12.2018) பிற்பகல் விசாரணைக்கு வந்த ஜாக்டோ-ஜியோ வழக்கில்


⭐*சித்திக் குழு & ஸ்ரீதர் குழு அறிக்கையினை மூடி முத்திரையிட்ட தாளில்* நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும்.


⭐*21 மாத ஊதிய நிலுவையை வழங்குவதற்கான* நடவடிக்கை குறித்த *அறிக்கையை 2 நாள்களுக்குள் நீதிமன்றத்தில்* அரசு சமர்ப்பிக்க வேண்டும்.


⭐*அடுத்த கட்ட விசாரணை 07.01.2019* அன்று நடைபெறும்.


⭐உள்ளிட்ட உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விரிவான முழுமையான தகவல் விரைவில் பகிரப்படும்.


⭐இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க *ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் இன்று (10.12.18) மாலை மதுரையில் கூடுகிறது.*


⭐*முக்கிய நிர்வாகிகள்* அனைவரும் *மதுரையில்* உள்ளனர். *இதுவரை எவ்வித ஊடகச் சந்திப்பும் நடத்தப்படவில்லை.*


⭐ஆனால், *போராட்டம் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வதந்திகள்* பரப்பப்பட்டு வருகின்றன. மாலைக்குப் பின்பே முழுமையான விபரம் தெரியவரும்.


*📩தகவல் பகிர்வு;*

*_TNPTF விழுதுகள்_*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday, 9 December 2018

*🧚🏻‍♀GPF - ☠CPS - 👿NPS திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கும் ஒப்பீட்டு அட்டவணை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/gpf-cps-nps.html


*🧚🏻‍♀GPF - ☠CPS - 👿NPS திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கும் ஒப்பீட்டு அட்டவணை*


*🙏 _நன்றி_ 🙏*


*தோழர்.பிரடெரிக் ஏங்கல்ஸ்.* 



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*JACTTO-GEOவிடம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும்❗ சித்திக்-ஸ்ரீதர் குழுக்களும்‼*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡




https://tnptfayan.blogspot.com/2018/12/jactto-geo.html


_✍🏼செல்வ.ரஞ்சித்குமார்._


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறைகள் நீண்டகாலக் கோரிக்கைகளாக உருப்பெற்று அதைத் தீர்க்கக் கோரும் களப் போராட்டங்கள் தீவிரமடையும் சூழலிலும் அதை நேரடியாகக் களையாது கோரிக்கை மீதான *உரிமை வேட்கையைத் தணிக்கும் விதமாகவே குறைதீர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழகம் கண்ட வரலாறு.*


இக்குழுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்வையில் அரசின் தீரமிகு செயல்பாடாகவும், வழக்காடு மன்றப் பார்வையில் தீர்ப்பிற்கான செயல்பாடாகவும் அமைந்துள்ளதே அன்றி *அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கோரிக்கை களையும் தீர்விற்கான செயல்பாடாக அமைந்ததே இல்லை.*


அதற்கு 7-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின் (நமது பார்வையில் 6th Pay Commission) அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவே சாட்சி. எனவே தான் 8-வது தமிழக ஊதியமாற்றக் குழுவிற்குப் பின்பும் கோரிக்கைகள் களையப்படாது போராட்டங்கள் தொடர்கின்றன.


தற்போதும் ஜாக்டோ-ஜியோ மீண்டுமொரு வீரியமிகு போராட்ட முகட்டில் நிற்கையில், அதன் கடந்த கால களப்போராட்டங்களில் ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளப்படாத CPS நீக்க வல்லுந‌ர் குழுவும், அரசு ஊழியர் ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.


உண்மையில் *JACTTO-GEO போராட்டங்கள் எந்நிலையிலும் அரசு அமைக்கும் குழுக்களைக் காரணம் காட்டி நகர்த்தப்படவோ - நிறுத்தப்படவோ இல்லை* என்பது எனது அனுபவத் தெளிவு.


நான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பினும் அதை மறந்துவிட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இதன்வழி அதை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், தற்போது குழுவைக் காட்டி ஏமாற்றும் வித்தைக்குள்ளாகச் சிலர் சிக்குண்டுள்ளனர்.


தற்போதும் ஓய்வூதிய வல்லுந‌ர் குழு & ஊதிய முரண்தீர் ஒரு நபர் குழு இரண்டையும் கவனத்தில் ஏற்றி நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி அரசு ஊழியர் & ஆசிரியர்களின் கண்கள் பூத்துப்போய்க்கிடக்கின்றன.


இவ்விரண்டுமே JACTTO-GEOவின் கோரிக்கைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை என்பதை முன்பே உணர்ந்ததாலேயே குழுக்களின் முடிவிற்குக் காத்திருக்காது களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது JACTTO-GEO.


JACTTO-GEO-வின் போக்கினை உணர்ந்தோர் அனைவரும் வேண்டுவது, *10.12.2018-ற்குப் பின் காலம் தாழ்த்தாது 11.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த களத்தில் இறங்க வேண்டும்* என்பதே.


ஏனெனில் வழக்காடு மன்ற அனுபவங்களும், அரசின் சாக்குப்போக்கான உறுதியளிப்புகளும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது, *"காத்திருப்புகள் அல்ல களப்போராட்டமே தீர்வைத் தரும்!"* என்பதைத்தான்.


_கற்று மறந்தோரின் நினைவூட்டலுக்காக குழுக்கள் அமைக்கப்பட்ட முறைமையும் ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடைமுறையையும் பறவைப் பார்வையாக இங்கே பகிர்ந்துள்ளேன்._


*🔛 10.02.2016*


பல கட்டப் களப் போராட்டங்களைக் கடந்து *தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் CPS நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.


*🔛 11.02.2016*


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற *அமைச்சர் குழு & ஜாக்டோ கூட்டமைப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.* எனினும், முன்னரே தீர்மானித்திருந்த போராட்ட அறிவிப்பை ஜாக்டோ கூட்டமைப்பு அறிவிக்கவில்லை.


*🔛 12.02.2016*


எனவே, *ஓய்வூதியக் கோரிக்கையோடே இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய கோரிக்கையையும் வலியுறுத்தி* திருச்சி மாநிலச் செயற்குழு முடிவின்படி *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களும் வேலைநிறுத்தத்தில்* உடன் இணைந்தன. *19.02.2016-ல் சட்டப்பேரவையில் முதல்வர், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதிய (ரூ.1,500) உயர்வு, சமையல் உதவியாளர் பணப்பயன் ரூ.25,000 உயர்வு, குழுக் காப்பீட்டு தொகை 3 லட்ச ரூபாய் உயர்வு, அரசு ஊழியர் நிர்வாக தீர்ப்பாயம்* உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையோடே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னரே *CPS-ல் இறந்த பணியாளருக்கு பங்களிப்பு தொகை வழங்க ஆணை* வெளியிடப்பட்டது.


*🔛 19.02.2016*


பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, *பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான* சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க *வல்லுந‌ர் குழு* அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.


*🔛 26.02.2016*


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய *G.O.Ms.No.65, Finance (PGC) Department, dated 26.02.2016-ன்* படி *திருமதி.சாந்தசீலா நாயர் இ.ஆ.ப* தலைமையில் வல்லுந‌ர் குழு அமைக்கப்பட்டது.


_(அதன்பின்னர் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டிற்கும் மேலாகக் காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுந‌ர் குழு திரு.ஸ்ரீதர் தலைமையில் தற்போது அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.)_


*🔛 07.09.2017*


பலகட்ட தனிச்சங்கப் போராட்டங்களையும் பிரிவினைகளையும் கடந்து உருப்பெற்ற *JACTTO-GEO கூட்டமைப்பு செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்* இறங்கியது.


*🔛 15.09.2017*


அரசின் நெருக்கடிகள், நீதிமன்றத் தடைகள், அனைத்தையும் கடந்து தீரமுடன் 8 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் *சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை JACTTO-GEOவிற்கு அளித்த உத்தரவாதத்தின் படி 15.09.2017 பிற்பகல் 2 மணிக்கு பணிக்குத் திரும்பினர்* ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்.


*🔛 21.09.2017*


JACTTO-GEO-வின் கோரிக்கைகள் மீதான நியாயத்தை உணர்ந்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால், *தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017-க்குள் பெறப்படும்* என்று உறுதியளித்தார்.


மேலும், 30.09.2017-ற்குள் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டதோடு, *13.10.2017-ல் புதிய ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்  23.10.2017-ல் இடைக்கால நிவாரணம் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைநிறுத்தம் தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது. வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியப் பிடித்தம் செய்யக் கூடாது* என நீதிமன்றம் உத்தரவிட்டது.


*🔛 11.10.2017*


இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகள் *G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, Dated: 11.10.2017.-ன்* படி வெளியிடப்பட்டது.


*🔛 08.12.2017*


ஊதிய முரண்பாடுகளோடே நடைமுறைக்கு வந்த ஊதியக்குழு அரசாணை, CPS நீக்கக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமை & ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட சூழலில் 08.12.2017 மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று அடுத்த கட்ட போராட்ட அறிவிப்புகளோடே, சனவரி 4-வது வாரத்தில் இருந்து, *ஜாக்டோ-ஜியோவின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக சுழற்சி முறையில், சென்னையில் காலவரையற்ற தொடர் மறியலில்* ஈடுபடுதல் எனவும் அறிவித்தது.


*🔛 15.12.2017*


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்திப்பதாக இருந்த நிலையில், தவிர்க்க இயலாத அலுவல் காரணமாக முதல்வரை நேரில் சந்திக்க இயலாததால் *கோரிக்கை & நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான மனுவை முதல்வர் அலுவலகத்திலும், தலைமைச் செயலர் & நிதித்துறை முதன்மைச் செயலரிடம்* வழங்கப்பட்டது.


*🔛 08.01.2018*


மாண்புமிகு தமிழக *ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்* அவர்கள் தனது ஆளுநர் உரையில் *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒருநபர் குழு* அமைக்கப்படும் என அறிவித்தார்.


*🔛 19.02.2018*


ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாத சூழலில் வழக்கமான காலம் கடத்தும் நடவடிக்கையாக *FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.57, Dated: 19th February, 2018-ன் படி M.A.சித்திக் இ.ஆ.ப* அவர்களின் தலைமையில்  *31.07.2018-ற்குள் அறிக்கை சமர்ப்பிக்க* ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.


*🔛 21.02.2018*


நீண்ட கால கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது 30.11.2017-ல் சமர்ப்பிப்பதாக தலைமைச்செயலாளரே நீதிமன்றத்தில் உறுதியளித்த CPS நீக்க வல்லுநர்குழுவின் அறிக்கையே வெளிவரா சூழலில் ஊதியத்திற்கான ஒரு நபர் குழு அமைத்ததன் நோக்கம் உணர்ந்து, முன்னர் அறிவித்தபடியே சிறு கால தாமதத்துடன் *21.02.2018 முதல் 4 நாள்களாக சென்னையில் ஜாக்டோ-ஜியோ-வின் மறியல்* போராட்டம் நடைபெற்றது.


*🔛 24.02.2018*


4 நாள்கள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவத்தினைத் திட்டமிடக்கூடிய  ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மீண்டுமொரு மாவட்ட மறியலைத் தொடர்ந்து, *1985, 1988--ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் போன்று* மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை 08.05.2018 அன்று, இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி *தலைமைச் செயலக முற்றுகை நடத்துதல்* எனத் தீர்மானிக்கப்பட்டது.


*🔛 08.05.2018*


*சென்னையே முடங்கும் அளவிற்கு இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்கள் சென்னையில் கூடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட* முயன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோரை அடைக்க தற்காலிகச் சிறையின்றி தலைநகரே திக்குமுக்காட இறுதியில் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நிரம்பியது.


*🔛 11.06.2018*


*ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் & மாநில நிர்வாகிகள் சென்னையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.* நான்காம் நாளில் அரசின் அடக்குமுறைகளால் முடிவிற்கு வந்தது.


*🔛 03.12.2018*


மீண்டும் பலகட்ட சிக்கல்களையும் போராட்டங்களையும் கடந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் இணைந்ததையடுத்து ஒருவார கால தாமதத்துடன் 04.12.2018-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கும் முன்னாக *நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேலைநிறுத்தம் 10.12.2018 வரை ஒத்திவைக்கப்பட்டது.*


*🔛 10.12.2018 ❓❓❓*


_முதல் 10 பத்திகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு 10.12.2018-ஐ எதிர்கொள்ள JACTTO-GEO மாநில உயர்மட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்._


கோரிக்கைகளை உடன் நிறைவேற்றாது வேறு ஏதேனும் காரணங்களோ அல்லது வழக்கமான வெற்று வாக்குறுதிகளோ அரசின் தரப்பில் தரப்படுமாயின் *உடன் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியாக வேண்டும் என்பதே ஜாக்டோ-ஜியோவிடம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*


*_உரிமை வேட்கையோடே உள்ள ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஏதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஜாக்டோ-ஜியோ❓❓❓❓❓*_


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм