Wednesday, 30 January 2019
*மாணவர் நலன் கருதி JACTTO-GEO வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் - நாளை தங்களது பள்ளியிலேயே பணியேற்கவும் : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/jactto-geo-tnptf.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 13*
*நாள் : 30.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்!*
*⭐பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22.01.2019 முதல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது.*
*⭐நமது பேரியக்கத்தின் தோழர்கள் இந்த ஒன்பது நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் இடையில் சிறிதும் மனம் சோராது நமது அமைப்பிற்கே உரிய தன்னிகரற்ற போர்க்குணத்துடன் மிகவும் சிறப்பான களப் பணியை இறுதிவரை ஆற்றி வந்துள்ளமை கண்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*⭐இந்த ஒன்பது நாட்கள் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சிறைப் படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் தற்போது பிணையில் வெளி வந்துள்ளனர். எஞ்சிய தோழர்களையும் பிணையில் வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கிளைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.*
*⭐மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு (17B) குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.*
*⭐இந்நிலையில் இன்று (30.01.2019) சென்னையில் கூடிய ஜாக்டோ ஜியோ வின் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில்,*
*⭐"போராட்ட காலத்தில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், தற்பொழுது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி அளிக்கவேண்டும், நாளை முதல் பணியில் சேர உள்ளோர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது, 21-ம் தேதி பணி நிலையிலேயே தொடர் பணி ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன்*
*⭐எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது நிலுவையில் தான் உள்ளது என்ற போதிலும் தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி,*
*⭐ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (30.01.2019) மாலையுடன் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும்*
*⭐முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மீண்டும் ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தில் இறங்கும்" என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது.*
*⭐எனவே, ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு முடிவுக்கு இணங்க இன்றுடன் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு நாளை முதல் (31.01.2019) பணிக்குச் செல்லும் நமது தோழர்கள் தாங்கள் 21ஆம் தேதி வரை பணியாற்றி வந்த அதே பள்ளியில் மீண்டும் பணியேற்கக் கேட்டுக்கொள்கிறோம்.*
*⭐அவ்வாறு நமது தோழர்கள் பணிக்குத் திரும்பும் சூழலில் மாவட்ட / வட்டாரக் கல்வி அதிகாரிகள் பணி ஏற்க விடாது தடுக்கும் சூழல் ஏற்படுமாயின், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமான ஆணைகளை வழங்கும்படி வட்டார - நகர / மாவட்டக் கிளைகள் வலியுறுத்த வேண்டும்.*
*⭐இது சார்ந்த தகவல்களை உடன் மாநில மையத்தில் தெரிவிக்கவும். அதுகுறித்த _சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் இயக்க ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நமது உறுப்பினர்களின் பணிப்பாதுகாப்பிற்கு உறுதியளிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தயாராக உள்ளது_ என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*சென்னை.*
*30.01.2019*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*⚫TNPTF - இரங்கல் செய்தி😢*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_30.html
*⚫தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் செயலாளரும், நமது இயக்கத்தின் இணையற்ற செயல்வீரருமாகிய தோழர்.தி.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் நேற்று (29.01.2019) இயற்கை எய்தினார்.அவரது மறைவு நமது இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.*
*⚫தோழரது மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது*
*⚫இன்று (30.01.2019) மாலை நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மாநிதலைவர்,பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்*
*😢கண்ணீருடன்;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஜாக்டோஜியோ 29.01.2019 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முக்கிய முடிவுகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/29012019.html
*_பேரன்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*_கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:_*
*⚡கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது*.
*⚡(30.1.19) அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்துவது*
*⚡கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் ஜாமீனில் எடுப்பது*
*⚡மாநில அவசர உயர்மட்டக்குழு நாளை (30.01.2019) கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வது*
*⭐மேற்கண்ட முடிவுகளை சரியாக நடத்திடுமாறு மாநில ஜாக்டோஜியோ கேட்டுக்கொள்கிறது*
*🤝தோழமையுடன்*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 28 January 2019
*_ஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்_*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_28.html
*⚡மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை இன்று 28.01.2019 மாலை 3.30 மணியளவில் நீதிபதி _கே.கே.சசிதரன், சாமிநாதன்_ - அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.*
*⚡தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்*
*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அழைத்து சுமூக தீர்வு எட்ட ஏன் பேச்சு நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி*
*⚡தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் அறிவிப்பு*
*⚡தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, இந்த நியமனம் மூலம் புதிய பிரச்சினை தொடங்கப்பட்டுள்ளது.*
*⚡தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தினால் அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவார்கள் (அ) நீதிமன்றம் வருவார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து*
*⚡அரசு மற்றும் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து தங்களது கருத்தை சற்று நேரத்தில் தெரிவிக்க வலியுறுத்தல்... அதுவரை வழக்கு சற்று நேரத்திற்கு ஒத்தி வைப்பு.*
*⚡நீதிமன்றம் - ஜாக்டோ ஜியோ சார்பாக கருத்து கூற விரும்பவில்லை.*
*⚡நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். என்றும் உயர் நீதிமன்ற கிளை கூறியது.*
*⚡கோரிக்கைகள்தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம் கருத்து*
*⚡வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.*
*⭐மதுரை உயர்நீதிமன்றத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு. ஆகவே போராட்டம் தொடரும். எந்த வடிவிலான போராட்டம் என்பதை தற்பொழுது ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு அறிவிக்க உள்ளது..*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 27 January 2019
*CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் ஏங்கெல்ஸ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/cps-13000-200.html
*⭐தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.*
*⭐ இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.*
*⭐இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.*
*⭐தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.*
*⭐அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த _CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது._*
*⭐தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் _அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்._*
*⭐மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான _ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்._*
*⭐இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் _அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்._*
*⭐எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு _பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*“நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது”_ எனவே நாளைய மறியல் போர்க்களத்தை மகத்தானதாக்குவோம் - TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_27.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 12/2019* *நாள் : 27.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்.*
*⭐நாளைய (28.01.2019) ஜாக்டோ ஜியோவின் மறியல் போராட்டக்களம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைய மறியல் போராட்டத்தை எவ்வளவு வலிமையுடன் நடத்த முடியுமோ அவ்வளவு வலிமையுடன் நடத்திட வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று நாட்கள் மறியல் போராட்டத்தைக் காட்டிலும் எழுச்சியும், எண்ணிக்கையும் கொண்டதாக களம் அமையவேண்டும். இந்நிகழ்வில் நம் இயக்கத் தோழர்களின் பங்கேற்பு மகத்தானதாக இருக்கவேண்டும்.*
*⭐நாளைய மாவட்டத்தலைநகர் மறியல் போரில் நம் இயக்க உறுப்பினர்களுடன் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். அதுவே இயக்க உறுப்பினர்களுக்கு உற்சாகத்தை தருவதாக அமைந்திடும். நாளைய மறியலில் மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் திருநெல்வேலியிலும், _மாநிலப்பொதுச்செயலாளராகிய நான் தூத்துக்குடியிலும்._ மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ திருவண்ணாமலையிலும் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரும் அவர்களது சொந்த மாவட்டங்களிலும் பங்கேற்கிறார்கள்.*
*⭐அடுத்து வரும் போராட்ட நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக வட்டார, மாவட்ட, மாநில அளவில் ஒரு சில பொருத்தமான தோழர்களை மட்டும் வெளியில் இருக்கச் செய்திட வேண்டும். போராட்டக்களம் இப்போதுதான் 1985, 1988 மற்றும் 2003 களச்சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, மீண்டும் ஒரு வெற்றி வரலாறு படைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. நம் இயக்கப் பொறுப்பாளர்கள் காவல்துறையின் முன்னெச்சரிக்கைக் கைது நடவடிக்கைக்கு உட்படாமல் இருக்க வேண்டும். நாளைய மறியல் போர் களத்தில்தான் கைதாகிட வேண்டும் என்பதில் தோழர்கள் உறுதியுடன் இருக்கவேண்டும்.*
*⭐ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போரில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் காவல்துறை நடந்து கொண்ட அராஜக நடவடிக்கைகளும், பெண்களிடம் நடந்து கொண்ட விதமும், நள்ளிரவு கைது நடவடிக்கைகளும், தமிழக அரசின் மிரட்டல் நடவடிக்கைகளான 17(பி), தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கைகளும் மாண்புமிகு.நீதியரசர்களின் கவனத்திற்குச் செல்லும். நீதிமன்றம் நியாயம் வழங்கும். நாளைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.*
*⭐தற்போது தமிழக அரசு அச்சத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு நம்மீது எச்சத்தை பொழிந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க தவறான தகவல்களை ஊடகங்கள் வழியே பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவும் செய்யும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுடன் பேசுவதற்குக் கூட தயாரில்லை. இதிலிருந்தே இப்போராட்டத்திற்குக் காரணம் தமிழக அரசு மட்டுமே என்பது புரியும்.*
*⭐25.01.2019 க்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை ஏதும் இருக்காது என்று கூறிய தமிழக அரசு தற்போது 28.01.2019க்குள் திரும்பினால் நடவடிக்கை இருக்காது என்று கூறுகிறது. இந்தத்தேதி எத்தனை முறை நீட்டிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சிறிதும் சலனப்பட மாட்டார்கள்.*
*⭐பல மாவட்டங்களில் 17(பி), தற்காலிகப் பணிநீக்க ஆணைகளை வழங்குவதில் சில வட்டாரக்கல்வி அலுவலர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். பள்ளிகள் இணைப்பு அரங்கேறும் போது இவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களாகவே இருக்க மாட்டார்கள் என்பதைக்கூட உணராத அதிகார போதையில் இவர்கள் இருப்பதை உணர முடிகிறது. தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் வலிமை ஜாக்டோ ஜியோவிற்கு உண்டு.*
*⭐நிறைவாக ........... தோழர்களே! _“நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது”_ எனவே நாளைய மறியல்போர்க்களத்தை மகத்தானதாக்குவோம். _“பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா”_ என்று குழந்தைகளுக்குப் போதிக்கும் நாம் துணிச்சலுடன் களத்தை எதிர்கொள்வோம்.*
*_நாளைய வெற்றி நமதே!_*
*_“இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது!_*
*_போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது!”_*
*🤝போராட்ட வாழ்த்துக்களுடன்*
*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 26 January 2019
*அரசு ஜாக்டோ ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_26.html
*⭐3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.*
*⭐தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த டிசம்பர் 4-ம் தேதியிலிருந்து நடைபெறும் என ஏற்கெனவே ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில், வேலைநிறுத்தம் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.*
*⭐உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்த போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாநில அரசு எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை. இதனால் ஜாக்டோ ஜியோ ஜன.22 முதல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*
*⭐ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநில அரசு முன்வராததே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரணமாக உள்ளது. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணாத மாநில அரசின் ஜனநாயக விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.*
*⭐உடனடியாக ஜாக்டோ ஜியோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராடும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் நலன்களை பாதுகாக்க முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.*
*⭐போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், தமிழக அரசின் ஊழியர் விரோத போக்கை கைவிடவும் இப்போராட்டத்திற்கு துணை நிற்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.”*
*இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழக அரசு சர்வாதிகார ஆணவப் போக்கில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) வன்மையாகக் கண்டிக்கிறது - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf_26.html
*மாநிலஅமைப்பின் செய்தி அறிக்கை எண் : 2/2019*
*நாள் : 26.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்*
*⭐நேற்று (25.01.2019) நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது _தமிழக அரசின் காவல்துறை தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சட்டவிரோத, மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது._*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு _சிலரை மட்டும் குறிவைத்து கைது_ செய்து காவல்துறை சிறையிலடைத்துள்ளது.*
*⭐கைது செய்யப்பட்டவர்கள் மீது _பொருத்தமற்ற, மோசமான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு_ செய்யப்பட்டுள்ளது என்பதும், சில மாவட்டங்களில் _கொலை முயற்சி உள்ளிட்ட ஏழெட்டுப் பிரிவுகளில் வழக்குப்பதிவு_ செய்யப்பட்டுள்ளது என்பதும் _காவல்துறையின் அத்துமீறிய அராஜக நடவடிக்கைக்கு_ எடுத்துக்காட்டு ஆகும்.*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட _பெண்களை கைது செய்து 6 மணிக்கு மேல் எவ்வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல்_ பாதுகாப்பற்ற முறையிலும், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியும் _இரவு முழுவதும் மண்டபங்களில் உணவு, தண்ணீர் கூட கொடுக்காமலும், அவற்றை வாங்குவதற்குக் கூட அனுமதிக்காமலும்_ வைத்திருந்தது என்பது _தமிழக அரசின் பழிவாங்கும் மனோபாவத்தையும், ஆணவப்போக்கையும்_ வெளிப்படுத்துகிறது.*
*⭐தூத்துக்குடி மாவட்டம் _கோவில்பட்டியில்_ கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த _பெண் ஆசிரியர்களை நள்ளிரவு 12 மணிக்கு மேல் காவல்துறையினர் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துச்சென்ற நிகழ்வும், ஆண்களை முரட்டுத்தனமாக வெறித்தனத்தோடு கைது செய்த நிகழ்ச்சியும்_ வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*
*⭐பல மாவட்டங்களில் கடும் _குற்றவாளிகளைக்_ கைது செய்வதைப்போல, _தேச விரோதிகளைக் கைது செய்வதைப்போல_ தெருவில் நடந்து சென்றவர்களையும், ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும், டீ குடித்துக் கொண்டிருந்தவர்களையும் _கைது செய்த நிகழ்வு_ என்பது _என்றென்றும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அரசுக்கு அழியா அவப்பெயரை_ ஏற்படுத்திவிட்டது.*
*⭐மறியலில் பங்கேற்று _கைதானவர்களை விடுவித்துவிட்டு நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளைப்போல கைது செய்தது_ என்பது இந்த அரசின் சர்வாதிகாரப்போக்கின் வெளிப்பாடாகும்.*
*⭐இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⭐தமிழக அரசு _காவல்துறை_ மூலம் நேற்று மேற்கொண்ட _அத்துமீறிய சர்வாதிகார நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில ஜாக்டோ ஜியோ_ மேற்கொண்டுள்ளது.*
*⭐தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் விடுவித்திட வேண்டும். இல்லையேல் தமிழக அரசு அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.*
*சென்னை*
*26.01.2019*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 25 January 2019
*ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் நான்காம் நாளான இன்று (25.01.2019) எழுச்சிமிகு மறியல் போராட்ட புகைப்படத் தொகுப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/25012019.html
*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் நான்காம் நாளான இன்று (25.01.2019) எழுச்சி மிக்க மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரில் நடைபெற்றது.*
*⭐மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் அடைப்பு, மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. சில மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் மண்டபங்களில் இடமின்றி காவல்துறையினர் திணரல்.*
*⭐அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சுமார் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது, அரசு பள்ளிகளும் மூடியுள்ளது...*
*⭐தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரில் நடைபெற்ற மறியல் போராட்ட புகைப்படத் தொகுப்பினை கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*
👇👇👇👇👇👇👇👇
https://tnptfayan.blogspot.com/2019/01/25012019.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)