Thursday, 30 November 2017
*பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_54.html
🌟 *வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் முடிகிறது.*
🌟 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஶ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு தனது அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (30.11.2017) நிறைவடைகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றிய கவிதை:*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_75.html
பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;
தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,
ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ஆசு களைவதில் தட்டுப்பாடு ;
ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும்,
வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்;
தடுக்காவிட்டால் வேலைப்பழி!
தடுத்துவிட்டால் கொலைப்பழி?
கண்டிக்கவும் உரிமையில்லை!
தண்டிக்கவும் உரிமையில்லை!
அழைத்துவா பெற்றோரை,
அறியட்டுமுன் அக்கப்போரை;
இதுதான் ஆசானெடுத்த முடிவு!
இனிமேல் அவருக்குண்டா விடிவு?
'காப்பியடித்ததை' கண்டறிந்தால்
கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்!
'தப்பென' கண்டித்தால்
தற்கொலையால் 'காலன்' பட்டம்!
அழியாத கல்வி கொடுத்தவன்,
அழிகிறானே குற்றம் தடுத்தவன்;
போதிக்கிறவன் பேச்சு,
பேதலித்தே போச்சு;
குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,
எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்;
எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று
எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது!
வேதனையுடன்,
ஓர் ஆசிரியர்
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
x
*ஜாக்டோ ஜியோ செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_77.html
🌟 4.12.17 அன்று நடைபெற இருந்த JACTO GEO உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
🌟 ஜாக்டோ-ஜியோ வழக்கு 8.12.17 அன்று மதுரையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் , நீதிமன்ற முடிவுக்கு எற்ப அடுத்த கட்ட நடவடிக்கையை அன்றய தினம் கூடி தீர்மானிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 4.12.17 அன்று நடைபெற இருந்த உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*வரலாற்றில் இன்று... (30.11.2017)*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/30112017.html
🌟 ஸ்காட்லாந்து தேசிய தினம்.
🌟 1996 - பார்போடஸ் விடுதலை தினம்.
🌟 1858 - இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்.
🌟 1995 - வளைகுடா போர் முடிவுக்கு வந்தது.
🌟 1872 - உலகின் முதலாவது சர்வதேச கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் நடைபெற்றது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 29 November 2017
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f_29.html
🌟 *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலசந்தர், மாநிலப்பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை பின்வருமாறு*
🌟 *தமிழகத்தில் பணிநிரந்தரம் கோரியும் அரசாணை 191-ஐ அமல்படுத்தக் கோரியும் கடந்த 27.11.2017 திங்கள் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அரசு செவிலியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்*
🌟 *மருத்துவத் தேர்வுவாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் வெறும் 7700 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிநிரந்தரம் கோரியும், காலமுறை ஊதியம் வழங்கக் கோரியும் நடத்துகின்ற போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும்*
🌟 *கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் செவிலியர்களின் போராட்டத்தை தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இனியும் அலட்சியப்படுத்துவதை ஏற்கமுடியாது*
🌟 *எனவே, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டுச்சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது*
🌟 *தோழமையுடன்- தோழர். செ.பாலசந்தர்- பொதுச்செயலாளர்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*TIME TABLE*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/time-table.html
🌟 SABL, SALM, ALM முறையிலான வகுப்புகளுக்கு கால அட்டவணை (TIME TABLE).
🌟 *SABL TIME TABLE:*
8.50 - 9.10 - CLEANING,
9.10 - 9.30 - PRAYER,
9.30 - 9.35 - MENDITATION,
9.35 - 12.10 - SUBJECT 1
12.10 - 12.40 - VALUE EDUCATION, YOGA, ETC,
12.40 - 1.15 - LUNCH,
1.15 - 1.45 - DICTATION, TV PROGRAMMES, ACTIVITES, ETC,
1.45 - 3.50 - SUBJECT 2,
3.50 - 4.10 - COMPUTER, GAMES, ETC,
4.10 - CLASS ROOM PRAYER.
FRIDAY 3.10 - 4.10 CULTURALS, 20 MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15 MIN PRAYER.
🌟 *SALM TIME TABLE:*
8.50 - 9.10 - CLEANING,
9.10 - 9.25 - PRAYER,
9.25 - 9.30 - MENDITATION,
9.30 - 11.00 - PERIOD 1
11.00 - 12.30 - PERIOD 2,
12.30 - 12.40 - YOGA,
12.40 - 1.15 - LUNCH,
1.15 - 1.45 - ACTIVITES,
1.45 - 3.15 - PERIOD 3,
3.15 - 4.00 - PERIOD 4,
4.00 - 4.10 - EVENING ACTIVITIES.
FRIDAY 3.10 - 4.10 CULTURALS, 20 MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15 MIN PRAYER.
🌟 *ALM TIME TABLE:*
8.50 - 9.10 - CLEANING,
9.10 - 9.25 - PRAYER,
9.25 - 9.30 - MENDITATION,
9.30 - 11.00 - PERIOD 1
11.00 - 12.30 - PERIOD 2,
12.30 - 12.40 - YOGA,
12.40 - 1.15 - LUNCH,
1.15 - 1.45 - ACTIVITES,
1.45 - 3.15 - PERIOD 3,
3.15 - 4.00 - PERIOD 4,
4.00 - 4.10 - EVENING ACTIVITIES.
FRIDAY 3.10 - 4.10 CULTURALS, 20 MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15 MIN PRAYER.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தேர்தல் - செய்தி துளிகள்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_43.html
🌟 (22-11-17)மாலை நடைபெற்ற நமது TNPTF பேரியக்கத்தின் நாகை மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
🌟 *தலைவர்:*
தோழர் கு.கோ.முருகானந்தம்
🌟 *செயலாளர்:*
தோழர். கோ.இராசாராமன்
🌟 *பொருளாளர்:*
தோழர். சோ.சுரேஷ்
🌟 *மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:*
தோழர். சி.கந்தவேல்
🌟 *துணைத்தலைவர்கள்:*
1.தோழர். சோ.நடராசன்
2.தோழர். த.தமிழரசன்
3.தோழர். அ.ஹேமா
🌟 *துணைச்செயலாளர்கள்:*
1.தோழர் கி்.ருணாநிதி
2.தோழர் கோ.செல்வநாதன்
3.தோழர் மு.வள்ளி
🌟 *செயற்குழு உறுப்பினர்கள்:*
1.தோழர்.கே.என்.செந்தில்குமார்
2.தோழர். சு.தமிழரசி
3.தோழர். க.பாலுசாமி
4.தோழர். வி.தமிழரசன்
5.தோழர். இரா.செல்வகணபதி.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤝தோழமையுடன்;
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*வரலாற்றில் இன்று... (29.11.2017)*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_32.html
🌟 1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
🌟 1993 - இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஜே.ஆர். டி.டாடா இறந்த தினம்.
🌟 1947 - பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐநா பொதுச்சபை முடிவு செய்தது.
🌟 1945 - யுகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
🌟 கலைவாணர் பிறந்த தினம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 28 November 2017
*வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_57.html
🌟 *ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுகளை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது சார்பான செயல்பாடுகள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும்,*
🌟 *ஆசிரியர்களின் பணிப்பதிவேடு காணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.!*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*NHIS முக்கியச் செய்தி...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/nhis.html
🌟 கரூர் ஒன்றியத்தில் இ.ஆசிரியராக பணிபுரியும் திருமதி கவிதா அவர்களின் கணவரின் இருதய அறுவை சிகிச்சை NHIS பாலிசி மூலம் கோவை PSG மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
🌟 *இச்சிகிச்சைக்காக ரூ 1,65,000 மட்டும் NHIS மூலம் பெறப்பட்டுள்ளது. ஆதலால் மீதி தொகையை கட்டி விட்டு டிஸ்சார்ஜ் ஆகுமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது.*
🌟 *நமது இயக்க TNPTF வழிகாட்டுதலின் படி, மருத்துவமனையிலே காத்திருக்கும் படியும், சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்க வேண்டியும் NHIS நிர்வாகத்திடம் விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகணேஷ் மூலம் முறையிடப்பட்டது.*
🌟 *அவ்வளவு தான் என கைவிரித்த NHIS நிர்வாகத்திடம் மேற்கொண்டு ரூ 40,000 பெறப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.*
🌟 *ஆதலால் அன்பான தோழர்களே... எக்காரணத்தை கொண்டும் NHIS வழங்கும் தொகையை ஏற்றுக் கொண்டு வந்துவிட வேண்டாம் எனவும், பணமில்லா 100% சிகிச்சை பெறும் வரை போராட வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌟 *உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட TNPTF மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகணேஷ் அவர்களுக்கும், கரூர் மாவட்ட & வட்டார கிளைக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்...*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
தோழமையுடன்;
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_46.html
🌟 நமது TNPTF பேரியக்கத்தின் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
🌟 தலைவர்:
தோழர். வீ.சிவக்குமார்,
🌟 செயலாளர்:
தோழர். டி.அருள் ஜோதி செல்வன்,
🌟 பொருளாளர்:
தோழர். அ.ஜெ.பீட்டர் ஜெயசீலன்,
🌟 துணைத்தலைவர்கள்:
தோழர். நா.கருப்புசாமி,
தோழர். மு.மணிமேகலை,
தோழர். ஒ.பாண்டி மாதேவி.
🌟 துணைச்செயலாளர்கள்:
தோழர். N.ராமமூத்தி,
தோழர். தி.சுசிலா,
தோழர். ஆனால்.வடிவுகரசி.
🌟 செயற்குழு உறுப்பினர்கள்:
தோழர். சோ.முத்துக்குமார்,
தோழர். மு.ரா.சுரேஷ்,
தோழர். த.இரகுநாதன்,
தோழர். ம.பீட்டர்,
தோழர். அ.அந்தோனி ஜோசப் செல்வன்,
தோழர். மு.சக்திபிரியா,
தோழர். ஆ.அபிராமி.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்களுக்கு TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழமையுடன்;
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்!!!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_86.html
18வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர
வேண்டும் என்றால் இனிமேல் நகராட்சி, மாநாகராட்சி அலுவலங்களுக்கு சென்று கால்கடுக்க நின்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும், எளிதில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ள 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவருக்கும் அவர்களது பிறந்த நாள் அன்று வாழ்த்துக்கள் வருவதுடன் வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் இணைவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். அந்த லிங்க்க்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டால் போதும், உடனே உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைந்துவிடும்
இந்த புதிய முறையால் வாக்காளர் பட்டியலில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_75.html
🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)
⚡ நிதி ஆண்டு 2017-2018,
⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019.
🌟 வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)
⚡ ரூ.250000 வரை - வரி இல்லை,
⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,
⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,
⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.
🌟 படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.
🌟 நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.
🌟 பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.
🌟 மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1NGgS5y_O5VZ78neOmKbWKMku9p20r_wM/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_69.html
🌟 *RTI-புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு வட்டாரக் கிளை நடத்தும், கணினி பயிற்சி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_78.html
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கத்தின் பெருமைக்குரிய ஆசிரியர் தோழர்களுக்கு *வீர வணக்கம்*
🌟 அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் *மாபெரும் கணினி பயிற்ச்சி* நடைபெற இருக்கிறது.
🌟 இடம் : சர்வேயர் ஹால், தாலூகா அலுவலகம் பின்பு
🌟 நாள் : 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை.
🌟 *தலைமை:*
தோழர். ப.சிவக்குமார், வட்டார தலைவர்.
🌟 *வரவேற்புரை:*
தோழர். இரா. மணி, வட்டார செயலாளர்.
🌟 *முன்னிலை:*
தோழர். ஆர். லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன், மாவட்ட தலைவர்.
தோழர். யு.கே.சண்முகம், மாவட்ட செயலாளர்.
தோழர். சாமி.தமிழ்ச்செழியன், மாவட்ட பொருளாளர்.
🌟 *பயிற்சியினை தொடங்கி வைத்து சிறப்புரை:*
மதிப்புமிகு.செ.ரேணுகா தேவி, எம்.ஏ, எம்.எட்.,
*மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்* அவர்கள், ஈரோடு மாவட்டம்.
🌟 *வாழ்த்துரை:*
மதிப்புமிகு. மு.ஜெயக்குமார், எம்.ஏ, பி.எட், எம்.பில்.,
மதிப்புமிகு. கு.கலைச்செல்வி, எம்.ஏ, பி.எட்.,
ஈரோடு வட்டார *AEEO* & *AAEEO* அவர்கள்.
🌟 *பயிற்சி அளிப்பவர்:*
தோழர். செ.பூபதி, MCA, நிர்வாக இயக்குநர் (Microsoft's computer education)
🌟 *நன்றியுரை:*
தோழர். பெ.மோகன்ராஜ், வட்டார பொருளாளர்.
🌟 *ஆசிரியர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்*
🌟 *TNPTF ன் தாரக மந்திரம் மாணவர்கள் நலன், கல்வி நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன்.*
🌟 ஆகவே ஆசிரியர்கள் அனைவரும் *உள்ளண்போடும், உணர்வோடும்* வருகை தந்து பயிற்சியை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கணினி பயிற்சி சிறப்பாக நடைபெற்று தங்கள் பணி மேன்மேலும் வளர TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தேர்தல் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_28.html
நேற்று (27-11-17)மாலை நடைபெற்ற நமது TNPTF பேரியக்கத்தின் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்:
தோழர். க.மனோகரன்*
செயலாளர்:
தோழர். கு.கிருஷ்ணமூர்த்தி
பொருளாளர்:
தோழர். க.ரமேஷ்
மாவட்டப் பிரநிநிதி:
தோழர். எஸ்.மகேஸ்வரி
துணைத்தலைவர்கள்:
1.தோழர். சந்தோஷ்குமார்
2.தோழர். த.வரதராஜன்
3.தோழர். கு.ஈஸ்வரி
துணைச்செயலாளர்கள்:
1.ஜெயமுருகன்
2.செல்லதுரை
3 சாந்த ஷீலாராணி
செயற்குழு உறுப்பினர்கள்:
1.தோழர். பிரசன்னா
2.தோழர். சுரேஷ்
3.தோழர். சக்திவேல்
4.தோழர். முத்துநவீன்
5.தோழர். மு.செந்தில்குமார்
6.தோழர். வடிவு
7.தோழர். மு.பழனிச்சாமி
8.தோழர். விஜயலட்சுமி
9.தோழர். மோகனப்பிரியா
10.தோழர். மோகன்பாபு
11.தோழர். மு.பூபதி
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்களுக்கு TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழமையுடன்;
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*வரலாற்றில் இன்று... (28.11.2017)*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/28112017.html
🌟 1912 - அல்பேனியா விடுதலை தினம்.
🌟 1960 - மவுரித்தேனியா விடுதலை நாள்.
🌟 1939 - கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் இறந்த தினம்.
🌟 1821 - பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
🌟 2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 27 November 2017
*ஆசிரியர் மாணவர் உறவை சீராக்கும் வகையில் பள்ளிகளில் ஆலோசனை மையம் அமைக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_46.html
🌟 தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5771 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், தொடக்கக்கல்வித் துறையின் 31,188 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில் தொடக்கக்கல்வித் துறையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 742 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 473 ஆசிரியர்களும் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 215 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
🌟 சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு சற்று தடுமாற்றத்துடன் செல்கிறது. மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். இதனால் ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் ஏற்பட்டு சில தாகாத நிகழ்வகள் நடந்து விடுகிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மற்றும் அந்நியர்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு மருத்துவர்களை போல பணி பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரக்கோணம் அருகே ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லியதால் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறவை சீராக்கும் வகையில் பள்ளிகள் தோறும் ஆலோசனை மையம் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்தள்ளது.
🌟 இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது
🌟 தமிழ்நாட்டில் பொருளாதரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசு பள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள்ளே சென்று தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறியுள்ளன. மற்றும் சில இடங்களில் நெறி பிறழ் நடத்தையுள்ள மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வருவேற்கும் அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு நேரடி தொடர்பு உள்ளதால் பல தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டிற்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. மாணவர்கள் முன்னேற்றத்தில் தன்னலம் கருதாமல் பாடுபடும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு மதிக்கப்பட்ட நிலை இன்று மாறி வருகிறது. தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளை கூட நல்வழி படுத்த ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். ஒரு பக்கம் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார்படுத்த கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறு பக்கம் மாணவர்ளின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேருகிறது. ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து அதை சீராக்க கல்வித்துறை முன் வர வேண்டும். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் நடக்கும் வேண்டத்தகாத சச்சரவுகளால் ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் நிலவி வருகிறது.
🌟 இதை போக்குவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். விளையாடுவதன் மூலம் வகுப்பறை அழுத்தத்திலிருந்து விடுபட முடிகிறது. வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல் வாய்ந்த வலிமையான சமுதாயமாக மாற்றுவதற்கான ஒத்துழைப்பை ஆசிரியர்கள் தருவதற்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக தமிழக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணி பாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
🌟 முகநூல் தகவல் பகிர்வு:
தோழர். முத்துப்பாண்டி,
மாவட்ட செயலாளர்,
சிவகங்கை மாவட்டம்.
நன்றி தோழர்!
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*COMPUTER SHORTCUT KEYS*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/computer-shortcut-keys.html
🌟 கணினியில் வேலை செய்யும் போது எளிமையான மற்றும் விரைவான முறையில் பயன்படுத்த குறுக்குவழி விசைகள் - jpg மற்றும் PDF கோப்புகளில்,
https://drive.google.com/file/d/17pzFCQzOyL-Fx-ApsE1JrnhwPms7p1kO/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தகவல் அறியும் உரிமைச் சட்டம் - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களின் (பொறுப்பு) பணிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_98.html
🌟 தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்கம் பொது தகவல் அலுவலர் அளித்துள்ள தகவல்கள்.
🌟 எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL) அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும். இது செயல்படுத்தப்படவில்லை எனில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.
🌟 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களின் (பொறுப்பு) பணிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*GENUINENESS - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/genuineness.html
🌟 உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*லஞ்ச ஒழிப்புத் துறை முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_55.html
🌟 லஞ்ச ஒழிப்புத் துறை
HEAD QUARTERS
CENTRAL RANGE
WEBSTERN RANGE
SOUTHERN RANGE
SPECIAL INVESTIGATIONS CELL
🌟 மேற்குறிப்பிட்டப்பட்ட எல்லைக்குட்பட்ட அலுவலகங்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1O-IfYnrh0P7nxVv_4ybO8tOBD767H6W4/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*Work done register/பணிசெய் பதிவேடு படிவம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/work-done-register.html
🌟 *Work done register/பணிசெய் பதிவேடு - இதில்*
1.வரிசை எண்
2.தேதி
3.வகுப்பு
4.பாடவேளை
5.பாடம்
6.பாடத்தலைப்பு
7.கற்றல் உபகரணங்கள்
8.குறிப்பு (அன்றைய தியானம்,12.மதியம் 1.30 வரையிலான செயல்பாடுகள்)
9.ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமைஆசிரியர் கையொப்பம் ஆகியவை இடம்பெற வேண்டும்.*
https://drive.google.com/file/d/1EvLVJ3BipIsjY9o5gwJWYKHi7ylOrymk/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_72.html
🌟 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் விடுப்பிலோ அல்லது பள்ளி சம்பந்தமான பணிகளுக்கோ வெளியில் செல்லும் போது பள்ளியின் பொறுப்புகளை மூத்த பட்டதாரி ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் எனவும்,
🌟 மூத்த பட்டதாரி ஆசிரியர் மீது நம்பகத்தன்மை இல்லாத பட்சத்தில் அடுத்துள்ள பணியில் மூத்த ஆசிரியரிடம் கொடுக்கலாம், மேலும் நம்பகத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் தகவல் அளிக்கும் அலுவலரின் செயல்முறை கடிதத்தில் கூறியுள்ளார்கள்.
⚡ 2012 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*வரலாற்றில் இன்று... (27.11.2017)*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-1940.html
🌟 1940 - தற்காப்புக் கலை நிபுணரும், நடிகருமான புரூஸ் லீ பிறந்த தினம்.
🌟 2008 - இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம்.
🌟 1815 - போலந்து அரசியலமைப்பு சட்டம் பெறப்பட்டது.
🌟 1901 - அமெரிக்க ராணுவ போர் கல்லூரி துவங்கப்பட்டது.
🌟 2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக் கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 26 November 2017
*என்ன தான் செய்கிறார்கள் ஆசிரியர்கள்?*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_88.html
🌟 *உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த ஆசிரியர்கள்?*
🌟 பொதுவான பார்வையில் ஆசிரியர்கள் என்றால் அதிக சம்பளம் வாங்குபவர்கள், வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...
🌟 உண்மை நிலை என்பதும் இது தானா? வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...
🌟 பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
🌟 ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...
🌟 பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.
🌟 வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்து கொள்கின்றனர்.
🌟 இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.
🌟 வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
🌟 குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.
🌟 இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.
🌟 சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.
🌟 அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.
🌟 பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.
🌟 வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
🌟 சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
🌟 ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
🌟 ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
🌟 தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !
🌟 இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும். இது இடத்திற்கு இடம் மாறுபடும்.
🌟 அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.
🌟 வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.
🌟 சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.
🌟 இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.
🌟 காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
🌟 உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !
🌟 நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும் போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.
🌟 சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.
🌟 மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!
🌟 இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.
🌟 இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.
🌟 ''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !
🌟 வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.
🌟 மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.
🌟 இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...
🌟 பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
🌟 ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.
🌟 மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)