Friday, 30 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆணை எரிப்புப் போராட்டமும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_30.html
*பொதுச்செயலாளரின் அறிக்கை நாள் : 30.11.2018*
*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்பதற்கான அரசாணை எரிப்புப் போராட்டம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல களப் போராட்டங்களை தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் அப்போராட்டங்களையும், நம் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாத தமிழக அரசும், கல்வித்துறையும் 26.11.2018-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையாகும்.*
*⭐போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை பாய்ச்சல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எப்போதும் ஆமை வேகத்தில் செயல்படும் சில கல்வித்துறை அலுவலர்கள் கூட இப்பணியில் முயல் வேகத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய முன் விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளும் பணியிலும் சில கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.*
*⭐அரசாணை எரிப்புப் போராட்டத்திற்குச் செல்லும்போதே _“சிறையிலடைக்கப்படுவோம்; தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவோம்”_ என்பதையெல்லாம் எதிர்பார்த்தே களத்திற்குச் சென்றவர்கள் நாம். தற்போது கல்வித்துறை எடுக்கும் நடவடிக்கை என்பது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்கான உரிமைப்போரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்லாயிரக்கணக்கான களப்போராளிகள் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) வைச் சந்தித்தார்கள்” என்ற வரலாற்றையும் பதிவு செய்யப்போகிறது.*
*⭐ _“போராட்டம் என்பது உரிமைகளைப் பெறுவதற்கானஆயுதம் மட்டுமல்ல; பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஆயுதமும் தான்”_ என்பதைத் தொடர்புடையவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, எதை எவ்வாறு எப்போது எதிர்கொள்ள வேண்டுமோ அதை அவ்வாறு அப்போது எதிர்கொள்வோம்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/cps-13000-200.html
*⭐தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.*
*⭐ இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.*
*⭐இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.*
*⭐தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.*
*⭐அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த _CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது._*
*⭐தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் _அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்._*
*⭐மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான _ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்._*
*⭐இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் _அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்._*
*⭐எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு _பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்_*
*⭐தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.*
*தகவல் பகிர்வு;*
*_TNPTF விழுதுகள்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 27 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_27.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 22 நாள் : 27.11.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நம் பேரியக்கம் நேற்று நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சூழல் கருதி நாம் களம் காணவில்லை.*
*⭐ _“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைஇ எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”_*
*என்ற பாடல் வரிகளுக்கேற்ப தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போர்க்கோலம் பூண்டு நம் இயக்கத் தோழர்கள் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துவிட்டது. போராட்டக்களத்திற்கு வருகை தந்த அனைவருமே சிறைச்சாலைக்குச் செல்லும் ஏற்பாடுகளோடு வந்தது என்பதும், காவல்துறையின் கடும் அச்சுறுத்தல்களையும் மீறி களத்திற்கு வந்தது என்பதும், வருடத்தின் இறுதிநாட்கள் என்ற நிலையில் தற்செயல் விடுப்பு இல்லாத நிலையில் ஈட்டிய விடுப்பெடுத்து போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும், வேலைநாளில் துணிச்சலாகப் போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலிமையையும், இயக்க உறுப்பினர்களின் போர்க்குணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.*
*⭐பாதி மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவே இல்லை. மீதி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்தை தொட்டது என்பதும்,*
*_“கைது செய்யப்படுவோம்இ சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவோம்”_*
*என்று தெரிந்தும் 20000-க்கும் மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் போராட்டக்களத்திற்கு வந்ததும் மிகவும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். புறநானூற்று வீரமங்கைகளாகப் போராட்டக்களத்திற்கு வருகை தந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.*
*⭐இக்களப்போரில் தங்களையும் இணைத்துக்கொண்டு பல மாவட்டங்களில் போராட்டத்தில் பங்கேற்ற நம் சகோதர அமைப்புகளான தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்(TIAS), (JSR) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)ஆகியவற்றின் பெருமைக்குரிய தோழர்களுக்கு மாநில மையம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⭐அதேவேளையில் நம் போராட்டத்தின் எழுச்சிகண்டு பொறுக்க முடியாத சில சங்கத்தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்களைப் பற்றி நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. போராட்டங்களைக் கைவிடுவதற்கு காரணம் தேடுபவர்களுக்கு இன்றைய சூழல் வாய்ப்பாக அமைந்துள்ளது.*
*_“உரிமை பறிக்கப்படுகிற போதும், தன்மானம் பாதிக்கப்படுகிறபோதும் இழவு வீட்டில் கூட போராடலாம். ஆனால் இழவு வீட்டில் பிடுங்கித்தான் திண்ணக்கூடாது”_* *என்பதை நாம் சிலருக்குஉணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பப்பட்டுவிட்டது. சாக்குப்போக்குச் சொல்லித் தானும் போராடாமல், போராடுபவர்களையும் கொச்சைப்படுத்தும் இவர்களை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.*
*⭐நேற்றைய (26.11.2018) போராட்டக்களத்தில் தீரத்துடன் பங்கேற்ற நம் இயக்கத் தோழர்களே! அடுத்து நாம் ஈரத்தோடு கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு உதவிடும் பணியை முழு மூச்சில் செய்யவேண்டியுள்ளது. ஏற்கனவேஇ பல மாவட்டங்களிலிருந்து வட்டாரக்கிளைகளே நேரடியாக அங்குள்ள நம் இயக்கத் தோழர்கள் மூலமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர்.*
*⭐மாநில மையம் விடுத்த வேண்டுகோளின்படி மாவட்டக்கிளைகள் இதுவரை உதவிநிதியை மாநில மையத்தில் ஒப்படைக்காமல் இருந்தால் உடனடியாக ஒப்படைத்து உதவிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 25 November 2018
*ஆணை எரிப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் சில முக்கிய வழிகாட்டுதல்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_25.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 21 நாள் : 25.11.2018*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*_அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்!_*
*⭐வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன.*
*“இவ்வுலகில் ஒரு குறிக்கோளை அடையவேண்டுமென்று ஒருவன் முடிவெடுத்து விட்டால் இவ்வுலகில் உள்ள யாராலும் அதைத் தடுத்து நிறுத்திட முடியாது”*
*என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கேற்ப நம்முடைய களப்பணிகள் மாநிலத்தின் மூலை முடுக்களிலெல்லாம் நேர்த்தியோடும், தீர்மானித்த இலக்கை நோக்கியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.*
*⭐1985இ 1988 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு ஊதியம்கோரி ஜேக்டீ மற்றும் அரசு ஊழியர் பேரமைப்புகளின் சார்பில் ஆணை எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டபோது நம் முன்னோர்கள் போர்க்குணத்தோடு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோரிக்கையை வென்றெடுத்த வரலாறு நடந்தது. அவ்வாறு போராட்டக்களம் கண்டவர்கள் அதன் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*⭐அவ்வழியில் இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்படுத்தித் தந்துள்ள துணிச்சலான இந்த போர்க்களத்தை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் பயன்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்கும் களப்போரில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது. நாளைய போராட்டக்களத்தை வடிவமைப்பதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் கீழ்க்கண்டவாறு செயல்பட மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.*
*⭐ஆணை எரிப்புப் போராட்டத்தில் நம்மோடு இணைந்துள்ள நம் சகோதரச் சங்கங்களான JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) ஆகிய இயக்கங்களின் தோழர்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.*
*⭐போராட்டக்களத்தில் வாழ்த்துரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் STFI இணைப்புச் சங்கங்கள் உள்ளிட்ட நம் தோழமைச்சங்கப் பொறுப்பாளர்களை அழைத்துக் கொள்ள வேண்டும். போராட்டக் களத்தில் போராட்டத்தை விவரிக்கும் பேனர் ஒன்றை தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.*
*⭐நம் பேரியக்கத்தின் வண்ண மணிக்கொடிகளை ஏந்தி இயக்க உறுப்பினர்கள் களத்தில் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.*
*⭐ஏற்கனவே மாநில மையத்தால் வழங்கப்பட்டுள்ள அரசாணைகளின் நகல்களை முன்கூட்டியே போராளிகளுக்கு வழங்கிட வேண்டும்.*
*⭐போராட்டக்களத்தில் எவ்வித வன்முறைச் சம்பவங்களுக்கும் அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடாமல், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கேயுரிய தனித்தன்மையோடும், இலக்கணத்தோடும் போராட்டக்களம் காணவேண்டும்.*
*⭐மேற்கண்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து எவ்விதக் கவனச் சிதறல்களுமின்றி போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மாநில மையம் நம் இயக்கப் பொறுப்பாளர்களையும், பேரியக்க உறுப்பினர்களையும் தோழமையுடன் வேண்டுகிறது.*
*_“ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்துக்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, தேவைக்கு உதவாத பணம் உரிமைக்குக் களம் காணாத சங்கம் இருந்தும் பயன் இல்லை”_*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 23 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அரசாணை எரிப்புப் போராட்டம்-பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_23.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 20 நாள் : 23.11.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெற உள்ள வரலாற்று நிகழ்வான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தை களத்திலே நிகழ்த்துவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளன. மாநிலம் முழுவதும் நம் இயக்கத்தின் வட்டார, நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்களும், முன்னணித் தோழர்களும் இரவு, பகல் பாராது களநிகழ்வை நோக்கி கண்துஞ்சாது களத்திலே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.*
*_“26.11.2018 அன்று அரசாணைகளை எரிக்கப்போவது தீக்குச்சியிலிருந்து எழும் நெருப்பல்ல; தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் கோப நெருப்பு”_*
*பத்தாண்டுகால அநீதிக்கு எதிரான உச்சகட்ட நிகழ்வே அரசாணை எரிப்புப் போராட்டம். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நாம் திட்டமிட்டு தமிழகம் முழுவதும் வட்டார அளவில், மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் கள ஆயத்தங்கள் செய்து இன்று போராட்டக்களத்தை நெருங்கியிருக்கிறோம்.*
*⭐எதிர்பாராமல் வந்த கஜா புயல் தமிழக மக்களுக்கு சொல்லொணாத் துயரை அளித்து விட்டுப் போயிருக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள நம் சகோதரர்களுக்கு உதவி செய்வது நம் தலையாய கடமை என்பதை உணர்ந்து நம் இயக்கத் தோழர்கள் மாநிலம் முழுவதும் உதவி நிதி திரட்டுகிற பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*
*⭐பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நம் இயக்கத் தோழர்களின் உதவிப் பணிகள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வீரமிக்க இயக்கம் மட்டுமல்லஇ ஈரமிக்க இயக்கம் என்பதையும் நிரூபிப்பதாக உள்ளது.*
*⭐இச்சூழலில் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றிலே 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிச்சங்க நடவடிக்கையாக நம் பேரியக்கம் நடத்துகிற ஆணை எரிப்புப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற நம் சகோதர சங்கங்களின் முயற்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.*
*_“களத்திற்கு வாருங்கள்; இப்போராட்டத்தை இணைந்தே நடத்துவோம்”_*
*என்று நாம் அழைத்தபோதும் அதையும் ஏற்காத நம் சகோதரர்களின் உள்ளக்கிடக்கையை நம்மால் உணர முடிகிறது. வெற்றுக் கூச்சல்கள் நம் கவனத்தைச் சிதறடித்து விடக்கூடாது என்பதில் நம் தோழர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.*
*_“பந்தயக்குதிரை ஓடும்போது ஓடுதளம் அருகிலுள்ள புல்லையோ கொள்ளையோ பார்ப்பதில்லை, ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது”_*
*என்பதை நம் தோழர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. எனவே, எழுகின்ற அத்தனை தடைகளுக்கும் விடை கூறுகிற நாளாக நவம்பர் 26 அமைந்திட வேண்டும்.*
*⭐எவரையும் நம்பி நாம் களத்திலே நிற்கவில்லை. நாம் பயணிக்கும் களத்தின் மீதும் நம் பலத்தின் மீதும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.*
*_“நம்பிக்கை நிறைந்த ஒருவன் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவது இல்லை”_*
*என்ற டாக்டர் _அப்துல்கலாமின்_ வரிகளுக்கேற்ப நாம் களத்தில் நிற்கிறோம்.*
*⭐நவம்பர் 26-ல் நடப்பது சாதாரணப் போராட்டமல்ல. அது ஒரு நவம்பர் புரட்சி. பூங்கொத்துகளைக் கொண்டே புரட்சி செய்துவிட முடியும் என்று நம்புகிறவர்களல்ல நாம். உலக வரலாற்றில் போராட்டக்களங்களில் நிகழ்ந்த சேதாரங்களே வரலாற்று ஆதாரங்களாக அணி சேர்த்துக் கொண்டிருக்கின்றன என நம்புபவர்கள் நாம்.*
*_“ தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்”_*
*என்றான் புரட்சியாளன் _பிடல் காஸ்ட்டிரோ._*
*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் தடம் பதிக்கிற போராட்டம் தான் நவம்பர் 26. தடம் பதிக்கிற இப்போராட்டத்தில் புடம்போட்ட தங்கங்களாய் நம் இயக்க தோழர்கள் பங்கேற்க வேண்டும். தங்கத்தை அனலில் இட்டாலும், தனலில் இட்டாலும், புனலில் இட்டாலும் மணலில் இட்டாலும் அதன் தன்மை மாறாது. எத்தனை எத்தனை இழப்புகள் வந்தாலும் நம் இயக்க தோழர்களின் போர்க்குணமும், பொதுநல நோக்கும் மாறாவே மாறாது.*
*⭐நம் ஆணை எரிப்புப் போராட்டம் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளில் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கையை தனிக் கோரிக்கையாகப் பட்டியலிட வைத்தது. இன்று ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளில் அது இரண்டாவது கோரிக்கையாக எழுந்து நிற்கிறது.*
*⭐ஒரு நபர்க் குழுவே இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனையை தீர்த்துவிடும் என்று நம்பிய நம் சகோதரர்கள் கூட இன்று களம் கண்டாலே நலம் காணமுடியும்இ பலன் காண முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஒவ்வொரு இயக்கமும் தன் இயல்பிற்கேற்ப போராட்டக் களங்களை அமைப்பது இயல்பு. எனவே, போராட்டங்களை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. எத்தகு நிலையில் எத்தகு வடிவில் போராடினாலும் உரிமை மீட்புப் போராட்டங்களை நாம் வரவேற்போம்.*
*⭐எனவே, இருக்கின்ற இரண்டு தினங்களிலும் நம் இயக்கத் தோழர்கள் இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்ற வேண்டும்.*
*⭐02.08.1984ல் தோன்றிய நம் பேரியக்கம் கடந்த 34 ஆண்டுகளில் எத்தனையோ களப் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது.*
*⭐களம் நமக்குப் புதிதல்ல, இருப்பினும், 26.11.2018 என்பது நம் இயக்க வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை எட்டுகிற நாள். நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் களத்திற்கு கொண்டுவரும் கடமையைக் கண்துஞ்சாது ஆற்றிட நம் பேரியக்கத் தோழர்களை மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
*“ நல்ல குறிக்கோளை அடைவதற்காகதொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது”*
*- மாமேதை* *_காரல் மார்க்ஸ்_*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 20 November 2018
*கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் நிதியுதவி சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/50.html
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் _தோழர்.தாமஸ் அமலநாதன்_ தலைமையில் நடந்தது.*
*மாநிலத்துணை தலைவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*
*மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர்.*
*மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.*
*மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_ மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஆரோக்கியராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஞான அற்புதராஜ்,_ மாவட்ட துணைச் செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்,_ _தோழர்.ஜீவா ஆனந்தி,_ மாவட்டத் துணைத்தலைவர் _தோழர்.மாலா,_ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
*_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._*
*⭐தமிழ்நாட்டில் கஜா புயலால் நாகபட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு வாழும் மக்கள் அடிப்படை வசதியின்றி அவதியுறுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு உடனடியாக மாநிலத் துணைத்தலைவரிடம் 50 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது.*
*⭐இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியம் மீட்பிற்காக நவம்பர் 26 அன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறும் ஊதியக்குழு அரசாணை எரிப்புப் போராட்டத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது எனவும்,*
*⭐பள்ளி வளாகத்திற்குள் உள்ள மரங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் கஜா புயலால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்,*
*⭐7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்தத்தில் கூட்டணியின் சார்பில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது,*
*⭐மாவட்ட கல்வி அலுவலகங்களில் தேங்கியுள்ள தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணிவரன்முறை மற்றும் முன் அனுமதி கோப்புகளை விரைந்து முடிக்க நடடிவக்கை எடுக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கி உதவிடக் கோரி தோழர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 19 நாள் : 20.11.2018*
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_20.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐கஜா புயலின் மிகக்கடுமையான தாக்குதலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கோரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குடிக்க நீரின்றி, தங்க வீடின்றி தவித்து வருகின்ற செய்திகள் எவரையும் நிலைகுலையச் செய்துவிடக் கூடியவை.*
*⭐பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஜந்து நாட்களாக மின்சாரம் இல்லைஇ குடிநீர் இல்லை. இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நுhற்றுக்கணக்கான பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். அனைத்தையும் இழந்து செய்வதறியாது திகைத்துவரும் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை விரைந்து செய்திட வேண்டும்.*
*⭐தமிழக அரசின் நிவாரண உதவிகள் மக்களுக்குப் போதுமான அளவில் இல்லை. தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் இன்னும் மக்களைச் சென்றடைவில்லை. மத்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் அறிவிக்காதது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.*
*⭐கஜா புயலின் பாதிப்பை “அதி தீவிரப் பேரிடர்” என்று அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மின்னல் வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⭐இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இக்கட்டான இச்சூழலில் தனது உதவிக்கரத்தை நீட்டுவது மிகமிக அவசியமானது.*
*⭐எனவே நம் பேரியக்கத்தின் வட்டாரஇ நகரக் கிளைகள் இணையற்ற உதவும் உள்ளம் கொண்ட நம் இயக்க உறுப்பினர்களிடமும், நேச நெஞ்சம் கொண்ட ஆசிரியப் பெருமக்களிடமும் உதவிநிதி பெற்று மாவட்டக்கிளைகள் மூலம் மாநில அமைப்பிற்கு 23.11.2018 வெள்ளிக்கிழமைக்குள் ஒப்படைத்து உதவிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 18 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 17.11.2018 மாநில செயற்குழு தீர்மானங்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/17112018.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 17.11.2018 சனிக்கிழமை தேனியில் மாநில தலைவர் தோழர். மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.*
*_தீர்மானம் : 1_*
*⭐கஜா புயலில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.சக்திவேல் அவர்களின் தந்தையார், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றிய நமது இயக்க உறுப்பினர் திருமதி.சவரியம்மாள் ஆகியோர் மறைவிற்கு இம்மாநிலச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*_தீர்மானம் : 2_*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் நடத்தத் திட்டமிட்டுள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தை பேரெழுச்சியோடு நடத்திடவும், அப்போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்கேற்கச் செய்திடும் வகையில் மாநில, மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் பொறுப்பாளர்களும், இயக்கத்தின் முன்னணித் தோழர்களும் களப்பணியாற்றிடவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 3_*
*⭐7 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 04.12.2018 முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நமது இயக்கக் உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்திடும் வகையில் இமைப்பொழுதும் சோராது களைப்பணியாற்றிட மாநில, மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் பொறுப்பாளர்களை இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 4_*
*⭐அகில இந்தியப் பெண்ணாசிரியர் மாநாடு மற்றும் போராட்ட நிதி நிலுவைஇ 2018-19 இயக்க உறுப்பினர் சேர்க்கை முடித்து பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் பங்கீட்டுத்தொகை செலுத்துதல் ஆகிய பணிகளை மாவட்டக்கிளைகள் விரைந்து செயல்படுத்திட இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 5_*
*⭐2019 இயக்க நாட்காட்டி, நாட்குறிப்பு, அரசாணைப் புத்தகம் ஆகியவற்றை விரைந்து இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கும் வகையில் மாவட்ட, வட்டார, நகரக்கிளைப் பொறுப்பாளர்களின் முகவரிப் பட்டியலை மாவட்டக்கிளைகள் மாநில மையத்திற்கு விரைந்து அனுப்பிட இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் : 6_*
*⭐சமூக வலைதலங்களைப் பயன்படுத்துவதில் இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடனும்இ ஆழ்ந்த நுணுக்கத்துடனும், கண்ணியத்துடனும் செயல்பட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் : 7_*
*⭐சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தோலுரித்துக்காட்டும் வகையிலும்இ பெண்ணுரிமைக்கு எதிரான பிற்போக்குத்தனத்தை முறியடிக்கும் வகையிலும் 80ரூ பெண் ஆசிரியர்களை கொண்டுள்ள நமது இயக்கத்தின் சார்பில் ரூ 10-விலையில் பிரசுரம் ஒன்றை வெளியிட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Thursday, 15 November 2018
*இனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_15.html
*⭐மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.*
*⭐பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.*
*⭐பணப்பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக மட்டத்திலே சீர் செய்துவிடலாம்.*
*⭐இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதி தீர்வாகிவிட்டது.*
*⭐தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.*
*⭐இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.*
*⭐பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது,*
*⭐ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.*
*⭐இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாதந்தோறும் முதல், சனிக்கிழமை, குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.*
*⭐இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து, இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.*
*⭐விண்ணப்பங்கள் இல்லாவிடிலும், தகவல் அளிப்பது அவசியம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/cps-rti.html
*⭐CPS வல்லுநர் குழு GO.No.51 /15.2.18ன் படி 31.03 2018 வரை நீட்டிக்கப்பட்டது.*
*⭐அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. கால நீட்டிப்பு அரசாணையும் இன்று வரை வெளியிடவில்லை.*
*⭐CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.*
*⭐அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.*
*⭐மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.*
*⭐CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.*
*_CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்_*
*⚡CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 13 November 2018
திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_13.html
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் தேர்தல் பணி சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை_ சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.*
இச்சந்திப்பில்,
*⚡மாநில செயலாளர் _தோழர்.சோ.முருகேசன்,_*
*⚡மாவட்ட செயலாளர் _தோழர்.செ.பால்ராஜ்,_*
*⚡மானூர் வட்டார செயலாளர் _தோழர். அண்ணாத்துரை,_*
*⚡மேலநீலித நல்லூர் வட்டார செயலாளர் _தோழர். நெல்லையப்பன்,_*
*⚡மானூர் வட்டார துணைத்தலைவர் _தோழர். சீனிவாசன்_* *உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.*
*கோரிக்கை மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*
*⭐ஆட்சியர் சந்திப்பின் போது நமது கோரிக்கைகளை கவனமாக கேட்டார்கள் பின்னர்,*
*⭐தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதாகவும்,*
*⭐ _உரிய மருத்துவ காரணங்கள் இருப்பவர்கள் உரிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றினை இணைத்து_ கொடுக்கும்படி கூறினார்கள்.*
*⭐மாவட்ட ஆட்சியருடன் உண்டான _இச்சந்திப்பு திருப்திகரமாகவும்,நம்பிக்கை ஊட்டும் விதத்திலும்_ அமைந்திருந்தது.*
*⚡தோழமையுடன்;*
*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*திருநெல்வேலி*.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*சிறைக்களம் செல்லத்துடிக்கும் TNPTF செயல் வீரர்களே*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf_13.html
*_தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்._*
*⭐தமிழ்நாட்டில் சமூக நலன் காப்பதில் முன் ஏராக நின்று களப்பணியாற்றுவதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றும் சளைத்ததல்ல. அதே வேளையில் ஆசிரியர் நலன், மாணவர் நலன் காப்பதிலும் தவறியதில்லை. நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக, அச்சாணியாக செயலாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய இன்று வரை களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு நாம்தான். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அசையாத அரசை அசைய வைக்கும் போராட்டமான _அரசாணை எரிப்புப் போராட்டத்தை நவம்பர் 26ல் நாம் நடத்த முடிவாற்றியுள்ளோம்._*
*⭐சேதாரமில்லாமல் ஆதாயம் தேடும் சில நயவஞ்சகர்கள், போராட்டம் என்ன என்பதே அறியாத சில போலிகள், _கல்வி அலுவலகங்களில் இடைத்தரகர்களாக பணியாற்றி அதிகார வர்க்கத்தினருக்கு வாலாட்டும் சில அரசாங்க விசுவாசிகள்_ நமது போராட்டத்தை விளம்பர யுக்தி என்று வசை பாடுகிறார்கள். உதித்தது முதல் இன்று வரை எண்ணற்ற போராட்டங்களை எவ்வித சமரசத்திற்குமிடமில்லாமல் நடத்தி வெற்றி கண்டவர்கள் நாம். _நமது இயக்க உறுப்பினர்களின் உறுதி மிக்க போர்க்குணமும், நேர்மையான பணிக்கலாச்சாரமும்_ சில நயவஞ்சகர்களை நெஞ்செரிய செய்துள்ளது. நம்மை விமர்சிப்பவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல் களப்பணி ஆற்றுவதில் கவனம் செலுத்துவோம். துரோகிகளின் நயவஞ்சக கொடுஞ்செயல்கள் தான் நமது வளர்ச்சிக்கு உரமிட்டது. அவர்களது _விமர்சனம்தான் நம்மை விருட்சமாக்கியது_. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற விருட்சம் தனது வேர்களை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் படர விட்டுள்ளது. உறுப்பினர்களின் தியாகங்களால் சாய்க்க முடியாத அசுர பலத்தோடு ஆசிரியர்கள் மத்தியில் நிற்கிறது. _நேர்மை தவறும் அதிகார வர்க்கம் நம்மை கண்டு அஞ்சுகிறது._*
*⭐எவ்விடத்திலும் சமரசமில்லாமல் இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழக கல்வித்துறையின் நித்திரையை கலங்கடித்துள்ளது. போராட்டம் நமக்கு புதிதல்ல. போர்க்களமும் நமக்கு தூரமில்லை. தூங்கியவர்களையெல்லாம் துயில் எழச்செய்யும் பேராட்டமாக இது அமைந்துள்ளது. பாசாங்கு வேலையெல்லாம் இனி பலிக்காது என்பதை உணர்த்துவோம். சிறை நிரப்பும் இனிய நாளை எதிர்கொள்வோம்.*
*⭐ _கொள்கையில் மாறு பட்டாலும் நமது போராட்ட உணர்வை வாழ்த்தும் பல சகோதர சங்கங்களுக்கு இடையில்_ ஒற்றுமையை சீர் குலைப்பதில் கைதேர்ந்த சில பச்சோந்திகள் பல வண்ணங்களில் பம்மாத்து காட்டுகின்றன.*
*⭐விமர்சனங்களில்தான் நாம் இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளோம். _சிவகங்கை மாவட்டத்தில் 2000க்கும் அதிகமான உறுப்பினர்களையும், மாநில அளவில் 50 ஆயிரத்திற்கு_*மேற்பட்ட கள போராளிகளையும் கொண்ட நமது இயக்கத்தில் 60 சதவீதம் பேர் 40 வயதிற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் என்பதில் பெருமை கொள்வோம்.*
*⭐ _ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே ஒரு பெண் தலைமையை ஏற்ற இயக்கம் நாம் மட்டுமே என்பதில் இருந்து பெண்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்._*
*⭐ _இடைநிலை ஆசிரியர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்திய நாம் இன்று அரசாங்கத்தின் ஆணையையே எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். காவல் துறையின் கழுகு பார்வையை புறம் தள்ளி சென்னை இயக்குனர் அலுவலக முற்றுகையை_*எப்படி செய்து காட்டினோமோ அதை விட பல ராஜதந்திர நுணுக்கங்களுடன் நவம்பர் 26 போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். பொது கோரிக்கைகளுக்கு ஒன்று பட்ட ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து களம் காண கால தாமதம் ஆகும் நிலையில் ஒற்றை கோரிக்கைக்கு முழு மூச்சுடன் களம் காண உள்ளோம். எப்படி போராட்டத்தை நடத்துவது, ஆசிரியர் சந்திப்பை எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட போராட்ட கள தந்திரங்களை ஆலோசிப்பதற்காக,*
*⭐இன்று (13.11.2018) மாலை 5.30 மணிக்கு சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்த உள்ளோம். இக்கூட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். வருகிற 26.11.2018 அன்று காலை 10.30 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறும் அரசாணை எரிப்புப் போராட்டத்திலும் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுகிறோம்.*
*_“களப்போராட்டங்களில் பத்துமுறை தோற்றுவிட்டோம் என்று துவண்டுவிடாதே! பத்துமுறை தோற்றாலும் பதினோறாவது முறையும் போராட எழுந்து நிற்கிறோம் என்று எழுச்சிகொள்!”_*
*- மாமேதை லெனின்.*
*போராட்ட உணர்வுடன்...*
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*TNPTF*
*சிவகங்கை மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)