*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் போராட்டங்களும் 5, 8 வகுப்புப் பொதுத்தேர்வு ரத்தும் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 02/2020 நாள்: 04.02.2020_
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡5, 8 வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து இன்று (04.02.2020) தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*
*⚔*
*🛡5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அரசாணை (நிலை) எண்: 164 (பள்ளிக்கல்வி (MS)த் துறை) நாள்: 13.09.2019 வெளியிட்ட நாளிலிருந்து அதை எதிர்த்து தொடர் களப் போராட்டங்களை நடத்திய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*⚔*
*🛡தமிழ்நாட்டின் கல்வி நலனுக்கும், மாணவர் நலனுக்கும் எதிரான இந்த அரசாணையைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆறு முனைகளிலிருந்து 25.09.2019 முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் பிரச்சாரப் பயணத்தை நடத்தி அதன் நிறைவாக கரூர் நகரில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்திய இயக்கம்.*
*⚔*
*🛡மாநிலம் முழுவதும் 14000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற இப்பிரச்சாரப் பயணத்தில் 229 இடங்களில் தெருமுனைப் பிராச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான மக்களிடம் நம் கோரிக்கையை எடுத்துச்சென்றோம்.*
*⚔*
*🛡தனியொரு ஆசிரியர் இயக்கமாக நாம் நடத்திய இப்பிரச்சார இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது.*
*⚔*
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் ஆசிரியர்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணத்தை நடத்தினோம். அதன் நிறைவாக 05.12.2019 அன்று அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் முறையீடு நடத்தி ஒவ்வொரு வட்டாரத்தின் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தோம். மாநிலம் முழுவதும் 313 வட்டாரக்கிளைகளில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீட்டில் 15000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.*
*⚔*
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 11.01.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 10000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.*
*⚔*
*🛡அதன் தொடர்ச்சியாக கடந்த 01.02.2020 அன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து 5, 8 வகுப்புப் பொதுத் தேர்வினால் ஏற்படும் எதிர்கால பாதிப்புக்களை விரிவாக எடுத்துரைத்து விண்ணப்பம் அளித்தோம்.*
*⚔*
*🛡அதனைத் தொடர்ந்து நேற்று (03.02.2020) பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறையின் உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து 5, 8 வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.*
*⚔*
*🛡மேலும், இது தொடர்பாக அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலதாமதமான அறிவிப்பாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.*
*⚔*
*🛡நம்மைப் போன்றே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.*
*⚔*
*🛡5, 8 வகுப்புப் பொதுத்தேர்வைக் கைவிட வலியுறுத்தி நாளை (05.02.2020) அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் முற்றுகை போராட்டமும் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.*
_உறுதியான களப்போராட்டங்களும் நியாயமான கோரிக்கைகளும் நிச்சயம் வெல்லும் என்பதற்கு 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பே சான்றாகும்._
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм