Tuesday, 30 October 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு அரசாணை எரிப்புப் போராட்ட வால்போஸ்டர் அனுப்பிய விபரம் குறித்து பொதுச்செயலாளர் தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_84.html



*_பேரன்புமிக்க TNPTF மாவட்டச்செயலாளர்களின் கவனத்திற்கு,_*


*⭐நவம்பர்-26 அரசாணை எரிப்புப் போராட்ட வால்போஸ்டர்கள் KPN பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட விவரப் பட்டியல் இத்துடன் தரப்பட்டுள்ளது.நாளை (31.10.2018) தவறாது அவற்றைப் பெற்று வட்டார,நகரக் கிளைகளுக்கு உடன் வழங்கி பிரதான இடங்களில் உடன் ஒட்ட ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்*


*⚡தோழமையுடன்:-*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அக்டோபர் - 31 "தேசிய ஒற்றுமை நாள்" (National Unity Day) - உறுதிமோழி.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/31-national-unity-day.html



*ஆண்டுதோறும் அக்டோபர் 31 ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுகிறகடைபிடிக்கப்படுகிறது.*


*_தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி:_*


*இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே அர்ப்பணிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.*


*சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், செய்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.*


*எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.*


*⚡ஆக்கம்:*

*_ந.டில்லி பாபு,_*

*இடைநிலை ஆசிரியர்,*

*தாளவாடி, ஈரோடு.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*📡பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்📡*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_30.html


*⭐📡எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது*


*⭐இதற்கான பணிகளை மேற்கொள்ள,*

*⚡பள்ளி கல்வி இயக்குனர் _மதிப்புமிகு.ராமேஸ்வர முருகன்,_*

*⚡மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் _மதிப்புமிகு.அறிவொளி,_*

*⚡ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் _மதிப்புமிகு.சுடலைகண்ணன்_*

*⚡மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது*



*⭐👨‍👨‍👦‍👦தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன*


*⭐🎥படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது*


*⭐✈மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*TNPTF - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்ட மண்டல ஆயத்தக்கூட்ட அழைப்பிதழ்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/tnptf_72.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் 26-ல் அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.*


*⭐தெற்கு மற்றும் தென்மத்திய மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டம், நவம்பர் 3 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு மதுரை மாவட்டம் - சொக்கநாதர் திருமண மண்டபம், மேல மாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு, (சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில்) மதுரையில்  நடைபெறவுள்ளது.*


*⚡தலைமை :*

*_தோழர்.தே.ஜோசப் ரோஸ்_ மாநில துணைத்தலைவர்.*



*⚡ முன்னிலை :*

*_தோழர்.இரா.மலர்விழி,_ மாநில துணைத்தலைவர்.*


*⚡வரவேற்புரை :*

*_தோழர்.க.ஒச்சுக்காளை_ மாவட்டச் செயலாளர் - மதுரை.*



*⚡போராட்ட ஆயத்த உரை :*


*_தோழர்.கே.பி.கோவிந்தன் குட்டி_ மாவட்டச் செயலாளர் - கன்னியாகுமரி,*


*_தோழர்.செ.பால்ராஜ்_ மாவட்டச் செயலாளர் - திருநெல்வேலி,*


*_தோழர்.சு.செல்வராஜ்_ மாவட்டச் செயலாளர் - தூத்துக்குடி,*


*_தோழர்.வை.ச.வைரமுத்து_ மாவட்டச் செயலாளர் - விருதுநகர்,*


*_தோழர்.ஆ.முத்துப்பாண்டியன்_ மாவட்டச் செயலாளர் - சிவகங்கை,*


*_தோழர்.சே.முத்துமுருகன்_ மாவட்டச் செயலாளர் - இராமநாதபுரம்,*


*_தோழர்.எஸ்.கிருஷ்ணசாமி_ மாவட்டச் செயலாளர் - தேனி,*


*_தோழர்.எஸ்.ஜேம்ஸ் அந்தோணிதாஸ்_ மாவட்டச் செயலாளர் - திண்டுக்கல்*


*_தோழர்.ப.வாஞ்சிநாதன்,_ மாவட்டச் செயலாளர், கள்ளர்பள்ளிக் கிளை.*



*⚡சிறப்புரை :*


*_தோழர்.சோ.முருகேசன்_ மாநிலச் செயலாளர்*


*_தோழர்.தே.முருகன்_ மாநிலச் செயலாளர்,*



*_தோழர். டி.மல்லிகா,_ மாநில ச் செயலாளர்.*


*⚡போராட்ட விளக்கவுரை :*


*_தோழர்.மூ.மணிமேகலை_ மாநிலத் தலைவர்,*


*_தோழர்.தா.கணேசன்,_ மாநில துணைப் பொதுச்செயலாளர்.*



*⚡ நன்றியுரை:*

*_தோழர்.எ.அக்சீலியா பெர்லின் உஷா_ மாநில துணைத்தலைவர்.*



*⭐இக்கூட்டத்தில் இவ்விரு மண்டலங்களைச் சார்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார & நகரக் கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*_தோழமையுடன்;_*


*⚡ _தோழர்.மூ.மணிமேகலை_ - மாநிலத் தலைவர்,*


*⚡ _தோழர்.ச.மயில்_ - பொதுச்செயலாளர்*


*⚡ _தோழர்.க.ஜோதிபாபு_ -  மாநிலப் பொருளாளர்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*TNPTF - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்ட மண்டல ஆயத்தக்கூட்ட அழைப்பிதழ்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/tnptf_16.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் 26-ல் அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.*


*⭐வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டம், நவம்பர் 3 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் - A.S.G சாந்தா ஆனந்தன் திருமண மண்டபம்,எல்லீஸ் சத்திரம் ரோடு, பைபாஸ், விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது.*


*⚡தலைமை :*

*_தோழர்.அ.ரஹும்_ மாநில துணைத்தலைவர்.*




*⚡வரவேற்புரை :*

*_தோழர்.இரா.சண்முகசாமி_ மாவட்டச் செயலாளர் - விழுப்புரம்.*



*⚡போராட்ட ஆயத்த உரை :*


*_தோழர்.பெ.செ.அமர்நாத்_ மாவட்டச் செயலாளர் - வேலூர்,*


*_தோழர்.எ.அந்தோணிராஜ்_ மாவட்டச் செயலாளர் - திருவண்ணாமலை,*


*_தோழர்.கா.த.அனுக்குமார்_ மாவட்டச் செயலாளர் - காஞ்சிபுரம்,*


*_தோழர்.த.முருகன்_ மாவட்டச் செயலாளர் - திருவள்ளூர்,*


*_தோழர்.ஜோ.கிறிஸ்டோபர்_ மாவட்டச் செயலாளர் - கடலூர்,*


*_தோழர்.ரா.அழகர்_ மாவட்டச் செயலாளர் - தஞ்சாவூர்,*


*_தோழர்.மு.காந்தி_ மாவட்டச் செயலாளர் - நாகப்பட்டினம்,*


*_தோழர்.அ.சுவிக்கின்ராஜ்_ மாவட்டச் செயலாளர் - திருவாரூர்*




*⚡சிறப்புரை :*


*_தோழர்.சா.சித்ரா_ மாநிலச் செயலாளர்*


*_தோழர்.சி.ஜி.பிரசன்னா_ மாநிலச் செயலாளர்,*




*⚡போராட்ட விளக்கவுரை :*


*_தோழர்.க.ஜோதிபாபு_ மாநிலப் பொருளாளர்,*


*_தோழர்.ச.மோசஸ்,_ STFI பொதுக்குழு உறுப்பினர்.*



* நன்றியுரை:*

*_தோழர்.பெ.அலோசியஸ் துரைராஜ்_ மாநில துணைத்தலைவர்.*



*⭐இக்கூட்டத்தில் இவ்விரு மண்டலங்களைச் சார்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார & நகரக் கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*_தோழமையுடன்;_*


*_தோழர்.மூ.மணிமேகலை_ - மாநிலத் தலைவர்,*


*_தோழர்.ச.மயில்_ - பொதுச்செயலாளர்*


*_தோழர்.க.ஜோதிபாபு_ -  மாநிலப் பொருளாளர்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*TNPTF - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்ட மண்டல ஆயத்தக்கூட்ட அழைப்பிதழ்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/tnptf_30.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் 26-ல் அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.*


*⭐மேற்கு மற்றும் வடமத்திய மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டம், நவம்பர் 3 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பழைய கோட்டை ரோடு, கொங்கு ஹாலில் நடைபெறவுள்ளது.*



*⚡தலைமை :*

*_தோழர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ்_ மாநில துணைத்தலைவர்.*





*⚡வரவேற்புரை :*

*_தோழர் ப.கனகராஜா_ மாவட்டச் செயலாளர் - திருப்பூர்.*



*⚡போராட்ட ஆயத்த உரை :*


*_தோழர் யு.கே.சண்முகம்_ மாவட்டச் செயலாளர் - ஈரோடு,*


*_தோழர் எம்.தங்கபாசு_ மாவட்டச் செயலாளர் - கோயமுத்தூர்,*


*_தோழர் எஸ்.சுனில்குமார்_ மாவட்டச் செயலாளர் - நீலகிரி,*


*_தோழர் இரா.மாதேஷ்_ மாவட்டச் செயலாளர் - நாமக்கல்,*


*_தோழர் ந.பெரியசாமி_ மாவட்டச் செயலாளர் - சேலம்,*


*_தோழர் ர.ஜெயராஜ்_ மாவட்டச் செயலாளர் - கரூர்,*


*_தோழர் சி.ஆரோக்கியராஜ்_ மாவட்டச் செயலாளர் - திருச்சிராப்பள்ளி,*


*_தோழர் ச.வின்சென்ட்_ மாவட்டச் செயலாளர் - புதுக்கோட்டை*


*_தோழர் எஸ்.சின்னசாமி_ மாவட்ட அமைப்பாளர் - பெரம்பலூர்,*


*_தோழர் அ.விஜயகுமார்_ மாவட்டச் செயலாளர் - கிருஷ்ணகிரி,*


*_தோழர் செ.கேசவன்_ மாவட்டச் செயலாளர் - தருமபுரி*




*⚡சிறப்புரை :*


*_தோழர் இ.வின்சென்ட்_ மாநிலச் செயலாளர்*


*_தோழர் வி.ஹேமலதா_ மாநிலச் செயலாளர்,*




*⚡போராட்ட விளக்கவுரை :*

*_தோழர் ச.மயில்_ பொதுச்செயலாளர்*




*⚡நன்றியுரை :*

*_தோழர். இரா.தமிழ்ச்செல்வி_ மாநில துணைத்தலைவர்.*


*⭐இக்கூட்டத்தில் இவ்விரு மண்டலங்களைச் சார்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார & நகரக் கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*_தோழமையுடன்;_*


*_தோழர்.மூ.மணிமேகலை_ - மாநிலத் தலைவர்,*


*_தோழர்.ச.மயில்_ - பொதுச்செயலாளர்*


*_தோழர்.க.ஜோதிபாபு_ -  மாநிலப் பொருளாளர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 29 October 2018

*தமிழக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அறிவித்து ஆணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/2019.html


*🌟தமிழக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.*

*G.O.Ms.No.840 நாள்: 29.10.2018*


*⚡01.01.2019 - TUESDAY - NEW YEAR*


*⚡15.01.2019 - TUESDAY - PONGAL*


*⚡16.01.2019 - WEDNESDAY - THIRUVALLUR DAY*


*⚡17.01.2019 - THURSDAY - UZHAVAR THIRUVALLUR*


*⚡26.01.2019 - SATURDAY - REPUBLIC DAY*


*⚡01.04.2019 - MONDAY - ANNUAL ACCOUNT CLOSING FOR COMMERCIAL BANKS & CO-OPERATIVE BANKS*


*⚡06.04.2019 - SATURDAY - TELUGU NEW YEAR'S DAY*


*⚡14.04.2019 - SUNDAY - TAMIL NEW YEAR'S DAY & Dr.B.R.AMBEDKAR BIRTHDAY*


*⚡17.04.2019 - WEDNESDAY - MAHAVEER JAYANTHI*


*⚡19.04.2019 - FRIDAY - GOOD FRIDAY*


*⚡01.05.2019 - WEDNESDAY - MAY DAY*


*⚡05.06.2019 - WEDNESDAY - RAMZAN*


*⚡12.08.2019 - MONDAY - BAKRID*


*⚡15.08.2019 - THURSDAY - INDEPENDENTS DAY*


*⚡23.08.2019 - FRIDAY - KRISHNA JAYANTHI*


*⚡02.09.2019 - MONDAY - VINAYAKAR CHATURTHI*



*⚡10.09.2019 - TUESDAY - MUHARRAM*



*⚡02.10.2019 - WEDNESDAY - GANDHI JAYANTHI*


*⚡07.10.2019 - MONDAY - AYUTHA POOJA*


*⚡08.10.2019 - TUESDAY - VIJAYA DASHAMI*


*⚡27.10.2019 - SUNDAY - DEEPAVALI*


*⚡10.11.2019 - SUNDAY - MILADI-UN-NABI*


*⚡25.12.2019 - WEDNESDAY - CHRISTMAS*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*அரசாணை எரிப்புப்போர்-26.11.2018-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுதியுடன் முன்னெடுக்கும்.இது ஜேக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் - TNPTF பொதுச்செயலாளரின் மிக முக்கிய சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/26112018-tnptf.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 18 நாள் : 29.10.2018*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*



*⭐நேற்று (28.10.2018) சென்னையில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் நிதிக்காப்பாளர் தோழர்.ச.மோசஸ் அவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத்தலைவர் தோழர்.மூ.மணிமேகலை மற்றும் மாநிலப்பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.*



*⭐கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் - 26-ல் அறிவித்துள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தினைக் கைவிடுமாறு ஜேக்டோ ஜியோ சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.*




*⭐இது குறித்து உயர்மட்டக்குழுவில் பதிலளித்த நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்.மூ.மணிமேகலை “ இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான களப்போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கூடுதல் அழுத்தம் தரும் நோக்கோடே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விரிவடைந்த மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்ற பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநில மாநாட்டில் நவம்பர் 26-ல் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தினை நடத்துவது என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.*



*⭐அதற்கான மண்டல ஆயத்தக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவ்விசயத்தில் இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை முழுமையாக மீட்டெடுப்பதே எமது பேரியக்கத்தின் ஒட்டு மொத்த முடிவாக உள்ளது. எனவே இப்போராட்டத்தைக் கைவிடும் நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இல்லை.*




*⭐மேலும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இப்போராட்டமானது எந்நிலையிலும் ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்ட நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தாது. இப்போராட்டமானது ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்ப்பதாகவே அமையும்” என்று நமது பேரியக்கத்தின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துள்ளார்.*



*⭐அதன்பின்பு வெளியிடப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தீர்மானத்தில் தீர்மான எண்: 2ல் “ ஜேக்டோ ஜியோ 2018 நவம்பர் 27 முதல் நடத்தவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை சக்தியாக நடத்திடும் பொருட்டு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்தைக் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஊதியக்குழுவால் அறிவிக்கப்பட்ட அநீதியைத் தனிக்கோரிக்கையாகப் பட்டியலிடுவது என முடிவு செய்யப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.*




*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரசாணை எரிப்புப் போராட்ட நடவடிக்கையானது ஜேக்டோ ஜியோவின் கோரிக்கைகளில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கையை தனிக்கோரிக்கையாகப் பட்டியலிடும் நிலையை உருவாக்கியுள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் மதிப்பிற்குரிய நமது ஜேக்டோ ஜியோவின்  தலைவர்கள் நமது பேரியக்கத்தின் இப்போராட்ட நடவடிக்கை எவ்விதத்திலும் ஜேக்டோ ஜியோவின் போராட்ட நடவடிக்கைகளுக்கு  பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க  நம் அரசாணை எரிப்புப் போராட்டம் ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கூடுதல் பலத்தையும் ஆசிரியர்கள் மத்தியில் அளப்பரிய போர்க்குணத்தையும் உருவாக்கும் என்பதையும் உணர்ந்து சிறைக் கொட்டடிகளை நோக்கிய நமது போர்ப்பயணத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*



*⭐எனவே சமரசமற்ற களப்போராளிகளான நமது பேரியக்கத்தின் மாநில மாட்ட வட்டார நகரக்கிளைகளின் பொறுப்பாளர்கள் எதிர்வரும் நவம்பர் 26 அரசாணை எரிப்புப் போராட்டத்தையும், நவம்பர் 27 முதல் நடைபெறவுள்ள ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக்கிட முழு பலத்தையும் பயன்படுத்தி இமைப்பொழுதும் இடைவெளியின்றி களப்பணியாற்றிட மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*



*⭐எதிர்வரும் நவம்பர் - 3 அன்று மதுரை, காங்கேயம் விழுப்புரம் ஆகிய மூன்று மையங்களில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களை மிகுந்த உற்சாகத்துடன் வெற்றிகரமாக நடத்திடவும் மாவட்டச்செயலாளர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்ட மண்டல ஆயத்தக் கூட்டங்களுக்கான அழைப்பிதழை வட்டார நகர மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு நகல் எடுத்து உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் அனைத்துப் பொறுப்பாளர்களும் மண்டலக் கூட்டங்களில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*



*⭐மேலும் நவம்பர் 11 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களையும் எழுச்சியுடன் நடத்திட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.*



*⭐நவம்பர்-26 அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான வால்போஸ்டர் அனைத்து மாவட்டச்செயலாளர்களுக்கு பார்சல் சர்வீஸ் மூலம் இன்று (29.10.2018) அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக அதைப்பெற்று அனைத்து வட்டார நகரக்கிளைகளுக்கும் வழங்கி பிரதான இடங்களில் உடனடியாக ஒட்டுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நவம்பர் 26 அரசாணை எரிப்புப் போராட்டத்திற்குரிய களப்பணிகளை தொய்வின்றித் தொடரவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெல்ல ஆதரவு கொடுப்போம் தோழர்களே!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_29.html



*வணக்கம் தோழர்களே!*


*⭐சத்துணவு ஊழியர்களின் போராட்டம் காரணமாக சத்துணவு சமைக்காத இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுத்து உணவு தயாரிக்கட்டும்.*


*⚡ஆசிரியர்கள் வீட்டிலிருந்து அரிசி முட்டை எடுத்துவர இயலாது.*


*⚡கதவை உடைத்து திருட்டு பட்டமும் வேண்டாம்.*


*⭐அப்படி நடைபெறாத இடங்களில் நமது ஆசிரியர் பெருமக்களை போராட்டத்திற்கெதிராக கடுமையை நாம் களமிறக்க வேண்டியதில்லை.*


*⭐அவர்கள் நமது தோழமையாளர்களே!*

*_ஆதரவு கரம் நீட்டுவோம்!_*


*⭐அடிமை வேலை புரியும் சத்துணவு ஊழியர்களுக்கும் துணை நிற்போம்.*


*⭐தினக்கூலியை வேரறுப்போம் தோழர்களே!*


*_சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும்._*


*தமிழக அரசே! தமிழக அரசே!!*

*அழைத்துப் பேசு! அழைத்துப் பேசு!!*

*போராடும் சத்துணவு பணியாளர்களை அழைத்துப் பேசு...*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday, 28 October 2018

*TNPTF ஆணை எரிப்பு போராட்டம் தள்ளி வைப்பு இல்லை, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/tnptf_28.html


*⭐ஜேக்டோ-ஜியோ  கூட்டத்தில் நமது TNPTF-ன் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. TNPTF அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.*


*⭐JACTTO GEO இன்றைய கூட்டத்தில் நமது இயக்கத்தின் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.*

*நமது மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*STFI இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் கேரள பேரிடர் மழை வெள்ள நிவாரண நிதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள் ரூ.50000 வழங்கினார்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/stfi-50000.html



*🌟இன்று (28.10.2018) மாலை புதுதில்லியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் STFI சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பங்கீடாக STFI பொதுச்செயலாளரிடம் 50000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது*


*தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday, 26 October 2018

*GOOD MORNING SONG*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/good-morning-song.html


*_கவிஞர்.டில்லி பாபு_ இயற்றிய Good morning song.*


*இப்பாடல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், அருமையான பாடல். தங்கள் பள்ளிகளிலும் இப் பாடலை பயன்படுத்திக்கொள்ளலாம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday, 25 October 2018

*நவம்பர் 3 அரசாணை எரிப்புப் போராட்ட மண்டல கூட்டம் விழுப்புரத்தில் நடத்த திட்டமிடுவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/3.html


*🌟விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 27.10.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தந்தை பெரியார் போக்குவரத்து அலுவலர்கள் குடியிருப்பு எதிரில் (CITU OFF) ல்,*

*⚡மாவட்டத் தலைவர் _தோழர். கு.குணசேகரன்_ அவர்கள் தலைமையில்,*

*மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.*


*_முன்னிலை:_*


*⚡_தோழர்.அ.ரஹும்,_ மாநில துணைத்தலைவர்.*


*⚡_தோழர்.சா.சித்ரா,_ மாநிலச் செயலாளர்.*




*_கூட்டப்பொருள்:_*


*👌நவம்பர் 3, அரசாணை எரிப்புப் போராட்ட மண்டலக் கூட்டத்தை திட்டமிடல்,*


*👌2017-18, 18-19 - இரண்டாண்டு உறுப்பினர் பட்டியல், தொகை மற்றும் அடிக்கட்டு ஒப்படைத்தல்.*


*👌கேரளப் பேரிடர் நிவாரண நிதி.*


*👌ஜாக்டோ ஜியோ நவம்பர் 27 கால வரையற்ற வேலை நிறுத்தம்.*


*👌ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப்பூர்வமாக),*


*👌மாவட்டச் செயலாளர் கொணர்வன.*



*_நன்றியுரை:_*


*_👌தோழர்.க.தண்டபாணி_ மாவட்டப் பொருளாளர்.*


*🌟விழுப்புரம் மாவட்ட செயல்பாடுகளை மிகவும் சிறப்பாக கொண்டுசெல்ல மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.*


*_குறிப்பு:_*

*27.10.2018 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக இருப்பின் கூட்டம் 28.10.2018ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் மேற்குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.*



*தோழமையுடன்;

*_இரா.சண்முகசாமி,_*

*மாவட்டச் செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசுப் பள்ளியில் 52 ஆயிரம் குழந்தைகள் சேர்க்க திட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/52.html


*⭐அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*

       

*⭐தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.*


*⭐இந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.*


*⭐பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கக் கூடிய அங்கன்வாடி மையங்கள் அரசு பள்ளிகள் வளாகத்திலேயே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 52 ஆயிரம் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி மாதம் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*⭐தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுடன் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.*


*⭐இரண்டாவது கட்டமாக மீதமுள்ள குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 23 October 2018

*ஆசிரியர் பணி பாதுகாப்பு கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_6.html


*ஆசிரியர் பணி பாதுகாப்பு கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_51.html


*⭐திருவண்ணாமலை மாவட்டம் மேல் நாச்சப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.10.2018 அன்று பள்ளி வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திரு.கண்ணன் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்பது காண்போரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.*


*⭐இச்சம்பவம் தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுடைய உயிருக்கே உத்திரவாதமற்ற நிலையை  உணர்த்துவதாக உள்ளது.*


*⭐ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழும் நிலையில் உரிய அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு அதன் உண்மைத்தன்மை அறியப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.*


*⭐சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தமிழக அரசும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*


*⭐மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*திருப்பூரில் கல்வித்துறை நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மதவெறிக் கருத்துக்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_88.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப்பொருளாளர் க.ஜோதிபாபு ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை*

               

*⭐திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் 22.10.2018 அன்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.*


               

*⭐“வரலாற்றுத் தொகுப்புப் பேரவை” என்னும் தலைப்பில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பேசிய எஸ்வைஸ்யா யோகா பல்கலைக்கழகம் என்ற அமைப்பை சேர்ந்த திரு.சுப்பிரமணியம் என்பவரும், இதிகாசங்கலானா சமிதி என்ற அமைப்பின் தென் மாநிலச்செயலாளர் திரு.டி.வி.ரெங்கராஜன் என்பவரும் அறிவியலுக்கு ஒவ்வாத, ஆதாரமற்ற, பிற்போக்குத்தனமான, மதவாதக் கருத்துக்களை முன்வைத்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். மேலும், RSS, சங்பரிவார் போன்ற அமைப்புகளின் மதவெறிக் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தியோடு இன்றைய கல்விமுறையை மிகக்கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளனர்.*



*⭐“ஓம்” என்னும் மந்திரச்சொல்லை நாள்தோறும் பாடபோதனை துவங்கும் முன்பு மாணவர்கள் உச்சரித்தால் கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் எனவும், குருகுலக்கல்வி முறை எப்போது இல்லாமல் போனதோ  அன்று முதல் நாடு நாசமாகிவிட்டதெனவும், விமானம், அறுவைச் சிகிச்சை போன்றவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் இருந்ததாகவும், இராமாயாணம், மகாபாரதம் ஆகியவற்றை ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டும் எனவும் பேசியதோடு பசுவின் புனிதம் பற்றியும், பசுவின் உடலிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் அற்புதமானவை என்றும் கல்விக்குத் தொடர்பில்லாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசியுள்ளனர். இவையனைத்தும் திருப்பூர் மாவட்டக் கல்வித்துறையின் தலைமை அலுவலரான மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.*


*⭐கருவிலே இருக்கும் குழந்தைகளுக்குக் கூட அறுவைச்சிகிச்சை செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய கால கட்டத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் கல்வியை அறிவியல் மனப்பான்மையோடு அணுகவேண்டிய நிலயில் இவ்வாறு விஷக்கருத்துக்களை விதைப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*


  

*⭐“வரலாற்றுத் தொகுப்புப் பேரவை” என்ற பெயரில் தமிழகத்தில் வேறெங்கும் இவ்வாறு எந்தவொரு கூட்டமும் நடைபெறாத நிலையில் திருப்பூரில் மட்டும் அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதற்கு என்ன காரணம்? அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்களுக்கும் கல்வித்துறைக்கும், கல்விக்கும் என்ன தொடர்பு? யாரிடம் அனுமதி பெற்று அக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஏற்பாடு செய்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை பதில் சொல்லியாக வேண்டும்.*


*⭐திட்டமிட்டு உள்நோக்கத்தோடு இதுபோன்றதொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்ட திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாக துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*


*⭐இதுபோன்ற அத்துமீறிய நிகழ்வுகள் இனிமேல் தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் நடைபெறாமல் தடுக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பப்ள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*சைனிக் பள்ளி - சேர்க்கை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_25.html


*🌟உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது*



*🌟திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகரில், பாதுகாப்பு அமைச்சகத்தின், சைனிக் பள்ளி செயல்படுகிறது. இதில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது*



 *🌟இதன்படி, 2019 - 20ம் கல்வியாண்டுக்கு, ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது*



*🌟இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, 2019, ஜன., 6ல் நடக்கும். ஒன்பதாம் வகுப்புக்கு, ஆங்கில வழியிலும், ஆறாம் வகுப்புக்கு, ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியிலும் தேர்வு எழுதலாம்*



*🌟மேலும், ஆறாம் வகுப்பு தேர்வை தமிழில் எழுத, அமராவதி நகர் தேர்வு மையத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலமே சமர்ப்பிக்க வேண்டும்*


⚡ www.sainikschooladmission.in, 

www.sainikschoolamaravathinagar.edu.in 

*என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்*



*🌟நவ., 26, 2018 வரை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 04252 - 256246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_23.html


*⭐பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா?*



Google Form link

http://tiny.cc/PKPISurvey


*_அனைவருக்கும் வணக்கம்,_*


*⭐இத்தகவல்களை இந்த மாத 29 க்குள்  எங்களுக்கு கிடைக்கும் படியாகவும் நிரப்பி அனுப்பும். கூகுள் பார்ம் இங்கு பகிரப்பட்டுள்ளது.*


*⭐அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க ஒவ்வொருவரும்  இதில் பணியேற்க ,விவரங்களைப் பெற்றுத் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் தளவாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்று வழங்க இயலும். நன்றி!*


*_இப்படிக்கு_*

*Dr வசந்திதேவி (தலைவர்)*

*JK (செயலர்)*

*பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்*


http://tiny.cc/PKPISurvey

******************************

*⭐அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குழு A3 அமைப்பின் வழியாக ஒவ்வொருவரும் குறைந்தது 2 பள்ளிகள் (அவர் பணி புரியும் பள்ளி, ஒரு தனியார் பள்ளி குறைந்த பட்சம்) பற்றிய தரவுகளைத் திரட்டும் பணியை இன்றிலிருந்து ஆரம்பிக்கவும் இந்த மாத 29 க்குள் எங்களுக்கு கிடைக்கும் படியாகவும் நிரப்பி அனுப்பும் கூகுள் பார்ம் இங்கு பகிரப்பட்டுள்ளது.*


*⭐அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க ஒவ்வொருவரும்  இதில் பணியேற்க ,விவரங்களைப் பெற்றுத் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*


*_தகவல் பகிர்வு,_*

*திருமதி.உமாமகேஷ்வரி,*

*A3-அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழு.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 22 October 2018

*வடகிழக்கு பருவமழை வரும் 26 ம் தேதி முதல் துவங்க இருக்கிறது, மழை காலங்களில் இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/26.html


*🌟மழை பொழியும் நேரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..*


*_⚡படம் 1:_*

*வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 மீட்டர் இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்.*


*_⚡படம் 2:_*

*மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமாக மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்.*


*_⚡படம் 3:_*

*கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது.*


*_⚡படம் 4:_*

*கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм