Wednesday, 28 August 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) சார்பாக நடைபெற உள்ள 29.08.2019 வட்டாரத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தை பேரெழுச்சியோடு நடத்துவோம் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/tnptf-29082019.html


**

*🛡29.08.2019 வட்டாரத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தை பேரெழுச்சியோடு நடத்துவோம்!*



*_திக்கெட்டும்  ஒலிக்கட்டும் தீக்குரல்கள்!_*


*📢🖋பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 23  நாள்  : 28.08.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*


**

*🛡தொடக்கக்கல்வியின் மீதான தொடர் தாக்குதல்கள் அணிவகுத்து வந்துகொண்டேயிருக்கிறது. எதிர்காலத்தில் தொடக்கக்கல்வித்துறை என்ற நிர்வாக அமைப்பு என்ன ஆகும் என்ற கேள்விக்குறி தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.*



**

*🛡பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றும் முயற்சி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படும் நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களது நம்பிக்கையை இழந்து மேலும் மாணவர்களது எண்ணிக்கை குறைந்து அப்பள்ளிகள் மூடப்படும் அவலநிலைதான் உருவாகும். அவ்வாறு மூடப்படும் பள்ளிகளுக்கு ‘நூல் நிலையம்’  என்று புதிய பெயர் சூட்டப்படும். ஏற்கனவே 46 பள்ளிகள் ‘நூல் நிலையம்’ என்ற பெயரில் மூடப்பட்டுள்ள நிலையில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட சுமார் 1850 பள்ளிகளுக்கும் ‘நூல் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் நிலை உருவாகும்.*



**

*🛡கேரள மாநிலத்தில் தொடக்கக்கல்வியில் மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, அங்கு அரசுப்பள்ளிகள் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.*



**

*🛡மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 5 வகுப்புகள், 23 பாடங்கள் உள்ளன என்பதைப் பற்றிய புரிதல் இங்கு யாருக்கும் இல்லை. கல்வி உரிமைச்சட்டம் - 2009-ன் படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்ற நடைமுறைக்கும் தற்போது  குந்தகம் ஏற்பட்டுள்ளது. 61 மாணவர்கள் என்றால் 3 ஆசிரியர்கள் என்ற நிலை மாற்றப்பட்டு 76 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் என்ற நிலை உருவாகும்  சூழலும் ஏற்பட்டுள்ளது.*



**

*🛡தொடக்கக்கல்வித்துறை என்ற அழகிய பூமாலை ஒவ்வொரு இதழாக நம் கண்முன்னே பிய்த்து எறியப்படுகிறது. இறுதில் நார் மட்டுமே மிஞ்சும்போல் தெரிகிறது.*



*_“பள்ளிக்கதவை திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான்”_*


*என்ற பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகள் இங்கு யாருக்கும் நினைவில் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அரசு ஆரம்பப்பள்ளிகளே இல்லை என்ற நிலைஉருவாகலாம்.*



**

*🛡இத்தகு இக்கட்டான சூழலில் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கல்வி நலன், ஆசிரியர் நலன், மாணவர் நலன், தேச நலன் காக்க கணக்கற்ற களப்போராட்டங்களை சமரசமின்றி நடத்தியுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்விக்கு ஏற்பட்டுள்ள இழிநிலை போக்க 5 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(29.08.2019) வட்டாரத்தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.*



**

*🛡எத்தனை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், தடைகள் வந்தாலும், சிரமங்கள் இருந்தாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  போராட்ட வலிமையை உணர்த்தும் வகையில் நாளைய போராட்டக்களத்தை அமைத்திட மலை குறைந்தாலும் நிலை குலையாத வட்டார, நகர கிளைகளின் ஓய்வறியா தோழர்களை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡நாளைய ஆர்ப்பாட்டம்,நடந்து கொண்டிருக்கக்கூடிய  நிகழ்வுகளுக்கு ஆசிரியர்களின் எதிர்ப்பை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையிலும், தனிச்சங்க நடவடிக்கையாக நம் பேரியக்கத்தின் வலிமையைப் பறைசாற்றக்கூடிய வகையிலும் அமைந்திட வேண்டும்.*



**

*🛡நாம் போராட்டத்தை அறிவித்த மறுநாள் ஜாக்டோ  ஜியோ தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முன்னணிப்படையாகத் திகழ்வோம். நாளைய நம் தனிச்சங்கப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ போராட்ட நிகழ்வுகளுக்கு ஒரு உந்துசக்தியாய் நிகழ்த்துவோம். அநீதிக்கு எதிரான போர்க்குரல்கள் எத்திசை நோக்கினும் ஒலிக்கட்டும்.*



💥💥💥💥💥💥💥💥 

*விண்ணதிரட்டும்! மண்ணதிரட்டும்!*

💥💥💥💥💥💥💥💥



*_“ நீ மண்ணுக்காகப் போராடத் தயங்குகிறாய்... ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது…!_*

- *சேகுவேரா*                                                                          

🤝தோழமையுடன்; 



*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday, 27 August 2019

*JACTTO-GEO: 5-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/jactto-geo-5.html


**

*🛡ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27.08.19) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் தொடர்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.*



*⚡CPS-ஐ இரத்து செய்திடல்*


*⚡இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சினையைக் களைந்திடல்*


*⚡ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தவுகளையும், 17(ஆ) நடவடிக்கைகளையும் திரும்பப்பெறல்*


*⚡தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐத் திரும்பப் பெறல்*


*⚡அரசாணைகள் 145, 101 & 102-னைத் திரும்பப் பெறல்*


*மேற்கண்ட கோரிக்கைககளை வலியுறுத்தி,*


*31.08.2019 :*


**

*🛡மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்*



*06.09.2019 :*

**

*🛡வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*



*13.09.2019 :*


**

*🛡கல்வி மாவட்டத் தலைநகரில் பேரணி & ஆர்ப்பாட்டம்*



*24.09.2019 :*


**

*🛡மாவட்டத் தலைநகரில் உண்ணவிரதம் நடத்துதல் என்ற தொடர் நடவடிக்கையை ஜாக்டோ-ஜியோ இன்று அறிவித்துள்ளது.*



சென்னை.

27.08.2019



🤝தோழமையுடன்;


*_ச.மோசஸ்_*

*நிதிக்காப்பாளர்*

*ஜாக்டோ-ஜியோ*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29.08.2019 வியாழன் மாலை அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/29082019.html


*_TNPTF மாநில மைய முடிவுகள்-26.08.2019_*


**

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29.08.2019 வியாழன் மாலை அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்*



*_தமிழக அரசே!மத்திய அரசே!_*


**

*🛡தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணை (நிலை)எண்:145(பள்ளிக்கல்வித்(தொக3(2)துறை) நாள்: 20.08.2019 ஐ உடனடியாகத் திரும்பப் பெறு!*



**

*🛡குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப் பள்ளிகளை ஆக்காதே!*



**

*🛡தேசியக் கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெறு!*



**

*🛡தமிழகத்தில் ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றி அரசுப்பள்ளிகளை அழிக்காதே!*



**

*🛡30.08.2019 அன்று நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்குப் பின்பு நடத்து!*



**

*🛡மேற்கண்ட கோரிக்கைககளை வலியுறுத்தி வட்டாரத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்க இயக்கத்தோழர்கள் இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றுக!*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 26 August 2019

*கல்வி தொலைகாட்சியினை கண்டுகளிக்க மூன்று வகை வழிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_26.html


*_வழி - 1:_*


*📺கல்வி தொலைக்காட்சியை cabel Chennal No:- 200 இல் கண்டு களிக்கலாம்*


*_வழி - 2:_*


*📱 Mobile App மூலம் கண்டுகளிக்கலாம்*

*Mobile App link:*

👇👇👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=indiamatrix.kalvitv


https://play.google.com/store/apps/details?id=com.indiamatrix.kalvitv


*_வழி - 3:_*


*🖥இணையதள YOUTUBE CHANNEL வழியாக கண்டுகளிக்கலாம்*

*கல்வித் தொலைக்காட்சி youtube Channel Link*

👇👇👇👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCNXOIB9bw26RczXsf_4S2lw



*🌟மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்,*



*_தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை உத்தரவின்படி,_*


*🌟கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26/08/2019 (திங்கட்கிழமை) இன்று மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது*


*🌟கல்வித் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர்களை  காணச் செய்து அந்த புகைப்படங்களை Emis இணையத் தளத்தில் பதிவேற்றம்  செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday, 24 August 2019

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்ட முடிவுகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/stfi.html


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில குழுக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் 24.08.2019 சனிக்கிழமை நடைபெற்றது.*


*🌟கூட்டமானது தமிழ்நாடு மாநிலக்குழு மாநில அமைப்பாளர் _தோழர்.ச.மயில்_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது*


*_இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு கூட்டமுடிவுகள்_*


**

*🛡தீர்மானம் எண் : 1*


*⚡தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை மீது 15.08.2019 வரை கருத்துக் கேட்பு நடத்தியுள்ள மத்திய அரசு இதுவரை ஏற்பு செய்யப்பட்ட இறுதி அறிக்கையை வெளியிடாத நிலையில், தமிழக அரசு தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுக்கல்வியை பாதிக்கக்கூடிய, கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இலவச தமிழ்வழிக் கல்வியைப் பாதிக்கக்கூடிய வகையிலான தொடர் நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை கல்வி நிலையிலும், நிர்வாக நிலையிலும் பாதிக்கக்கூடிய அரசாணை (நிலை) எண் : 145 (பள்ளிக்கல்வித் (தொக)3(2)துறை) நாள் : 20.08.2019 -ஜ உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡தீர்மானம் எண் : 2*


*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 21.07.2019 தமிழ்நாடு மாநிலக்குழுவின் முடிவின்படி தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்திய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளுக்கு இம்மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவுத்துக் கொள்கிறது.*



**

*🛡தீர்மானம் எண் : 3*


*⚡தேசியக்கல்விக்கொள்கை – 2019 தொடர்பாக AIFUCTO (All India Federation of University & College teachers organisations) அமைப்புடன் இணைந்து STFI & AIFUCTO சார்பில்  செப்டம்பர் - 2019-ல் மதுரையில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை மிகச்சிறப்பாக நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



**

*🛡தீர்மானம் எண் : 4*


*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறும் பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களிடம் பிரதிநிதிக் கட்டணமாக தலா ரூ500-(ரூபாய் ஐநூறு மட்டும்) பெறுவது என இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



**

*🛡தீர்மானம் எண் : 5*


*⚡ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் _திரு.மா.இரவிச்சந்திரன்_ அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்திடக்கோரியும் இந்தியப்பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 09.09.2019 அன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*STFI - தமிழ்நாடு மாநில குழு மாநில அமைப்பாளர்,*

*TNPTF - மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Friday, 23 August 2019

*நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ஆகஸ்ட்.30-ல் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/30.html


*🌟பொது கலந்தாய்விற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 3 ஆண்டுகள் என்ற அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து 2019-20-ம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வுகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.*



*🌟நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உபரி ஆசிரியர் பணி நிரவலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வினை மட்டும் நடத்திட தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நேற்று (22.08.19) செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.*



*🌟இதன்படி, ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி ஆரம்ப & நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2018 மாணவர் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை  ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களை இன்றைய தேதியில் உள்ள மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து ஏற்பட்டுள்ள கூடுதல் தேவைப் பணியிடம் / காலிப்பணியிடத்தில் பணி நிரவல் செய்யும் கலந்தாய்வு 30.08.2019 அன்று நடைபெறுகிறது.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*உபரி ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_23.html


*🌟பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் வழங்கும் கவுன்சலிங் 28ம் தேதி நடக்கிறது.*


*🌟இதையடுத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் மாற்றப்பட உள்ளனர்.*


*🌟தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 52 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 13 ஆயிரம் இயங்குகின்றன. மொத்தமுள்ள பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.*


*🌟இந்நிலையில், சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் பள்ளிகளில், பாடவாரியாக பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு பதிலாக கூடுதலாக பாட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில பள்ளிகளில் பாட ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.*


*🌟இதை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு முதல் மாவட்ட வாரியாகவும், பாட வாரியாகவும் பணியில் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார்.*


*🌟இதன்படி எடுக்கப்பட்ட பட்டியலின்படி குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் 13 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.*


*🌟இதையடுத்து, விதிப்படி ஒவ்வொரு பாடத்துக்கும் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் போக உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. துறை ரீதியாக உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்க முடிவு செய்யதுள்ளது.*


*_இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:_*


*🌟பள்ளிக் கல்வி இயக்ககத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களில் உபரி ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.*


*🌟அந்த பட்டியலின் அடிப்படையில், வரும் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் அந்தந்த மாவட்டத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவர்கள் மூலம் இணைய தளம் வழியாக கவுன்சலிங் நடத்தப்படும். இவ்வாறு இயக்குநர் கண்ணப்பன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday, 22 August 2019

*தமிழக அரசு தொடக்கக்கல்வித் துறையை அழிக்கும் அரசாணை 145 மற்றும் ந.க.எண்.2448B7/ SS/BRC/2019 நாள் : 07.08.2019 (வளாகக்கல்வி, பள்ளிகள் இணைப்பு) - ஐ தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் - TNPTF எச்சரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/145-2448b7-ssbrc2019-07082019-tnptf.html



*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 12_*

*_நாள் : 22.08.2019_*



**

*🛡தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் தனித்தன்மையையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு சமீபத்தில் வெளிட்டுள்ள அரசாணையையும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாநில இயக்ககம் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 35 ஆயிரத்து 414 ஆரம்பப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 208 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.*



**

*🛡பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வந்த இப்பள்ளிகளை பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், நிர்வாக வசதிக்காகவும், தொடக்கக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காகவும் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வித்துறையைத் தனியே பிரித்து  தனி இயக்குநரகம் உருவாக்கினார்.*



**

*🛡அதன்படி கடந்த 25 ஆண்டுகாலமாகத் தனி நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித்துறையை மீண்டும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சிகளை தமிழக அரசு படிப்படியாகச் செய்து வருகிறது.*



**

*🛡அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளையும் , செயல்முறை ஆணைகளையும்,  அரசாணைகளையும், வாய்மொழி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. இன்று என்ன உத்தரவு வருமோ என்ற அச்ச உணர்வோடு தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் பணியாற்றி வருகிறார்கள்.*



**

*🛡சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண் : 145 பள்ளிக்கல்வித் (தொ.க3(2)துறை நாள்.20.08.2019-ன் படி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அதே வளாகத்தில்  உள்ள உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது.*



**

*🛡அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின்  மாநில இயக்ககம் வெளியிட்டுள்ள ந.க.எண்.2448B7/ SS/BRC/2019 நாள் : 07.08.2019 -ன் படி குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலைப்பள்ளிகள் இருக்கும் என்றும் அக்குறுவள மையங்களில் இடம்பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளைக் கண்காணிக்கும் அதிகாரம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.*



**

*🛡ஒரே வளாகத்தில் செயல்படும் வெவ்வேறு பள்ளிகளுக்கு வேறுவேறு தலைமை ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், குறுவள மையங்களில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் உள்ள நிலையிலும் இவ்வாறான உத்தரவு என்பது தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் செயலாகவே கருதப்படும்.*



**

*🛡மேலும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்க வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்னொரு பள்ளியை கண்காணிப்பார் என்பதும் , ஆய்வு செய்வார் என்பதும் பொருத்தமானதல்ல.*



**

*🛡மேலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டிய நிலையிலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலையிலும் கடுமையான பணிப்பளுவைக் கொண்டுள்ள நிலையில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளையும் நிர்வகிக்க வேண்டும் என்பது எவ்விதத்திலும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவாது.*



**

*🛡இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கை – 2019- ன் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வளாகக்கல்வி, பள்ளிகள் இணைப்பு போன்ற ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை தமிழக அரசு இப்போதே நடைமுறைப்படுத்துவதுபோல் தெரிகிறது.*



**

*🛡ஏற்கனவே, மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 46 அரசு ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கக்கல்வித்துறை தொடர்பாக வெளியிடப்படும் இதுபோன்ற அரசாணைகள் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் உதவாது என்பதால் மேற்படி அரசாணைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற்று தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித்துறையை பாதுகாக்க  வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



**

*🛡அவ்வாறு திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்.*



*_சென்னை._*

*_22.08.2019_*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*12.08.2019 குற்றாலம் மாநிலச்செயற்குழு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/12082019.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 22  நாள்  : 22.08.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*



**

*🛡12.08.2019 குற்றாலம் மாநிலச்செயற்குழு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும்  உள்ளது. மிக நெருக்கடியான காலகட்டத்தில் இயக்கச் செயல்பாடுகளை முன்னெப்போதையும் விட வேகத்தோடும், விவேகத்தோடும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக மாவட்டக்கிளைகள் மாநில அமைப்பிற்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை எவ்விதத் தவிர்ப்புமின்றி மாநிலச் செயற்குழு முடிவின்படி இன்றைக்குள்(22.08.2019) செலுத்தவேண்டியது மாவட்டக்கிளைகளின் தலையாய கடமையாகும். இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சனைகளுக்காக நீதிமன்றங்களின் வழியே சட்டப்போராட்டங்களையும்  நாம் நடத்தவேண்டியுள்ளது. எனவே, நிதி நிலுவைகளை மாவட்ட அமைப்புகள் மாநில அமைப்பிற்குச் செலுத்துவதற்கு ஏதுவாக வட்டார, நகரக்கிளைகள் மிகுந்த சிரத்தையுடன் மாவட்டக்கிளைகளுக்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை உடன் செலுத்தி உதவிட மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*



**

*🛡மாணவர்கள் வருகை இல்லை என்பதைக் காரணம் காட்டி கடந்த சில நாட்களில்  தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள 46  அரசுப்பள்ளிகள் தொடர்பான விவரங்களை மாவட்டக்கிளைகள் அறிக்கையாக மாநில மையத்திற்கு அளித்திட மாநிலச் செயற்குழு கேட்டுக்கொண்டதற்கேற்ப மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் செயல்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. மூடப்பட்டுள்ள பள்ளிகள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் திரட்டுவதற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் நேரடியாக மூடப்பட்ட பள்ளி அமைந்துள்ள கிராமத்திற்குச் சென்று கள ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் விரிவான அறிக்கையை அளித்திட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது. மேலும், 46 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டது என்பது தமிழகம் முழுவதும் 10 க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூடுவதற்கான முன்னோட்டம் என்பதால் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையையும் துல்லியமாகக் கணக்கிட்டு மாநில மையத்திற்குத் தெரிவித்திட வேண்டும். மேற்கண்ட பணியை இதுவரை நிறைவு செய்யாத மாவட்டக்கிளைகள் உடன் செயலாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*


**

*🛡“தேசியக்கல்விக்கொள்கை – 2019 ஜ   திரும்பப்பெறு” “மூடிய பள்ளிகளைத் திற”       “அரசுப்பள்ளிகளை  மூடாதே” “தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்காதே” ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் ஆறு முனைகளிலிருந்து  23.09.2019 முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள மாநிலச் செயற்குழு எடுத்த முடிவை வெற்றிகரமாக்க பல்வேறு களப்பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விரைவில் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான  கூட்டங்களை  நடத்தி அந்தந்த  மண்டலத்தில் பிரச்சாரப் பயணத்தை திட்டமிடும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் செல்லும் வழி, பயணத்திட்டம் ஆகியவற்றை மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்கூட்டியே ஆலோசித்து, திட்டமிட்டு மண்டல அளவிலான கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அந்தந்த மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கருத்துக்களை அறிந்து மண்டல அளவிலான பிரச்சாரப் பயணத்தை இறுதிப்படுத்திட அது ஏதுவாக அமையும்.*



**

*🛡அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறாத நம் இயக்கத் தோழர்களின் 17(ஆ) நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குத் தொடுத்திட ஏதுவாக வக்காலத்துப் படிவத்தில் அவர்களின் கையொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் மதுரை மாவட்டச் செயலாளர் முகவரிக்கு உடன் அனுப்பி வைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.* 

                                                                                                                           


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கரூர் மாவட்ட CEO அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/ceo.html


**

*🛡தேர்வுநிலை/சிறப்பு நிலை வழங்காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில்  வைத்துள்ளதைக் கண்டித்து, கரூர் மாவட்டம் CEO அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.*



**

*🛡கரூர் மாவட்டம் CEO , DE0, மற்றும் குளித்தலை மாவட்டம் DE0 வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.*



**

*🛡TNPTF மாநில மேனாள் தலைவரும், STFI பொதுக்குழு உறுப்பினருமான _தோழர்.ச.மோசஸ்_ அவர்கள் சிறப்பு உரை ஆற்றினார்.*



*💫தோழர் மோசஸ் அவர்களின் கண்டன உரை (வீடியோ)..*

👇👇👇👇👇👇👇👇

*_YOUTUBE LINK_*


https://youtu.be/eDrC3QAZ7nA


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26.09.2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/nmms-26092019.html


*🌟அரசுப் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு நடத்தும் என் எம் எம் எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 12000/-, 9,10,11,12 ஆம் வகுப்பு (9 ஆம் வகுப்பு முதல் இடைநிலை வரை) அதாவது 4000, 48000/- வரை கிடைக்கும்.*


*⚡விண்ணப்பிக்க கடைசி நாள்:*

*26.09.2019*



*⚡தேர்வு தேதி:*

*04-11-2019*



*⚡வலைத்தளம்:*

*www.bse.ap.gov.in*



*🌟உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த செய்தியை கூறி ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday, 21 August 2019

*(NTSE) தேசிய திறனாய்வு தேர்வு -Exam Date / Application / Proceedings*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/ntse-exam-date-application-proceedings.html


*🌟2019-2020 ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2019 நவம்பர் மாதம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.*


*🌟விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 07.09.2019 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.*


*🌟பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.09.2019. மேலும் கால அவகாசம் நீட்டிக்க படமாட்டாது.*


*🌟மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.*


*_PDF File (Full Details):_*

*Please click this link*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1d0tpG4oJ2PpXu6BKb9sRvIPBSSVN3CFR/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*சிவகங்கை மாவட்டத்தில் மூடிய 4 பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயற்குழுவில் தீர்மானம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/4.html


*🌟சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் _தோழர்.தாமஸ் அமலநாதன்_ தலைமையில் நடந்தது. மாநிலத் துணைத்தலவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_ மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_ மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஞான அற்புதராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஆரோக்கியராஜ்,_ மாவட்ட துணை செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்,_ மாவட்ட துணைத்தலைவர் _தோழர்.மாலா_ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*


_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._


*🌟சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியம் அம்மாபட்டினம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தம், இளையான்குடி ஒன்றியம் சுந்தனேந்தல், கண்ணங்குடி ஒன்றியம் பூதங்குடி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள களப்பிரச்சனையை ஆராய்ந்து தீர்வு கண்டு மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்திட கல்வித்துறை முன் வரவேண்டும்.*


*🌟அரசு பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும், தமிழ்வழி கிராமப்புற கல்வியை பாதுகாக் வேண்டியும், தேசியக்கல்விக்கொள்கை வரைவு 2019ல் உள்ள அபதங்களையும், ஆபத்துக்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டும் சென்று அதை திரும்ப பெறும் நோக்கில் செப்டம்பர் 23 முதல் தமிழகம் முழுவதும் 6 முனைகளில் இருந்து பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் சிவகங்கை மாவட்டத்தில் 7 இடங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*


*🌟மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இருந்து எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தால் பழைய பள்ளிக்கே மீள ஈர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.*


*🌟2019-2020 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து இறுதி தீர்ப்பை பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதோடு முரணான விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பொதுமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வேண்டும்.*


*🌟ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் குறுவள மையங்களின் தலைமையிடமாக இனிமேல் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கும் என்பதும், அப்பள்ளியின் தலைமையாசிரியர்  குறுவளமைய எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்வார் என்பதும் இத்திட்டத்தில் தேவையற்ற பல்வேறு குழப்பங்கைள விளைவிக்கும் என்பதால் தமிழக அரசு இம்முடிவை திரும்பபெற வேண்டும்.*


*🌟நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்திட வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் மொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளித்திட வேண்டும்.*


*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிவரன்முறை தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை உத்தரவுகள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளன. எனவே தொடக்கக்கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல் படி குறை தீர் முகாமை மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடத்திட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.*


*🌟பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளதைப்போல தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளை களையும் பொருட்டு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒரு நேர்முக உதவியாளரை நியமிக்க வேண்டும்.*


🤝தோழமையுடன்;


*_ஆ.முத்துப்பாண்டியன்_*

*மாவட்டச் செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*சிவகங்கை மாவட்டம்*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*எண் மறந்துவிட்ட / தொலைந்துவிட்ட NHIS அட்டையை இணையத்தில் தேடி, தரவிறக்கம் செய்வது எப்படி?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/nhis.html


*🌟உங்களின் NHIS அட்டை எண் நினைவில் இல்லாத சூழலில் அட்டை  தொலைந்துவிட்டால் கீழேயுள்ள இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.*



http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx


*🌟தற்போது திரையில் தோன்றும்* ```Insured Name, Birth Date, District, Mobile No, DDO Code, HOD No., Retirement Date, Office Type, GPF/CPS NO, Joining Date, Office Name``` *உள்ளிட்ட விபரங்களில் ஏதேனும் 3 விபரங்களை மட்டும் சரியாகத் தட்டச்சு செய்யவும்.*



*🌟பின்னர் மேற்கண்ட விபரங்களுக்குக் கீழே இருக்கும்* ```Search``` *பொத்தானை அழுத்தினால், NHIS ID Card Number உட்பட அனைத்து விபரங்களும் அதன் கீழாகத் தோன்றும்.*



*🌟இத்தோடே தொலைந்துவிட்ட / மறந்துவிட்ட NHIS அட்டையின் எண்ணைக் கண்டுபிடிக்கும் பணி முடிந்தது.*


*🌟இனி கண்டுபிடிக்கப்பட்ட / நினைவில் உள்ள NHIS எண்ணைக் கொண்டு NHIS அட்டையைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் வழிமுறைகளைத் தொடரவும்.*


*🌟கீழேயுள்ள இணையப் பக்கத்தில் சென்று* ```USER ID``` *-ல் உரிய கட்டங்களில் NHIS எண்ணையும் &* ```PASSWORD``` *-ல் பிறந்த தேதியையும் கொடுத்து* ```Login``` *செய்யுங்கள்.*



http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx


*🌟உங்களின் NHIS குறித்த அனைத்து விபரங்களும் புகைப்படத்துடன் திரையில் தோன்றும்.*


*🌟இடது மேல் புறத்தில் உள்ள* ```E-Card``` *என்பதை அழுத்தினால் உங்களின் NHIS அடையாள அட்டையின் (முன் & பின் பக்க) விபரங்கள் தோன்றும்.*


*🌟இதை நீங்கள் PDF கோப்பாக தரவிறக்கியோ / வண்ணப்புகைப்படமாக நகல் எடுத்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.*


*🌟இந்த அட்டை 30.06.2020 வரை செல்லுபடியாகும்.*



*YouTube Link:*

https://youtu.be/d5OlbGHfscU


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


📲தகவல் பகிர்வு;


*_TNPTF விழுதுகள்_*


*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*


*தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தொடக்கநிலை மாணவர்களுக்கான துளிர் திறனறித் தேர்வு அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_47.html


*🌟தொடக்கநிலை மாணவர்களுக்கான துளிர் திறனறிதல் தேர்வு 2019 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு ( தேர்வு நாள் : 02.11.2019)*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வுப் பரப்புரை - ச.மயில், பொதுச்செயலாளர், TNPTF*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/23-tnptf.html


**

*🛡தேனி, ஆக. 21 ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப் 23 முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் _தோழர்.மயில்_ தெரிவித்தார்.*



_தேனியில் அவர் கூறியதாவது:_


**

*🛡மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி, '46 அரசுப் பள்ளிகளை மூடி விட்டு நூலகமாக மாற்றுகிறோம்' என்கின்றனர். 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 1,850 பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது.*



**

*🛡அவ்வாறு செய்தால் தமிழ்வழிக் கல்வி, இலவச கல்வி கற்க முடியாது. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.*



**

*🛡ஒரு ஆசிரியர் வாரத்தில் ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கு 23 பாடங்களை நடத்த வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அவசியத்தையும், அரசின் 16 வகையான நலத் திட்ட உதவிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.*



**

*🛡மேலும் தேசிய கல்வி கொள்கையால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், திரும்ப பெற வலியுறுத்தியும் செப். 23 முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.*



**

*🛡சென்னை, வேலூர், தஞ்சை, திருச்சி, கரூர், தேனி மாவட்டங்களில் துவங்கி கரூரில் நிறைவு செய்வோம், என்றார்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм