Friday, 31 January 2020

*TNPTF - மூன்று நாட்கள் இரவு, பகலாக 17 (பி) நடவடிக்கைகளை ரத்து செய்ய நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.*

*TNPTF - மூன்று நாட்கள் இரவு, பகலாக 17 (பி) நடவடிக்கைகளை ரத்து செய்ய நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_TNPTF முக்கிய வெற்றிச் செய்தி_*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில்  கடந்த 29.01.2020 முதல் 31.01.2020 மூன்று நாட்களாக  நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கை*

*⚡இன்று கல்வித் துறை நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது*...

*⚡திரு. பி. மயில்வாகணன் அவர்களுக்கு பணி ஓய்வு நிறைவாக வழங்கி ...*

*⚡பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது...*

*_17 (பி) நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டது._*

**
*🛡மேலும்.. மாநிலம் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி ஓய்விற்கு முன்பாக இது போன்ற நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தொடராமல் முடித்து வைத்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு இப்போராட்டத்தின்  விளைவாக தமிழகம் முழுமைக்கும் கிடைத்துள்ளது..*

**
*🛡உசிலம்பட்டி TNPTF போராட்டத்தின் மூலமாக மிக முக்கியமான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற பெருமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை மட்டுமே சாரும் என்பதை வீரம் செறிந்த உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...*

🙏💐🙏💐🙏💐🙏💐
**
*🛡மேலும்.. இந்த காத்திருப்பு போராட்டத்தை வீரியத்துடன் நடத்திட மதுரை மாவட்டக் கிளைக்கு வழிகாட்டிய TNPTF பொதுச் செயலாளர் ... தோழர் ச.மயில் அவர்களுக்கும்*

**
*🛡நேரில் வந்து போராட்டத்தை சிறப்பித்த மாநிலத் தலைவர் தோழர்.. மணிமேகலை அவர்களுக்கும்..*

**
*🛡போராட்டத்தை உடனிருந்து வழிகாட்டிய மாநிலச் செயலாளர் தோழர்.தே. முருகன் அவர்களுக்கும்..*

**
*🛡இரண்டு நாட்களாக போராட்டத்தை உடனிருந்து நடத்திய மாநில துணைத் தலைவர் தோழர்.. ஜேம்ஸ் ரோஸ் அவர்களுக்கும்..*.

**
*🛡இறுதி நாளான இன்று போராட்டத்தில்  கலந்து கொண்டு தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு ...*

**
*🛡மேலும்  பள்ளிக்கல்வி இயக்குநர் .. தொடக்கக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோரிடம்  இன்று அலைபேசியில் பேசி போராட்டத்தை வெற்றிபெறச் செய்த நமது மேனாள் மாநிலத் தலைவர் தோழர்.. ச.மோசஸ்  அவர்களுக்கும்..*

*🙋‍♂️🤝இப்போராட்டத்தை உடனிருந்து வெற்றி பெறச் செய்த கள்ளர் பள்ளி மாவட்டக் கிளையின் தோழர்களுக்கும்...*

*🙋‍♂️🤝தேனி மாவட்டக்கிளைத் தோழர்களுக்கும்...*

*🙋‍♂️🤝திண்டுக்கல் மாவட்டக்கிளைத் தோழர்களுக்கும்...*

*🙋‍♂️🤝நேரில் வந்து வாழ்த்துரை வழங்கிய அனைத்துத் தோழமைச்சங்க  நிர்வாகிகளுக்கும்*

*👩‍🏫💪🤱மூன்று நாட்களாக போராட்டத்தில் சிறப்பாக முற்றுகையிட்டு .. இரவிலும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரவென்றும் பனியென்றும் பாராமல் களத்திலேயே இரவில் தங்கிய சிங்கப் பெண்களுக்கும்*

*🎥👮‍♂️ஊடகம் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கும்*

**
*🛡மதுரை மாவட்டக் கிளையின் சார்பாகவும், _TNPTF அயன்_ சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... தோழர்களே...*
💐🙏💐🙏💐🙏💐🙏

_🎯இவண்;_

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மதுரை மாவட்டக் கிளை...*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையினை புரிந்து செயல்பட வேண்டும் - கல்வித்துறைக்கு TNPTF விழுப்புரம் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!*

*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையினை புரிந்து செயல்பட வேண்டும் - கல்வித்துறைக்கு TNPTF விழுப்புரம் மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🤧மாணவர்கள் தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பள்ளிக்கு வந்த நிலையில், நாளைய (01.02.2020) தினம் 'பள்ளி வேலை நாள்' என்பது மாணவர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்.*

*🤧அதுவும் பள்ளி முடியும் தருவாயில் அறிவிப்பு கிடைக்கப்பெற்றால், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு  விட்ட நிலையில், தேடித்தேடி மறு அறிவிப்பு வழங்க வேண்டிய சூழல் உருவாகிறது.*

*🤧நாம் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்கிற குழந்தை உளவியலை புரிந்து கொள்ளவில்லையோ என்கிற கவலை வருகிறது.*

*🤧மேலும் இதுவரை ஆண்டு முழுவதும் பள்ளி வேலை நாட்கள் விவரம்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன் என்பதும் புரியவில்லை.*

*🤧வேலை நாட்கள் பட்டியல் வழங்கும் அதிகாரம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்தவரை ஆண்டு திட்டம் சிறப்பாக இருந்தது. தற்போது மாநிலப் பட்டியலுக்குச் சென்றதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல் உருவானது.*

*🤧கல்வித்துறை ஆசிரியர் நிலையிலிருந்து பார்க்கிறதா என்பதும் புரியவில்லை.*

*🤧இன்று 31.1.2020 மாலை 3.30 மணிக்கு பள்ளி சார்பில் 'நாளை பள்ளி விடுமுறை' என்றதும் மாணவர்களின் உற்சாக கூச்சல் நீண்ட தூரம் எதிரொலித்தது. அது நீண்ட நேரம் நீடிக்காமல் காணல் நீராகிப் போனது.*

*🤧தயவுசெய்து மாணவர்களின் மனநிலையிலிருந்து கல்வியை அனுக வேண்டுமென்று கல்வித்துறையை கேட்டுக்கொள்கிறேன்*

_🤧மன உளச்சலுடன்;_

*_இரா.சண்முகசாமி,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*விழுப்புரம் மாவட்டம்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday, 30 January 2020

*ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!*

*ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
   
*🤦‍♂️மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.*

*🤦‍♂️இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.*

*🤦‍♂️மேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.*

*🤦‍♂️மாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.*

*🤦‍♂️அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.*

*🤦‍♂️ஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.*

*🤦‍♂️ஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.*

*🤦‍♂️பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர்.*

*🤦‍♂️ஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.*

*🤦‍♂️நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.*

*🤦‍♂️எனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*17(B) நடவடிக்கையினை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலை TNPTF காத்திருப்பு போராட்டம்.*

*17(B) நடவடிக்கையினை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலை TNPTF காத்திருப்பு போராட்டம்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்ற அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) வழங்கப்பட்டது.*

**
*🛡நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் 17(B) யினை ரத்து செய்யாமல் கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

**
*🛡பலமுறை கோரிக்கை குறித்த மனு வழங்கியும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை, எனவே நேற்று 29.01.2020 உசிலை கல்வி மாவட்ட DEO அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

**
*🛡பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காத்திருப்பு போராட்டமாக மாறியது.*

*⚡மாநில செயலாளர் _தோழர் முருகன்_ தலைமையில்,*

*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர் சீனிவாசன்_

*⚡மாவட்ட தலைவர் _தோழர்ஞானசேகரன்_*

*⚡மாவட்ட செயலாளர் _தோழர் ஒச்சுக்காளை_*

*⚡மாவட்ட பொருளாளர் _தோழர் பெரியகருப்பன்_ ஆகியோர் முன்னணியில் நடைபெறுகிறது.*

*⚡மாவட்ட செயலாளர் _தோழர் ஒச்சுக்காளை_ அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/CN3lonMtOn8

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday, 22 January 2020

*பழிவாங்கும் நடவடிக்கையால் மறுக்கப்பட்டு வரும் TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தரின் ஓய்வூதியப் பலனை மீட்டெடுக்க குமரி மாவட்டக்கிளை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் அறிவிப்பு*

*பழிவாங்கும் நடவடிக்கையால் மறுக்கப்பட்டு வரும் TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர் பாலசந்தரின் ஓய்வூதியப் பலனை மீட்டெடுக்க குமரி மாவட்டக்கிளை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் அறிவிப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡 இடைநிலை ஆசிரியர்களின் மறுக்கப்பட்ட மத்திய அரசுக்கிணையான ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தி நமது இயக்கத்தால் 26.11.2018 அன்று அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.*

**
*🛡 இப்போராட்டத்தில் காலந்துகொண்டதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.சி.பாலசந்தர் அவர்களுக்கு 17(ஆ) குறிப்பானை வழங்கப்பட்டது.*

**
*🛡 தோழர் அவர்கள் 31.05.2019-ல் ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 8 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது.*

**
*🛡 பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும் மற்றும் இதேநிலையில் பல மாவட்டங்களில் வழங்கிய 17(ஆ) ரத்து செய்யப்பட்ட உத்தரவுகள் சமர்ப்பித்த போதிலும், பழிவாங்கும் நோக்குடன் திருவட்டார் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒருசில ஆசிரியர் விரோத விசுவாச ஊழியர்களின் ஆலோசனையின் பேரில், தோழரின் ஓய்வூதியப் பலன்களை மறுக்கும் விதமாக 17(ஆ) ரத்து செய்யப்படாமல் உள்ளது.*

**
*🛡 மேலும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தொலைபேசியில் பலமுறை 17(ஆ) ரத்து செய்ய சொன்னதைக் கூட உதாசீனப் படுத்தி தொடர்ந்து பழிவாங்கும் நோக்கோடு திருவட்டார் கல்வி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.*

**
*🛡 எனவே, மேற்படி _17(ஆ)-வினை ரத்து செய்யும் வரை, 23.01.2020 வியாழன் முற்பகல் 10:00 மணி முதல் திருவட்டார் மாவட்டகல்வி அலுவலகத்தில்_ (இருப்பு குழித்துறை) _உள்ளிருப்புப் போராட்டம்_ நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டக்கிளை முடிவாற்றியுள்ளது.*

**
*🛡 இயக்க முடிவினை வெற்றி பெறச் செய்ய தோழமை அமைப்புகளின் ஆசிரியர்கள் உட்பட அனைத்து தோழர்களும் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தோழர்.கே.சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தேர்வு மையத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கை - TNPTF பொதுச்செயலாளர்*

*தேர்வு மையத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கை - TNPTF பொதுச்செயலாளர்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு ஆசிரியர்களின் கோரிக்கையல்ல.*

**
*🛡 ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சின்னஞ்சிறு மாணவர்களின் எதிர்காலக் கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும் _ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை._*

**
*🛡 அது நிறைவேறும்வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓயாது. _தொடர்ந்து களத்தில் நிற்கும்!_*
     
சென்னை.
21.01.2020

_🤝தோழமையுடன்,_

*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

📳тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 21 January 2020

*அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவிப்பு; பயிற்சியின்றி ஆன்லைன் சம்பள பில் கடினம் - நாளிதழ் செய்தி*

*அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவிப்பு; பயிற்சியின்றி ஆன்லைன் சம்பள பில் கடினம் - நாளிதழ் செய்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🗞ஆன்லைனில் ஆசிரியர்களின் சம்பள பில் அனுப்ப வலியுறுத்தல்*

*🗞சிவகங்கை : அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள பில்லை ஆன்லைனில் அனுப்ப கருவூலத்துறை வலியுறுத்துகிறது. ஆனால், அதற்குரிய பயிற்சி இல்லாததால் பில் போட முடியாமல் தவிக்கின்றனர்.*

*🗞மாவட்டத்தில் அரசு ஊழியர், பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆன்லைனில் சம்பள பில் அனுப்பும் திட்டத்தை கருவூலகத்துறை அறிமுகம் செய்துள்ளது. சம்பள பில் தயாரிக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கருவூலகத்துறை பயிற்சி அளித்துள்ளது. பயிற்சி பெற்றவர்கள் ஆன்லைனில் சம்பள பில்லை போட்டு, அதற்கான குறிப்பாணை எண்ணை அந்தந்த சம்பளம் வழங்கும் கருவூலகத்தில் வழங்கினால், மாதந்தோறும் சம்பளம் வழங்குவர்.*

_உதவி பெறும் பள்ளிக்கு சிக்கல்:_

*🗞அதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான பயிற்சியை கருவூலகத்துறை அலுவலர்கள் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. 2020 மார்ச் முதல் கட்டாயம் ஆன்லைனில் தான் சம்பள பில் வழங்க வேண்டும் என அரசு கருவூலகத்துறை அறிவித்துள்ளது.*

*🗞ஆனால், முறையான பயிற்சி வழங்காமல், ஜன., மாத சம்பள பில்லையே ஆன்லைனில் அனுப்புமாறு, அரசு உதவி பெறும் பள்ளிகளை வற்புறுத்துகின்றனர்.*

*🗞இதனால்,ஆன்லைனில் சம்பள பில் போடுவதில் சிக்கல் ஏற்பட்டால், நாளைடைவில் சம்பள உயர்வு, ஈட்டிய விடுப்பு பில் போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டு விடும் என அஞ்சுகின்றனர். எனவே முறையான பயிற்சி அளித்த பின்னரே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள பில்லை ஆன்லைனில் அனுப்ப கருவூலகத்துறை உத்தரவிடவேண்டும் என அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்*

*_பயிற்சி அளிக்க நடவடிக்கை:_*

_கருவூலகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:_

*🗞அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலர்களை சம்பள பில் வழங்கும் அதிகாரிகள் பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் சென்றனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே உரிய பயிற்சி அளித்து ஆன்லைனில் சம்பள பில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.*

*_தினமலர் நாளிதழ் செய்தி_*
_பதிவு செய்த நாள்: ஜன 21,2020 01:46_

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 20 January 2020

*நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முடிவு..!*

*நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முடிவு..!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎯தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதை கண்டித்து அரசு வழங்கிய நல்லாசிரியர் விருதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 19 January 2020

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - செய்தி துளிகள்*

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_வணக்கம் தோழர்களே!_

*🛡பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க (PKPI) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / செயற்பாட்டுக் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேன்று (18-1-2020) சனிக்கிழமை  நடைபெற்றது.*

*🛡13 மாவட்டங்களிலிருந்து 27 பேர் கலந்து கொண்டனர்.*

_அதில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவு:_

*🛡5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு திரும்பப் பெறக் கோரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க (PKPI) சார்பாக அனைத்து கல்வி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது.*

*🛡சுவர் எழுத்து மூலம் மக்களிடம்  பிரச்சாரம் செய்வது.*

*🛡ஜனவரி 26 அன்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவது.*

*🛡"Hashtag" மூலம் பரவலாகப்  பிரச்சாரம் செய்வது.*

*🛡அவரவர் முகநூல் பக்கத்தில், WhatsApp குழுக்களில் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் PKPI மாநிலக்குழு சார்பாக உருவாக்கிய "Hashtag" இங்கே பகிரப்பட்டுள்ளது.*

*🛡PKPI இல் இணைந்துள்ள அமைப்புகள், ஆதரவாளர்கள்,  செயல்பாட்டாளரகள் அனைவரும் இந்த Hashtag ஐ உடனடியாகப் பகிர்ந்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.*

_🤝பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கப் பணிகளில் எப்போதும் உங்களுடன்,_

*_Dr.வே.வசந்தி தேவி,_ தலைவர்.*

*_ஜெ.கிருஷ்ணமூர்த்தி,_ செயலர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 18 January 2020

*5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை மாணவர் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை மாணவர் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2020  நாள்: 18.01.2020*

**
*🛡5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை  மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் மதுரையில் நடைபெற்றது.*

**
*🛡மதுரை மாவட்டச்செயலாளர் _க.ஒச்சுக்காளை_ வரவேற்புரையாற்றினார்.*

**
*🛡மாநிலப் பொருளாளர் _க.ஜோதிபாபு_ வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*

**
*🛡வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும், இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரையாற்றினார்.*

**
*🛡ஜாக்டோ ஜியோ நடவடிக்கைகள் குறித்து அதன் நிதிக்காப்பாளர் _ச.மோசஸ்_ எடுத்துரைத்தார்.*

**
*🛡கூட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகில் எந்த நாட்டிலும் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இடைநிற்றல் அதிகரிக்கும். இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைப் தெரிவித்து வருகின்றனர்.*

**
*🛡ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் நலன்கருதி கொண்டு வரப்பட்ட திட்டம். எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்பது புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டம். எனவே, தமிழக அரசு  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

**
*🛡மேலும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட தேர்வு மையங்களாக உள்ள அவரவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சில மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்கள் கூறுவதும், 10, 15 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை அமைப்பதும் தவறானதாகும். எனவே இதுபோன்ற நடைமுறைகளை கல்வி அலுவலர்கள் கைவிடவும் மாநிலச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.*

**
*🛡ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.*

**
*🛡துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.*

**
*🛡கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
      
🤝தோழமையுடன்;
   
*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*                   *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
                                                    
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 14 January 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் வருகின்ற (18.01.2020) சனிக்கிழமை காலை 10 மணிக்கு, மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

**
*🛡மாநில செயற்குழு கூட்டமானது மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை, அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

_பொருள்:_

*⚡(1) வரவு - செலவு.*

*⚡(2) வேலை அறிக்கை.*

*⚡(3) 03.12.2019 - 05.12.2019 ஆசிரியர் சந்திப்பு இயக்கம் மற்றும் பெருந்திரள் முறையீடு - ஆய்வு.*

*⚡(4) 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் - பங்கேற்பு - ஆய்வு.*

*⚡(5) 11.01.2020 - மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் - ஆய்வு.*

*⚡(6) 24.02.2020 - STFI மற்றும் தோழமை அமைப்புக்கள் சார்பில் புதுடெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி - திட்டமிடல்.*

*⚡(7) அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டம் - 17(ஆ) நடவடிக்கைகள் - நடப்பு நிகழ்வுகள்.*

*⚡(8) மார்ச் - 8 சர்வதேச மகளிர் தினம் - திட்டமிடல்.*

*⚡(9) நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்.*

*⚡(10) பொதுச்செயலாளர் கொணர்வன.*

*⚡(11) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*⚡(12) இதர விஷயங்கள்.*

**    
*🛡அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*                               

**        
*🛡18.01.2020 சனிக்கிழமை காலை சரியாக 9 மணிக்கு மேற்குறித்த அதே இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
  
_🤝தோழமையுடன்;_

*_ச. மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்*  
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*   

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 7 January 2020

*அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நாளை (08.01.2020) - "தீரமுடன் பங்கேற்போம்" - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*

*அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நாளை (08.01.2020) - "தீரமுடன் பங்கேற்போம்" - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 01/2020 நாள்: 07.01.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡ஊழியர் நலன்களுக்கு விரோதமான தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.*

**
*🛡தேசநலனுக்கு எதிரான தேசிய கல்விக்கொள்கை 2019 ஐ திரும்பப் பெறுதல் வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் பொதுத்துறைப் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது.*

**
*🛡தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தேச நலன் சார்ந்த 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (08.01.2020) அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.*

**
*🛡தேசம்காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற 20 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அரசுப் போக்குவரத்து, ஆட்டோ, கால் டாக்சி, லாரி, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.*

**
*🛡தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட அகில இந்திய அளவிலான பத்து மத்திய தொழிற்சங்கங்களும், மாநில அளவிலான பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.*

**
*🛡தமிழகத்தைப் பொறுத்த அளவில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) அங்கம் வகிக்கும் 10 ஆசிரியர் அமைப்புகளும் பல்வேறு அரசு ஊழியர் அமைப்புக்களும் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புக்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடைபெற்றுள்ள அனைத்து அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் பங்கேற்ற பெருமைக்குரிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழுவில் முடிவாற்றியுள்ளது.*

**
*🛡தேசநலன், பொதுமக்கள் நலன், தொழிலாளர் நலன், ஊழியர் நலன், ஆசிரியர் நலன் சார்ந்த இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமையாகும். தேசநலன் காக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்று இயக்கம் எடுத்த முடிவை நிறைவேற்றும் நெஞ்சுறுதி கொண்ட தோழர்களைக் கொண்ட இயக்கம் நம் பேரியக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் நம் பேரியக்கத் தோழர்கள் நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் உறுதியோடு பங்கேற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

**
*🛡வழக்கம் போல் தமிழக அரசு போராட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தனது ஊழியர்களை, ஆசிரியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தொழிலாளர் வர்க்கம் இருப்பதை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் கட்டுக்கடங்காத காளைபோல் கண்மூடித்தனமாக சென்று கொண்டிருக்கின்றன. தறிகெட்டுச் செல்லும் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறாக நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றி உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் தான் உள்ளது.*

**
*🛡இது தேசநலனுக்காக போராட்டம். நமக்கான போராட்டம். நம் எதிர்கால சந்ததியினருக்கான போராட்டம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மீட்புப் போராட்டம். ஏழை எளிய மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வலிமையான போராட்டம். இந்த தேசம் தழுவிய போராட்டக்களத்தில் நிற்கும் தொழிலாளர் சமுத்திரத்தில் ஒரு சிறு துளியாய் நாமும் பங்கேற்போம்.*

**
*🛡'பொது வேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்குத் தயார் செய்கிற ஒரு இராணுவப்பயிற்சி. அப்பெரும் போராட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது. உழைக்கும் மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் பாலமே, பலமே பொது வேலை நிறுத்தம்!"*

*_'இது முடிவுமல்ல... ஆரம்பமுமல்ல..._*

*_இது ஒரு தொடர் புரட்சிப்பயணம்!_*

*_பயணத்தைத் தொடர்வோம்..._*

*_ஒற்றை இலக்கோடு!"_*
     
_🤝தோழமையுடன்;_
                           
*_ச.மயில்_*   *பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

      
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 6 January 2020

*5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்*

*5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு, வில்லவன் நேர்காணல்*

*🤺இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.*

*🤺இந்தக் கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, அதில் அமல்படுத்தப்படவிருக்கும் ஏழை மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அடிமை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.*

*🤺பிஞ்சு வயதில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பது அவர்களது வாழ்விலும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் குறித்து மன நல ஆற்றுப்படுத்துனராக பள்ளி மாணவர்கள் மத்தியில் பணிபுரியும் வில்லவன் அவர்கள் வினவு இணையதளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.*

*🤺இந்த நேர்காணலில் இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார். மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளையும் விளக்குகிறார் வில்லவன்.*

*🎥வில்லவன் அவர்களின் காணொளி தொகுப்பு:*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/4-289npDT50

*_பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள்!!_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 5 January 2020

*செல்லாத தபால் வாக்கிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களே காரணம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (சிவகங்கை மாவட்டம்) குற்றச்சாட்டு*

*செல்லாத தபால் வாக்கிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களே காரணம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (சிவகங்கை மாவட்டம்) குற்றச்சாட்டு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**                        
*🛡தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் கிராம ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.*

**
*🛡இதில் ஊரகப்பகுதிகளில் வாக்காளராக உள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்தியிருந்தனர். கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணுகையில் 97 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.*
                       
_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது;_
                       
**
*🛡தபால் வாக்குகள் அளிப்பதில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு நடைமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அஞ்சல் வாக்குகள் பெரும்பாலானவை செல்லாததது என அறிவித்தது ஆசிரியர்கள் மத்தியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கு கூட தங்கள் வாக்குகளை முறையாக செலுத்த தெரியவில்லை என விமர்சனம் எழுந்ததற்கு முழு காரணம் தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர்களையே சாரும்.*
                       
**
*🛡தபால் வாக்கு என்பது சாதரணமாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது போன்றது அல்ல. இதில் ஊரகப்பகுதிகளில் வாக்காளராக உள்ள ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்துவதற்கு உரிய படிவங்களை வழங்குவதிலும், தேர்தல் பணிச்சான்று பெறுவதிலும் மாவட்ட முழுவதும் நடந்த பயிற்சி மையங்களில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட அறிவுறுத்தபட்டதால் வாக்குப்பதிவு அலுவலர்களாகிய ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.*

**
*🛡உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களிடம் படிவம் 15 ஐ பெற்றுக்கொண்டு தேர்தல் பணிச்சான்றானபடிவம் 16 ஐ வழங்க வேண்டும். படிவம் 16 ஐ பெற்ற ஆசிரியர்கள் தங்கள் வாக்கு உள்ள பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கி படிவம் 17ஆன உறுதிமொழி படிவம் மற்றும் வாக்குச்சீட்டு அதற்கான உறைகளை பெற்று, தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்கு சீட்டினை தனி உறையிலும், பணிச்சான்று மற்றம் உறுதிமொழி படிவத்தினை தனியாகவும் வைத்து அதற்கென வழங்கப்பட்ட பெரிய உறையினுள் வைத்து வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும்.*

**               
*🛡இந்த நடைமுறை சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் மாறுபட்டதாக இருக்கும். எனவே வாக்களிக்கும் முறை குறித்து தேர்தல் பயிற்சி வகுப்பில் தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும்.*

**
*🛡ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இரண்டு கட்ட தேர்தல்களிலும் ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டதால் தபால் வாக்குகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.*

**
*🛡பல இடங்களில் பணிச்சான்று மற்றும் தபால் வாக்கிற்காக ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.*

**
*🛡ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்கு செலுத்தும் நடைமுறைகள் மாறுவதாலும், நடைமுறைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துக்களாலும், முறையான வழிகாட்டுதல்களை வழங்க தவறியதாலும் பெரும்பாலானவாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களே ஏற்க வேண்டும் அதை விடுத்து ஆசிரியர்களுக்கு வாக்குகள் கூட அளிக்க  தெரியவில்லை என்ற கருத்தை பொதுவெளியில் நம்ப வைக்க முயற்சிப்பதையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தேவையற்ற காரணங்களை கூறி அலைகழிப்பதோடு அவர்களை அடிமைகள் போல் நடத்த முயற்சிப்பதை இனி வரும் தேர்தல்களில் கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday, 1 January 2020

*புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, 2020 ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பங்கேற்போம்! தேச நலன் காப்போம்! - பொது வேலைநிறுத்தம் மாதிரி துண்டுப்பிரசுரம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்   உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, 2020 ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பங்கேற்போம்! தேச நலன் காப்போம்! - பொது வேலைநிறுத்தம் மாதிரி துண்டுப்பிரசுரம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*_______மாவட்டக்கிளை*

*_புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்   உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக,_*

*2020 ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பங்கேற்போம்! தேச நலன் காப்போம்!*

*_அன்புமிக்க ஆசிரிய சகோதர, சகோதரிகளே!_ வணக்கம்.*

**
*🛡மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் எதிர்த்து இந்திய தேசத்தில் உள்ள கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள், மாநில அளவிலான தொழிற்சங்கங்கள், பி.எஸ். என்.எல்., ரெயில்வே, காப்பீட்டுத்துறை பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் அமைப்புகள் கலந்து கொள்ளும் அகில இந்தியப் பொதுவேலை நிறுத்தம் 08.01.2020 அன்று நடைபெற உள்ளது.*

_ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு:_

**
*🛡தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த தேசபக்தப் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன. அகில இந்திய அளவில் மிகப்பெரிய பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும்  (STFI) இப்போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளது. இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், தமிழகத்தில் வலிமை மிக்க ஆசிரியர் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும், தேசநலன், ஆசிரியர் நலன், மாணவர்நலன், கல்விநலன் காத்திட சமரசமற்ற தொடர் களப்போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் மகத்தான ஆசிரியர் இயக்கமாம் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது.*

புதிய ஓய்வூதியத் திட்டம்:_

**
*🛡இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 336ன் 17வது பிரிவு ஓய்வூதியம் சட்டப்பூர்வமானது என்று அழுத்தமாகக் கூறியுள்ளது. ஆனால் இன்று மத்திய மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பினைக் கைகழுவிக் கொண்டிருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிர்க்கதியாய், நடுத்தெருவில் நிறுத்தி வைத்து மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொடூரமான நிலையை முறியடித்து புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டிட 08.01.2020 அகில இந்தியப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது நமது தலையாய கடமையாகும்.*

_தேசிய கல்விக் கொள்கை - 2019:_

**
*🛡இன்று தேசிய கல்விக் கொள்கை - 2019 என்ற பெயரில் கல்வியில் மதத்தைக் கலக்கும் விஷ முயற்சிகள் தற்போது வேகம் பெற்றிருக்கின்றன. இந்தியா போன்ற பரந்து விரிந்த மதச்சார்பற்ற தேசத்தில் இவ்வாறான நிலை என்பது தேச ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தி விடும் என்று நடுநிலையாளர்களும், நல்லவர்களும் அஞ்சுகிறார்கள். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பதும், மத்திய அரசு அதை அமல்படுத்துவதற்கு முன்பே தமிழக அரசு அதில் உள்ள முக்கிய அம்சங்களை அமல்படுத்துவதும் தேசத்தின் எதிர்காலக் கல்வியை நாசப்படுத்தும் முயற்சிகளாகும். _வேலை நிறுத்தம் ஏன்?_*

**
*🛡ஜனவரி 8 வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியம் என்ன என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுயசிந்தனையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. தொழிற்சங்க இயக்கங்கள் முன்வைத்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாத நிலையில் தேசநலன் காக்கும் இப்போராட்டம் நடைபெறுகிறது.*

_கோரிக்கைகள்:_

**
*🛡புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிடுதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 3000 ரூபாயாக உயர்த்துதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.21000 ஆக உயர்த்துதல், நாட்டின் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து உற்பத்தி, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீட்டைத் தவிர்த்தல் உள்ளிட்ட தேசநலன், மக்கள்நலன், ஆசிரியர் அரசு ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக நடைபெறும்  2020 ஜனவரி 8 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில்; கலந்து கொள்வது என்பது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமையாகும்.*

*_நம்முடைய எதிர்கால நலன் மற்றும் தேசநலன் காக்கும் இப்போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்போம்!_*
*_வெற்றி பெறுவோம்!_*

_இவண்_

*மாவட்டப் பொருளாளர்*       *மாவட்டச் செயலாளர்,*        *மாவட்டத் தலைவர்*

🗝ayaneducationnews.blogspot.com