Thursday, 28 February 2019

*CPS ஆசிரியர் அமரர்.சிவா-வின் இல்லத்திற்குப் பங்களிப்போம்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/cps.html


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


*_அறம் செய்! கரம் கொடு!!_*


_ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறைமீண்ட இளம் போராளியும்,_


🌟புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், *கூம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான திரு.சிவா* அவர்கள், *24.02.2019* அன்று *இயற்கை எய்தினார்.*


🌟அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தல் என்பதோடு நில்லாது, *நம்மாலான பங்களிப்பினைச் செலுத்த வேண்டியது சக CPS பாதிப்பாளர்களான நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமையாக உள்ளது.*


🌟அமரர்.சிவா-வின் இல்லத்தாருக்கு *நிதிப் பங்களிப்பு செய்ய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்* கீழேயுள்ள அவரது *மனைவியின் வங்கிக் கணக்கில் தங்களின் பங்களிப்பைச் செலுத்தலாம்.*


*⚡Acc. No.:*

084801000045805



*⚡NAME :*

ESWARIAMMAL S

(W/o Siva)



*⚡Bank :*

INDIAN OVERSEAS BANK



*⚡Branch :*

SANKARANKOIL



*⚡IFSC :*

IOBA0000848



*🌟ஓய்வூதியமில்லா CPS-ஐ முழுமையாக ஒழித்துக்கட்டி பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தும் நாள் வரையில்,*


*🌟நாம்  நமது களப் பங்களிப்பையும், இதுபோன்ற எதிர்பாரா இன்னல் வேளையில் நிதிப் பங்களிப்பையும் தொடர்ந்து செலுத்தி வருவோம்!.*


*🌟புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நிதி பங்களிப்பினை கொடுக்க உள்ளார்கள் எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிற ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் பிற மாவட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் இயக்கங்கள் மேற்காண் வங்கி கணக்கில் நிதி பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.* 


*📧தகவல் பகிர்வு;*

_செல்வ.ரஞ்சித்குமார்_


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday, 21 February 2019

*"சர்வதேச தாய்மொழி தினம் (பிப்பரவரி 21)" - கவிதை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/21.html


*கவிஞர்.நா.டில்லிபாபு, இடைநிலை ஆசிரியர் அவர்கள் இயற்றிய "சர்வதேச தாய்மொழி தினம்" கவிதை*



*கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

*👇👇👇👇👇👇👇*

https://tnptfayan.blogspot.com/2019/02/21.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 18 February 2019

*ஜாக்டோ ஜியோ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_18.html



*_ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"_*


*🌟அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*



*🌟அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?*


*🌟BE,  MBBS, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*


*🌟போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கலாமே?


*🌟தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி*


*🌟வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*


*🌟வழக்கு  வருகின்ற 25 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







Wednesday, 13 February 2019

*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(e) ன் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மீளப் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/17e_13.html


*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 22.01.2019 முதல் சில அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.*



*🌟தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுக்கள் தொடங்கப்படவுள்ளதாலும், 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையிலும்  மாணவர் நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களை மீளப் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

   


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(e) ன் படி பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்குப் பாதகமின்றி பணியில் சேர அனுமதி - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/17e.html


*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 22.01.2019 முதல் சில அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.*


*🌟போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களைத் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளில் விதி 17(e) ன் கீழ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.*



*🌟தற்போது பள்ளி மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் மாணவர்களின் கல்வி நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை அவர்கள்மீது எடுக்கப்படவுள்ள துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் இறுதி ஆணைக்கு உட்பட்டவர் என்ற நிபந்தனையின் பேரில் உடன் மீளப்பணி அமர்த்துதல் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
   

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகள் ரத்து*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_13.html


*🌟ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு*


*🌟1186 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ரத்து என தகவல்*


*🌟பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில்*


*⚡தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 577 பேர்*


*⚡உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 609 பேர்*


*🌟சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமே ரத்து, துறை ரீதியான ஒழுங்கு 17(B)  நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என தகவல்*


*🌟ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியிலேயே பணியாற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.*


*🌟ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து - தந்தி தொலைக்காட்சி செய்தி காணொளி*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/i8V8F1Rn76Y


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Saturday, 9 February 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் வேண்டுகோள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_9.html



*_TNPTF மாவட்டச் செயலாளர்களின் கவனத்திற்கு_*


*🌟நாளை (10.02.2019) மதுரையில் நடைபெறும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திற்குத் தாங்கள் வருகை தரும்போது கீழ்க்கண்ட விவரங்களை கொண்டுவர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


*⚡தங்கள் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறுதிநாள் (30.01.2019) வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை*


*🌟அதில் TNPTF உட்பட சங்கவாரியாக எண்ணிக்கை*


*⚡தங்கள் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் இதுவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை*


*⚡அதில் TNPTF உட்பட சங்கவாரியாக எண்ணிக்கை*


*⚡தங்கள் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போரட்டத்தில் இதுவரை 17(B) பெற்றுள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை*


*🌟அதில் TNPTF உட்பட சங்கவாரியாக எண்ணிக்கை*


*🌟மேற்கண்ட விவரங்களைத் தவறாது கொண்டுவர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


*🤝தோழமையுடன்*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*பள்ளிகளில் Attendance App - ன் மூலமாக ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/attendance-app.html


*🌟 Attendance App - ல் மாணவர்களின் வருகைப் பதிவு அனைத்து வகை அரசு / உதவிபெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.*


*🌟மாணவர்களின் வருகைப் பதிவுகளையும் அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளையும் தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும்.*


*🌟மேலும், ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை தலைமையாசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டிட வேண்டும். ஆசிரியர்களின் வருகைப் பதிவில் தவறுகள் இருப்பின் அப்பள்ளியின் தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*


*🌟Attendance App - ன் பதிவுகளை தினந்தோறும் Monitor செய்ய CEOs, DEOs, BEOs மற்றும் EMIS District Coordinators கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟ஆசிரியர்களின் வருகைப்பதிவு பதிவுசெய்யும் படி முறைகள் (Step by Step) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*


*🌟எனவே அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இப்படி முறையினைப் பின்பற்றி அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் ஆசிரியர்களின் வருகைப்பதிவினை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.*


*_Step by Step - PDF:_*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1m1uQxf6t73SA2qUbJsviEI8Kyly00O4-/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Friday, 8 February 2019

*ஜாக்டோ ஜியோ முதல்வரிடம் வேண்டுகோள் - தேர்தல்கால அறிவிப்புகளாக இல்லாமல்! தீர்வுகாணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்!!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post.html


*🌟பட்ஜெட் அறிக்கை தேர்தல்கால அறிவிப்புகளாக இல்லாமல் தீர்வுகாணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்.*


*🌟முழு விபரம் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!...*

👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1BpGo-YqIgkzWXyVS40Q1hwvc1DGId4fP/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Thursday, 7 February 2019

*ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்ட நடப்பு நிகழ்வு குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_37.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் (10.02.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*


*_கூட்டப்பொருள்:_*


*⚡ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - நடப்பு நிகழ்வுகள்,*


*⚡19.02.2019 - டெல்லி பேரணி,*


*🌟அனைத்து மாவட்ட செயலாளர்களும், மாநில பொறுப்பாளர்களும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*



*🤝தோழமையுடன்*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 







*புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??? - அறிந்துகொள்ள எளிய வழிமுறை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_7.html


*🌟வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்க*


*⚡கீழே உள்ள  _link__click_ செய்யுங்கள்*


http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx


*⚡உங்கள் _Voter ID number_ ஐ பதிவிடுங்கள்*


*⚡பிறகு capcha வை உள்ளவாறு பதிவிடுங்கள்*


*⚡"SUBMIT" என்ற option ஐ Click செய்யுங்கள்*


*🌟வாக்காளர் பட்டியலில் உங்கள் _பாகம் எண், வரிசை எண், முகவரி_ போன்ற அனைத்து விவரங்களும் வரும்.*


*🌟உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் டிலிட் செய்யபட்டுள்ளது*


*🌟எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணபித்து கொள்ளுங்கள்*


https://www.nvsp.in/forms/Forms/form6?lang=en-GB


*🌟☝☝☝☝☝☝☝ மேலே உள்ள link ஐ கிளிக் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Wednesday, 6 February 2019

*ஜாக்டோ-ஜியோ அமைச்சரக சந்திப்பு விபரம் : TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_6.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 17*

*நாள் : 06.02.2019*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*



*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும்,  _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ்,  திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோரின் கூட்டுத் தலைமையில்  (04.02.19) திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி,*


*🌟 _ஜாக்டோ-ஜியோ-வின்  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றைய (05.02.2019) தினம் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களையும், மதிப்புமிகு  இயக்குநர்களையும்_ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.*


*🌟இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான _இன்று (06.02.2019) முற்பகல் 11.00 மணிக்கு மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம்_ அவர்களை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்க துணை முதல்வர் அவர்களே நேரம் ஒதுக்கியிருந்தார்.*


*🌟இன்று 06.02.19 புதன்கிழமை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்  துணைமுதல்வர்  அவர்களை சந்திப்பதற்காக தலைமைச்செயலகம் வந்தனர், ஆனால் துணை முதல்வர் அவர்கள் இன்று காலை அவசர வேலை காரணமாக  மதுரை சென்று விட்டபடியால் _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_  உடனான சந்திப்பு நடந்தது.*


*🌟சந்திப்பில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து _முதலமைச்சர், துணை முதலமைச்சர்_ இருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை திரும்பியதும் விவாதித்து விட்டு அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் என _கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன்_  அவர்கள் உறுதியளித்துள்ளார்.*


*🌟மேலும் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் கல்வித் துறை அமைச்சர் சந்தித்திப்பில்,  ஆசிரியர்கள் மாறுதல் உத்தரவுகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி கல்வித் துறை செயலாளரிடம் கூறுவதாகவும் கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.*


*🌟எனவே மாறுதல் உத்தரவை அஞ்சல் வழியில் பெற்றாலும் அவர்கள் முன்பு பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.*



*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday, 5 February 2019

*துணை முதல்வருடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு விபரம் : TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_5.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16*

*நாள் : 05.02.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*


*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும்,  _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ்,  திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோரின் கூட்டுத் தலைமையில் நேற்று (04.02.19) சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின்படி,*


*🌟 _ஜாக்டோ-ஜியோ-வின்  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றைய தினம் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர்_ உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.*



*🌟இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக _இன்று (05.02.2019) பிற்பகலில் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம்_ அவர்களை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.*


*🌟சிறைப்படுத்தப்பட்ட தோழர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மற்றும் பணியிட மாறுதல் குறித்த நடவடிக்கைகளையும் கைவிட வலியுறுத்தும் கோரிக்கை மனுவினை ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் _திரு.மோசஸ் அவர்கள் வழங்கி கோரிக்கைகள் குறித்தும் பேசினார்._*



*🌟நிதிநிலை அறிக்கை வரும் 8-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பணிச் சூழல் மத்தியில், நிதித்துறையையும் கவனித்து வரும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்கள் நமது கோரிக்கைகள் குறித்து கேட்டுக் கொண்டதோடு மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.*


*🌟மேலும், நாளை (06.02.2019) முற்பகல் 11:00 மணியளவில் மீண்டும் சந்திக்க வருமாறு ஜாக்டோ-ஜியோவிற்கு நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.*


*🌟இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.00 மணிக்கு DPI சென்று இயக்குநர்களை சந்திக்க உள்ளார்கள்*



*🌟மூன்றாம் நாள் அமைச்சரகச் சந்திப்புகளுக்காக ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.*


*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 4 February 2019

*பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை ஜாக்டோ ஜியோ ஓயாது - TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_67.html


*🌟ஜாக்டோ-ஜியோ வின் சார்பாக இன்று மாண்புமிகு அமைச்சர்கள் _திரு. ஜெயக்குமார்,_ _திரு. செங்கோட்டையன்,_ பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் துறை செயலாளர் ஆகியோரிடம் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்/பணியாளர்கள்/ஆசிரியர்கள் மீதான குற்றவியல் /தற்காலிக பணிநீக்கம்/பணிமாறுதல் ஆகிய நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக் கொண்டு அனைவரும் பணியில் சேர உத்திரவிடுமாறு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.*


*🌟அவர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வரிடம் கொண்டு சென்று நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.* 


*🌟நாளை மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை சந்திக்க ஜாக்டோ ஜியோ முயற்சித்து வருகிறது.*


*🌟பாதிக்கப்பட்ட அனைவரையும் எல்லா வகையிலும் பாதுகாக்க மாவட்ட ஜாக்டோ-ஜியோ  மாநில ஜாக்டோ ஜியோ ஆலோசனை படி இணைந்து பணியாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*


*🌟பாதிக்கப்பட்ட  அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்கும் வரை  ஒருங்கிணைப்பாளர்கள்  தொடர்ந்து சென்னையிலிருந்து  அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அமைச்சர்கள் மற்றும் செயலாளர் உடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு சுமூகச் சூழலை ஏற்படுத்தியுள்ளது : TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf_4.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 15*

*நாள் : 04.02.2019*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*



*🌟 _ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்_ இன்று (04.02.19) சென்னையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பி அகில இந்திய செயற்குழு உறுப்பினரும்,  _ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளருமான திரு.மோசஸ்,  திரு.வெங்கடேசன் மற்றும் திரு.சங்கர பெருமாள்_ உள்ளிட்டோர் கூட்டுத் தலைமை ஏற்றனர்.*



*🌟இக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்து _சிறைப்படுத்தப்பட்ட தோழர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மற்றும் பணியிட மாறுதல் குறித்த நடவடிக்கைகளையும் கைவிட வலியுறுத்தி_ மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.*


*🌟அதன்படி இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் _மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன்_ அவர்களையும் _மாண்புமிகு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார்_ அவர்களையும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.*


*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை இன்றைய கூட்டத் தலைவர் தோழர்.மோசஸ் அவர்கள் அமைச்சர்களிடம் வழங்கினார்.*


*🌟அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எப்பொழுதும் தாங்கள் ஆசிரியர்களுக்கு உற்ற துணையாக இருப்போம் என்றும் தமது கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் உறுதி அளித்தனர்.*


*🌟இதனை தொடர்ந்து _மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ்_ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் பிரச்சினைகள் களைந்து நாம் இணைந்து செயலாற்றுவோம் என்று உறுதியளித்தார்.*


*🌟அமைச்சர் பெருமக்கள் மற்றும் முதன்மைச் செயலாளர் உடனான இன்றைய சந்திப்பு நேர்மறையான முறையில் அமைந்தது.*


*🌟இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கைகள் குறித்து பேச நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.*


*🌟ஜாக்டோ-ஜியோவின் இன்றைய நடவடிக்கைகள் சுமுகமான களச்சூழலுக்குள்ளாக நம்மை இட்டுச் சென்றுள்ளது.*



*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று (04.02.2019) முதல்வரை சந்திக்க தலைமைச்செயலகம் செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது - ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் தோழர். ச.மோசஸ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://youtu.be/HaQBrgxI8Vs


https://tnptfayan.blogspot.com/2019/02/04022019.html


*🌟ஜாக்டோ ஜியோ கடந்த ஜனவரி 22 ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை அறிவித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியது.*


*🌟மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கினங்கவும், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் தேர்வு நேரம் என்பதாலும் போராட்டத்தினை ஜனவரி 29 ம் தேதி மாலை தற்காலிகமாக ஒத்துவைப்பது என கூட்டத்தில்  முடிவாற்றப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.*


*🌟ஜனவரி 30 ம் தேதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தாங்கள் பணிபுரிந்த பள்ளியில் சேர விடாமல் பணி இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.*


*🌟ஜாக்டோ ஜியோ முழு முயற்சியின் காரணமாக பணி இடமாற்ற ஆணையினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயக்குநர் அவர்கள் வாய்மொழி உத்தரவு பிரப்பித்துள்ளார்.*


*🌟மேலும் போராட்டத்தில் சிறை சென்று பிணையில் வெளிவந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளது*


*🌟சிறை சென்று தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் இடம் காலிப்பணியிடமாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்கள்.*


*🌟இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் வாங்கிய நிலையிலும் 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணியில் சேர விடாமல் அலுவலர்கள் தடுப்பது, பணியிடமாற்றம் செய்யப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது, எனவே முதல்வர் அவர்கள் தலையிட்டு அனைவரையும் பணியில் சேர உத்தரவிட ஜாக்டோ ஜியோ முதல்வர் அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டது.*


*🌟இன்று காலை  (04.02.2019) ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் தோழர்.ச.மோசஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*


*🌟கூட்டத்திற்கு பின் இன்று பிற்பகல் தலைமைச்செயலகம் சென்று தமிழக முதல்வர் அவர்களையும்,  தலைமைச் செயலாளர் அவர்களையும், கல்வித்துறை செயலாளர் அவர்களையும் மற்றும் அமைச்சர்களையும் (வாய்ப்பு கிடைக்கும் அனைவரையும்) சந்திப்பது என கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது.*


*🌟அதன்படி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச்செயலகம் சென்றுள்ளார்கள்.*


*🌟மேலும் இதுகுறித்து தகவல் சந்திப்பிற்கு பின் அறிவிக்கப்படும்.*


*🌟ஜாக்டோ ஜியோ கூட்டத்திற்கு பின் நிதிகாப்பாளர் தோழர் ச.மோசஸ் ஊடக நண்பர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியினை கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே..*

https://youtu.be/HaQBrgxI8Vs



*🤝தோழமையுடன்;*


*_ச.மோசஸ்,_*

*நிதிகாப்பாளர்,*

*ஜாக்டோ ஜியோ.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 3 February 2019

*எஸ்.ஆர்.எம் பல்கலை - தொலைதூர கல்விக்கு பிப்பரவரி.28 - ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/28.html


*🌟சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் முதல்தர அங்கீகாரம் பெற்றுள்ளது.*


🌟இப்பல்கலைக்கழகம் தொலைதூர கல்வியை வழங்க பல்கலைக்கழக மானியக்குழு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.*



*🌟தற்போது இங்கு பி.பிஏ., பி.காம்., பி.ஏ., (ஊடகவியல்), பி.ஏ., (ஆங்கிலம்), எம்.ஏ., (ஆங்கிலம்) ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.*


*🌟அடுத்த கல்வியாண்டு முதல் யோகா, நுண்கலை, எம்.பி.ஏ ஆகிய பிரிவுகளும் தொடங்கப்படுகின்றன.*


*🌟எஸ்.ஆர்.எம்.தொலைதூரக் கல்வி மையங்கள் ராமாபுரம், வடபழனி, திருச்சி வளாகங்களில் செயல்படுகின்றன. இங்கு தொலைதூரக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பிப்பரவரி 28 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.*


*🌟மேலும் விபரங்களுக்கு 04427417040/ 04427455510 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். அல்லது director.dde@srmuniv.ac.in மற்றும் admission.india@srmuniv.ac.in ஆகிய முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.* 



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday, 2 February 2019

*ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்ட விபரம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழு கூட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/blog-post_2.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் (03.02.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*


*_கூட்டப்பொருள்:_*


*⚡வேலை அறிக்கை,*

*⚡ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஆய்வு - அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள்,*


*⚡26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் - தொடர் நடவடிக்கைகள்,*


*⚡19.02.2019 - டெல்லி பேரணி,*


*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்து பூர்வமாக),*


*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*


*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*


*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*


*🌟03.02.2019 ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*


*_நாளை(03.02.2019)மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் மாவட்டச்செயலாளர்கள் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களைத் தவறாது கொண்டுவரவும்_*



*⚡தங்கள் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர்கள் மற்றும் பிணையில் வெளிவந்தவர்களின் மொத்த எண்ணிக்கை*


*⚡மேற்கண்ட எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை.*


*⚡ஆசிரியர் எண்ணிக்கையில் சங்கவாரியாக எண்ணிக்கை*


*⚡வேலைநிறுத்தப் போராட்டத்தின் இறுதிநாளில் (30.01.2019) வேலை நிறுத்தத்தில் இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை*


*⚡மேற்படி எண்ணிக்கையில் சங்கவாரியாக எண்ணிக்கை*



*🤝தோழமையுடன்*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான பணியிட மாறுதல் உத்தரவு நிறுத்தம்! : TNPTF பொதுச்செயலாளர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/02/tnptf.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 14*

*நாள் : 02.02.2019*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்!*


*🌟ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 30.1.2019 வரை களத்தில் இருந்த தோழர்கள் மீது மதிப்புமிகு தொடக்கக்கல்வித் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி பணியிட மாறுதல் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.*


*🌟இதுதொடர்பாக 31.1.2019 முதல் இன்று வரை தொடர்ச்சியாக தொடர்ந்து மூன்று தினங்களாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையமானது மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் பேசி வந்தது.*


*🌟இதனைத் தொடர்ந்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து பேசிவந்தார்.*


*🌟ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்துப் பேச நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.*



*🌟இந்நிலையில் தற்போது மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுவரும் பணியிட மாறுதல் உத்தரவுகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக மாண்புமிகு தொடக்கக் கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.*


*🌟மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்குக் குறிப்பாணைகள் மட்டும் வழங்குவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.*


*🌟எனவே தோழர்கள் யாரும் பணியிட மாறுதல் குறித்த அச்சம் இன்றி தொடர்ந்து தங்களது பணியிடத்தில் பணி செய்ய மாநில மையம் கேட்டுக் கொள்கிறது.*



*🌟மேலும் தற்போது தான் இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதால் ஒரு சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் தொடர்ச்சியாகப் பணியிட மாறுதல் ஆணை வழங்கி வருகின்றனர். இது குறித்த எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம். தொடக்கக் கல்வி இயக்குனரகம் தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் தொடர்ச்சியாகத் தகவலைத் தெரிவித்து வருகிறது.*



*🌟எனவே, தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிட மாறுதல் ஆணைகளை எவரும் பெறத் தேவையில்லை.*


*🌟மேலும், குறிப்பாணையை எதிர் கொள்வதற்குத் தேவையான உரிய வழிமுறைகளை நமது மாநில அமைப்பும் ஜாக்டோ-ஜியோவும் வழங்கும். இதனையும் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளில் தொடர்ந்து ஈடுபடும்.*


*🌟தோழர்கள் சமூக வலைதளங்களில் வலம்வரும் தேவையற்ற வீணான வதந்திகளை நம்பி தங்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாளது தேதிவரை எடுக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்து நாளைய தினம் நடைபெறும் மாநிலச் செயற்குழுவில் பொறுப்பாளர்கள் வழியே தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.*


*🌟களத்தில் உறுதியாக நின்ற தோழர்களைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமது மாநில மையத்திற்கு உண்டு. எனவே, மன உளைச்சல் ஏதுமின்றி தங்களின் கல்விப் பணியைத் திறம்பட மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.*


*சென்னை,*

*02.02.2019*




*🤝தோழமையுடன்,*


*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday, 1 February 2019

*LKG, UKG வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனத்தில் நீதிமன்ற உத்தரவினை கருத்தில் கொண்டு செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/02/lkg-ukg.html


*_தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்_*


*⚡அரசாணை (நிலை) எண் -89, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், எஸ்.டபிள்யு-7(1) துறை, நாள்-11.12.2018*


*⚡தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதம் ந.க.எண்-021717/கே3/2018, நாள்-09.01.2019 மற்றும் 11.01.2019*



*🌟மேற்காண் அரசாணையின்படி ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையக்களில் LKG/ UKG வகுப்புகள் ஆசிரியர் நியமனம் செய்யக்கோரி தெரிவிக்கப்பட்டது.*



*⚡தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதம் ந.க.எண்-021717/கே3/2018, நாள்-09.01.2019 மற்றும் 11.01.2019 ன் செயல்முறைக் கடிதத்தின் மீது சில ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கின் மீது கீழ்கண்ட இடைக்கால ஆணை வழங்கப்பட்டுள்ளது.*


*⚡W.P NO'S 1633 to 1635 of 2019 and WMP NO 1811, 1816 and 1818 of 2019 Deployment of Secondary Grade Teachers in elementary education to the post of Nursery/ Montessori teachers in Anganwadi centres by the impugned proceedings dated 09.01.2019 shell be kept in abeyance, until further order.*


*⚡W.P NO'S 1645/ 2019 WMP NO 1835 of 2019 Deployment of Secondary Grade Teachers in elementary education to the post of Nursery/ Montessori teachers in Anganwadi centres by the impugned proceedings dated 09.01.2019/ 11.01.2019 shell be kept in abeyance, until further order.* 


*⚡W.P (MD) NO's 1091, 1115, 1125 & 1128 of 2019 The case is posted on 11.02.2019.*



*🌟மேற்காண் ஆணைகளைக் கருத்தில்கொண்டு செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм