🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/6-3.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 31/2019 நாள் : 30.11.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡17.11.2019 அன்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நம் பேரியக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலப் பொதுக்குழு 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 03.12.2019 முதல் 05.12.2019 வரை கோரிக்கைகளை விளக்கி 'ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்" நடத்துவதெனவும், அதன் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தின் நிறைவு நாளான 05.12.2019 அன்று மாலை வட்டாரக்கல்வி அலுவலகங்களில் 'பெருந்திரள் முறையீடு" போராட்டத்தின் மூலம் நம் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்புவது எனவும், அதன் தொடர்ச்சியாக 04.01.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் 'தர்ணா போராட்டம்" நடத்துவதெனவும் முடிவாற்றப்பட்டது.*

*🛡அதன்படி தமிழகம் முழுவதும் களப்பணிகளை நம் பேரியக்கத்தின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் நிர்வாகிகள் பாய்ச்சல் வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.*
*🛡அதன்படி தமிழகம் முழுவதும் களப்பணிகளை நம் பேரியக்கத்தின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் நிர்வாகிகள் பாய்ச்சல் வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.*
*⚔*
*🛡'பெருந்திரள் முறையீடு" என்பது ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு அதிகமாக ஆசிரியர்களைத் திரட்ட முடியுமோ அவ்வளவு ஆசிரியர்களைத் திரட்டி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி அதன் நிறைவாக பெருந்திரளாகச் சென்று வட்டாரக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளிப்பதாகும். எனவே, வட்டார, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெறும் விவரத்தை வழக்கம் போல் காவல்துறைக்குத் தெரிவிப்பதோடு, போராட்ட விவரத்தை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் எழுத்து மூலமாக துண்டுபிரசுரங்களை இணைத்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள் போராட்ட தினத்தன்று அலுவலகத்தில் இருந்து மனுக்களைப் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.*

*🛡தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார, நகரக் கிளைகளிலும் 'பெருந்திரள் முறையீடு" போராட்டம் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித தவிர்ப்பும், விதிவிலக்கும் எந்தக்கிளைக்கும் வழங்கக்கூடாது. வட்டார, நகரக் கிளைகளின் செயலாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவுடன் இணைந்த கடிதத்தை வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டும்.*

*🛡அதனைத் தொடர்ந்து கடிதத்தில் பெறுநர் பகுதியில் இடம்பெற்றுள்ள முகவரிகளுக்கு அக்கோரிக்கை விண்ணப்பங்களை அஞ்சல் வழியே தனித்தனியே அனுப்பிட வேண்டும்.*
*⚔*
*🛡மேலும் அனைத்து வட்டார, நகரக் கிளைகளும் வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்த விண்ணப்பத்தின் நகல் ஒன்றை,*

*_பொதுச்செயலாளர்,_*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*
*41,முக்தாருன்னிசாபேகம் தெரு,_*
*_எல்லிஸ் ரோடு,_*
*சென்னை-2._*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_*
*41,முக்தாருன்னிசாபேகம் தெரு,_*
*_எல்லிஸ் ரோடு,_*
*சென்னை-2._*
*என்ற முகவரிக்கு அஞ்சல் வழியே கண்டிப்பாக அனுப்பி வைத்திட வேண்டும்.*
*⚔*
*🛡காலத்தின் அருமைகருதி இருக்கின்ற குறைந்த அளவு நாட்களைப் பயன்படுத்தி 'பிரச்சார இயக்கம்", 'பெருந்திரள் முறையீடு" ஆகிய நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*🛡காலத்தின் அருமைகருதி இருக்கின்ற குறைந்த அளவு நாட்களைப் பயன்படுத்தி 'பிரச்சார இயக்கம்", 'பெருந்திரள் முறையீடு" ஆகிய நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*⚔*
*🛡வட்டார, நகரக் கிளைகளில் நடைபெறும் 'பெருந்திரள் முறையீடு" தொடர்பான புகைப்படங்களை இயக்க இதழில் வெளியிடுவதற்கு ஏதுவாக tnptfithal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.*
*🛡வட்டார, நகரக் கிளைகளில் நடைபெறும் 'பெருந்திரள் முறையீடு" தொடர்பான புகைப்படங்களை இயக்க இதழில் வெளியிடுவதற்கு ஏதுவாக tnptfithal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.*
*⚔*
*🛡வட்டார, நகரக் கிளைகளில் நடைபெறும் 'பெருந்திரள் முறையீடு" போராட்ட நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிகளை சிறப்புரையாளர்களாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*********************
*_வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டிய மாதிரி கடிதம்:_*
*********************
*_வட்டார/ நகரக் கிளைகளின் லெட்டர் பேடில் தட்டச்சு செய்து அதை வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளித்திட வேண்டிய மாதிரி கடிதம்:_*
*********************
*_பெறுநர்_*
*⚡(1) மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*⚡(2)மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*⚡(3)மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*புனித ஜார்ஜ் கோட்டை*
*சென்னை - 9*
*⚡(4)மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள்*
*பள்ளிக் கல்வித்துறை*
*தலைமைச் செயலகம்*
*சென்னை - 9*
*பள்ளிக் கல்வித்துறை*
*தலைமைச் செயலகம்*
*சென்னை - 9*
*⚡(5)மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள்*
*பள்ளிக் கல்வித்துறை*
*டி.பி.ஐ வளாகம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*பள்ளிக் கல்வித்துறை*
*டி.பி.ஐ வளாகம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*⚡(6)மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்*
*பள்ளிக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*பள்ளிக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*⚡(7)மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்*
*தொடக்கக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*தொடக்கக்கல்வி இயக்ககம்*
*கல்லூரிச்சாலை*
*சென்னை - 6*
*⚡(8)மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்*
*முதன்மைக்கல்வி அலுவலகம்*
*__________மாவட்டம்.*
*முதன்மைக்கல்வி அலுவலகம்*
*__________மாவட்டம்.*
*⚡(9)மதிப்புமிகு மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள்*
*மாவட்டக்கல்வி அலுவலகம்*
*__________கல்வி மாவட்டம்.*
*மாவட்டக்கல்வி அலுவலகம்*
*__________கல்வி மாவட்டம்.*
*⚡(10)மதிப்புமிகு வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள்*
*வட்டாரக்கல்வி அலுவலகம்*
*_________வட்டாரம்.*
*வட்டாரக்கல்வி அலுவலகம்*
*_________வட்டாரம்.*
*_மதிப்புமிகு ஐயா,_*
*பொருள்:*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 05.12.2019 அன்று மாநிலந்தழுவிய அளவில் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் - நிறைவேற்ற வேண்டுதல் சார்பு.*

*✍தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 17.11.2019 அன்று இராமேஸ்வரத்தில நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை விளக்கி 03.12.2019 முதல் 05.12.2019 முடிய ஆசிரியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவதெனவும், 05.12.2019 அன்று மாலை மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பும் ~பெருந்திரள் முறையீடு செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.*
*✍அதன்படி மாவட்டம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 05.12.2019 அன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டின் போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தைத் தங்களுக்கு அளித்துள்ளோம்.*
*✍அதன்படி மாவட்டம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 05.12.2019 அன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டின் போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தைத் தங்களுக்கு அளித்துள்ளோம்.*
*✍மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக்கிளையின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*
*_இப்படிக்கு_*
*_இப்படிக்கு_*
*வட்டாரத்தலைவர்*
*வட்டாரச்செயலாளர்*
*வட்டாரப்பொருளாளர்*
*_இணைப்பு:_*
*⚡1) 6 அம்சக் கோரிக்கைகள்.
*********************
*_6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள்கள் பிரச்சார இயக்கம் அடங்கய துண்டு பிரசுரம் மற்றும் பெருந்திரள் முறையீடு குறித்த கோரிக்கைகள் அங்கிய மாதிரி துண்டு பிரச்சுரம்:_*

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் 03.12.2019 முதல் 05.12.2019 முடிய 3 நாட்கள் “ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்” அதன் தொடர்ச்சியாக 05.12.2019 மாலை வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு*

*_கோரிக்கைகள்:_*
*⚡1) தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவர்களின் கல்வி நலனைப் பாதிப்பதோடு, ஏழை எளிய கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதாகும். மேலும், பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டின் எதிர்காலக்கல்வி வளர்ச்சி கருதி தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.*
*⚡2) தேசிய கல்விக்கொள்கை – 2019, தேசத்தின் எதிர்காலக்கல்வி வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளதாலும், தேசத்தின் ஏழை எளிய, சமூகத்தில் பினதங்கிய குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கு பாதகம் ஏற்படுத்துவதோடு, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கக்கூடிய நடவடிக்கை என்பதாலும் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை – 2019ஐ தேசநலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.*
*⚡3) கடந்த காலங்களில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம், தனிச்சங்கப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் உரிமைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.*
*⚡4) பள்ளி தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) உள்ளிட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதற்குரிய எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலான ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இல்லாத சூழலிலும், கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் இணையதள தொடர்புகள் கிடைக்கப்பெறாத நிலையிலும் அப்பணிகளைச் செய்திட தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அவர்களது கற்பித்தல் பணியையும், அன்றாட நடைமுறை அலுவல்களையும் பாதிப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மேற்கண்ட EMIS உள்ளிட்ட இணையதளப் பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர் ஒருவரை தமிழக அரசு நியமித்து ஆசிரியர்களை முழுமையாக, நிம்மதியாக கற்பித்தல் பணியை ஆற்றிட வழிவகை செய்திடவேண்டும்.*
*⚡5) தொடக்கக் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறுவள மையங்களாகச் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களது அன்றாட அலுவல்களைப் பாதிக்கும் வகையிலும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளைக் கண்காணிக்கும் பணியை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்கள்: 145, 202 ஆகியவற்றைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.*
*⚡6) 03.02.2017 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்திய தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டத்தின்போது, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.*

*😡(1) தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை விரைவாகப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.*
*😡(2) இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பைச் சரிசெய்து எட்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.*
*😡(3) எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி தொடரவேண்டும்.*
*😡(4) பி.லிட் கல்வித்தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் கல்வித் தகுதிக்கு, முன்பு வழங்கப்பட்டதுபோல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*
*😡(5) மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.*
*😡(6) ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.*
*😡(7) பி.காம், பி.ஏ (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று பி.எட் கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.*
*😡(8) அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм