Tuesday, 30 April 2019
Monday, 29 April 2019
*திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ கோரிக்கை கடிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_62.html
*🌟ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தள்ளிப்போதல் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்யும்போது தனி ஊதியம் ரூ.1000 பெற்றது, FTG இறுதி கற்பிப்பு மானியம் கணக்கிடும் போது பிடித்தம் செய்யப்பட்டது, போன்றவற்றை மீண்டும் வழங்க கோரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம் குறித்து திட்டமிடுவது தொடர்பாக மாநில செயற்குழு கூட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_29.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 06.05.2019 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*🌟_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡14.05.2019 & 15.05.2019 மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம், கன்னியாகுமரி - மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்பு - விரிவான திட்டமிடல்,*
*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் - 17(ஆ) நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்,*
*⚡வழக்கு நிதி மற்றும் நிதிநிலுவைகள் ஒப்படைத்தல்,*
*⚡2019 டைரி, காலண்டர் மற்றும் அரசாணைப் புத்தகம் கணக்கு முடித்தல்,*
*⚡2018-2019 இயக்க உறுப்பினர் சந்தா மற்றும் பட்டியல் ஒப்படைத்தல்,*
*⚡புதிய ஆசிரியன் சந்தா ஒப்படைத்தல்,*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துபூர்வமாக),*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡இதர விஷயங்கள்*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*🌟06.05.2019 திங்கள்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 26 April 2019
*TNPTF மாநில மையம் இரங்கல் செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/tnptf_26.html
⚫😢
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டக்கிளையின் தற்போதைய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமாகிய _தோழர்.த.ரமேஷ்_ அவர்கள் நேற்று (25.04.2019)இரவு உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும்,துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு நம் இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்*
⚫😢
*🌟அவரது மறைவால் துயருறும் அனைத்துத் தோழர்களுக்கும்,அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ககூட்டணியயின் மாநில மையம் தனது ஆழ்ந்த இரங்கலையும்,துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது*
*😢துயரத்துடன்*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Thursday, 25 April 2019
*NHIS திட்டத்தில் TNPTF ன் தொடரும் சாதனை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/nhis-tnptf_25.html
🏥🚑
*🌟சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், செல்லியம்பட்டி தலைமையாசிரியர் திருமதி லதா அவர்களின் கணவர் திரு.நீதிவேலு அவர்களுக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சைக்கு உரிய பணத்தை தர காப்பீடு நிறுவனம் மறுத்த நிலையில் TNPTF தலையிட்டு உரிய தொகையை பெற்றுக்கொடுத்தது.*
🏥🚑
*🌟சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், அரசினம்பட்டி இடைநிலை ஆசிரியர் _திருமதி பிரபாவதி_ அவர்களின் கணவர் _திரு.மகேஸ்வரன்_ அவர்களுக்கு நடைபெற்ற கண் அறுவை சிகிச்சைக்கு உரிய தொகை வழங்க காப்பீடு நிறுவனம் மறுத்த நிலையில் TNPTF தலையிட்டு உரிய தொகையை பெற்றுக்கொடுத்தது.*
🏥🚑
*🌟மேற்கண்ட நிகழ்வுகளுக்கு வட்டார மற்றும் மாவட்ட மையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில அமைப்பிற்கும் உடன் செயலாற்றிய மாநில துணை ஒருங்கிணைப்பாளர் _தோழர் செல்வகணேஷ்_ அவர்களுக்கும் மாவட்ட மையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🤝தோழமையுடன்;
*_முத்துப்பாண்டியன்_*
*மாவட்ட மையம் TNPTF*
*சிவகங்கை மாவட்டம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 23 April 2019
*NHIS-ல் TNPTF-ன் சாதனை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/nhis-tnptf.html
🏥🚑
*🌟புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத் துணைச் செயலாளர் தோழர் சேகர் அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.*
🏥🚑
*🌟வழக்கம்போல் மருத்துவமனை நிர்வாகமும் NHIS காப்பீட்டு நிறுவனமும் முதல் தவணையாக ரூ 20,000 ம்,இரண்டாம் கட்டத் தவணையாக ரூ 29,000 ம் ஒதுக்கீடு செய்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டப் பொருளாளர் தோழர்.சக்திவேல் வழியே TNPTF-ன் NHIS மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.செல்வகணேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டபின்னர், மாநில மையத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தவணையாக ரூ41,659 ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சைக்கான மொத்த செலவினத் தொகைரூ1,48,800 ல் ரூ 90,659 பெறப்பட்டது...*
🏥🚑
*🌟இம்மருத்துவமனையில் காப்பீட்டுத்திட்டத்தில் மூன்றாம் கட்டத் தவணையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது....*
🙏💐
*🌟TNPTF-ன் மாநில மையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டக் கிளைக்கும் கந்தர்வக்கோட்டை வட்டாரக் கிளையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏💐🙏💐🙏💐🙏💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 21 April 2019
*விழுப்புரம் மாவட்டம் +2 தேர்ச்சியில் மீண்டும் கடைசி இடம்... சமூக, பொருளாதார பிரச்னைதான் காரணம், ஆசிரியர்கள் மீது தவறில்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2_21.html
📖🖋
*🌟விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடம் பிடித்ததற்கு சமூக, பொருளாதார பிரச்சினை தான் காரணம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார், தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இரண்டு இடங்களை பிடித்து வருகிறது. _இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி முதல் பத்து இடங்களுக்குள் விழுப்புரம் மாவட்டம் வரும் என்ற முயற்சியில் களமிறங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியும் சபதம் ஏற்றுக் கொண்டிருந்தார்._*
📖🖋
*🌟இதனிடையே நேற்று வந்த தேர்வு முடிவில், வழக்கம்போல் கடைசி' இடத்தை பிடித்துள்ளது. வேலூருக்கு அடுத்தபடியாக 31வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது.*
*_தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:_*
📖🖋
*🌟நாங்கள் எதிர்பார்த்த தேர்ச்சி இல்லாதது வருத்தமளிக்கிறது, கல்வியாண்டு துவக்க நாள் முதலே பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. இதற்காக ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டும், பள்ளிகளிலும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன்பலன் கடந்த ஆண்டைவிட 2:50 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.*
📖🖋
*🌟தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளிகள் உள்ள மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. 25,794 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 20,930 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 81.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இது கூடுதலாகும், இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைவிற்கு ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது.*
📖🖋
*_🌟ஜாக்டோ , ஜியோ போராட்டத்தாலும் தேர்ச்சி சதவீதம் பாதிப்பு கிடையாது._ இம்மாவட்டத்திலுள்ள சமூக, பொருளாதார பிரச்னைதான். பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவதே சவாலாக உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நான் அரும்பாடு பட்டுள்ளேன். உறவினர்கள் நிகழ்ச்சி, துக்கத்திற்க்கு கூட செல்லவில்லை 50 வயதிற்கும் மேல் உறவினர்கள் தான் தாங்கி நிற்பார்கள் அதனையும் பொருட்படுத்தாமல் தேர்ச்சி சதவீதம் உயர்த்த என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்தேன்.*
📖🖋
*🌟திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலரை வேறு மாவட்டத்திற்கு சென்றுவிடுங்கள், தேர்ச்சி விழுக்காட்டை உயர்ந்த பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் நானே டிரான்ஸ்பர் வாங்கிக்கொடுக்கிறேன் என்று எச்சரித்தேன்.*
📖🖋
*🌟மேலும் 6 கல்வி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி விழுக்காட்டை கொடுப்பவர்களுக்கு சொந்த பணம் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்தேன், அதனை திண்டிவனம் கல்வி அலுவலருக்கு வழங்க உள்ளேன்.*
📖🖋
*🌟பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிஇஓ வாக இருந்த போது அங்கு மேற்கொண்ட நடவடிக்கையால் தான் தற்போது 3 வது இடத்தை அந்த மாவட்டம் பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் அந்த பணிகளை சிறப்பாக செய்தேன். இனிவரும் காலங்களிலும் செய்வேன். இதன் பலன் வரும் காலங்களில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 20 April 2019
*🏥😢🚑NHIS திட்டத்தில் மதுரை MIOT மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் 🏥😢🚑* 😢🏥
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/nhis-miot.html
*🌟விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளாராக பணிபுரியும் _R.வீரக்குமாரின்_ மனைவியும் மகளும் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை மியாட் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்*
😢🏥
*🌟அறுவை சிகிச்சைக்கு முன்பு ரூ.100000 முன் பனம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செலுத்தியதால் ரூ.100000 செலுத்தப்பட்டது செலுத்திய தொகைக்கு ரசீது வழங்கப்படாது என்றும் காப்பீடு நிறுவனம் ரூ.57000 தான் வழங்குவார்கள்*
😢🏥
*🌟கூடுதல் தொகை கேட்க மாட்டேன் என்று கடிதம் ஏழுதி கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து மருத்துவமனை எழுதி வாங்கினார்கள்*
😢🏥
*🌟இடையில் கூடுதலாக Rs.120 000 முன் பணம் செலுத்த நிர்பந்தம் செய்தனர்*
😢🏥
*🌟காப்பீட்டு நிறுவனத்தில் புகார் தெரிவித்த பின்பு மியாட் முன்பனம் கேட்பதை நிறுத்தி கொன்டனர்*
😢🏥
*🌟நேற்று 12.4.19 மதியம் Rs 65000 செலுத்தி விட்டு Discharch ஆகலாம் என்று மியாட் கூறியது*
😢🏥
*🌟இது தொடர்பாக மதியம் 3 மணிக்கு MD இந்தியா மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள், யூனைடெட் இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு மியாட் Final Bill அனுப்ப மறுக்கிறது என்று sms whatsapp மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது*
😢🏥
*🌟கைபேசியில் தொடர்பு கொண்ட போது MD இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முறையா பேசினார். முயற்சியும் எடுத்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை மியாட் கண்டுகொள்ளவில்லை*
😢🏥
*🌟பல முறை முயற்சி செய்த பின்பு நேற்று இரவு 7.30 க்கு MD இந்தியா மாநில ஒருங்கினைப்பாளர் நமது அழைப்பு எடுத்து பேசினார். அதன் பின் பல முறை கைபேசியில் அழைத்தும் இன்று மாலை 4.30 வரை அழைப்பை எடுக்கவில்லை*
😢🏥
*🌟நேற்று மாலை 3 மணியில் இருந்து இன்று மாலை 4 மணி வரை யூனைடெட் இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளரை கைபேசியில் தொடர்ச்சியாக அழைத்தும் அழைப்பை எடுக்கவில்லை*
😢🏥
*🌟இன்று காலை 11 மணிக்கு மாவட்ட கருவலக அலுவரிடம் SMS மூலமும் கைபேசி மூலமும் புகார் தெரிவித்தோம் முன்னேற்றம் இல்லை*
😢🏥
*🌟இன்று மதியம் 12.30 க்கு கருவலக ஆணை்யாளரிடம் SMS மூலமும் கைபேசி மூலமும் புகார் தெரிவித்தோம்*
😢🏥
*🌟ஆணையாளர் தலையிட்ட பின்பு இன்று மதியம் 1.30 க்கு Final Bill யை மியாட் மருத்துவமனை சென்னைக்கு அனுப்பியது*
😢🏥
*🌟இன்று மாலை 5 மணிக்கு MD இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளரை கைபேசியில் தொடர்பு கொண்ட போது,*
😢🏥
*🌟மகனுக்கு மட்டுமே கூடுதலாக Rs.45000 மருத்துவமனை கேட்டது நாங்கள் அனுப்பி விட்டோம். தாயாருக்கு கூடுதல் தொகை கேட்கவில்லை*
😢🏥
*🌟மதுரை ஒருங்கிணைப்பாளர் மருத்துவ மனைக்கு விசாரிக்க சென்றுள்ளார் என்று தெரிவித்தார். கூடுதலாக பணம் செலுத்த வேண்டாம் நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவமனை தெரிவித்தது*
😢🏥
*🌟வேறு வழியில்லாம் முன் பனமாக செலுத்திய Rs.100000 பெறாமால் வீட்டுக்கு திரும்பியுள்ளார்*
🏥🚑
*🌟மதுரையில் எலும்பு முறிவுக்கு சிறப்பான பல மருத்துவமனைகள் உள்ளன*
😢🏥
*🌟அம் மருத்துவமனைகள் காப்பீடு பெறுவது எளி தாக உள்ளது*
😢🏥
*🌟காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்கள் மதுரை மியாட் மருத்துமனைக்கு செல்ல வேண்டாம் 😢😢😢😢😢*
*_TNGEA_*
*விருதுநகர் மாவட்டம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6, மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித்தேர்வு (NMMS-2019-20) தேர்வு நாள் - 15.12.2018 (நவம்பர் 2018)-தேர்வுமுடிவுகள் வெளியிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/6-nmms-2019-20-15122018-2018.html
*🌟புதுடெல்லி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்புச்செயலாளர் அவர்களின் கடிதம் எண்.F.No.1-7/2018-SS, நாள்-20.04.2018, கடிதத்தின் தொடர்ச்சியாக 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்தியகல்வி உதவித்தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு (NMMSS) கடந்த 15.12.2018 (நவம்பர் 2018) அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு நடைபெற்றது.*
*🌟தமிழ்நாடு அரசு தேர்வுகள்துறை இயக்குநர் அவர்களின் கடித எண்- 241194/NMMSS/2018 நாள்- 10.04.2019 ன் படி மேற்குறிப்பிடப்பட்ட தேர்வில் பங்குபெற்ற கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டு, இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்காயி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.*
*🌟மேலும், இத்தேர்வில் தகுதிபெற்றுள்ள தேர்வர்கள் 9ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
*_NMMS RESULT மாவட்ட வாரியாக கீழே உள்ள link ல் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்._*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1XXjgdJ0te-qaVVzwjlJCaDutodT4nkat/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 19 April 2019
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_19.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் (20.04.2019) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் செஞ்சி அரசினர் பெண்கள் மேநிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் _தோழர்.கு.குணசேகரன்_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*_🌟சிறப்பு அழைப்பாளர்:_*
*தோழர் _ச.மோசஸ்_ STFI பொதுக்குழு உறுப்பினர்*
*_🌟முன்னிலை:_*
*தோழர் _அ.ரஹீம்_ மாநிலத் துணைத் தலைவர்*
*_கூட்டப்பொருள்:_*
🥁🎤
*⚡கிளைகள் விஸ்தரிப்பு*
🥁🎤
*⚡2017-18, 2019-19 உறுப்பினர் பட்டியல் ஒப்படைப்பு.*
🥁🎤
*⚡2019 டைரி நிதி ஒப்படைப்பு.*
🥁🎤
*⚡நிதி நிலுவைகள் ஒப்படைப்பு.*
🥁🎤
*⚡வட்டார செயல்பாடுகள்*
🥁🎤
*⚡ஆசிரியர் பிரச்சினைகள்.*
🥁🎤
*⚡இதர செயல்பாடுகள்.*
🥁🎤
*⚡மாவட்ட செயலர் கொணர்வன.*
🎤🤝
*🌟மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம்.*
💪👍
*🌟மாணவர்களின் கல்வி நலன், சமூக நலன், ஆசிரியர் நலன் சார்ந்து தொடர்ந்து களத்தில் போராடிக்கொண்டிருக்கும் இயக்கம் நமது இயக்கம். அதிகாரிகளை கடவுள்களாகக் கருதும் அமைப்புகளைச் சார்ந்தவர் அல்ல நாம். பணிக்கலாச்சாரத்தைத் தாங்கி வீறு நடை போட்டு இயங்கி வரும் இயக்கம் நமது TNPTF. ஓடுகின்ற நீரோடை ஒருபோதும் சாக்கடையாக தேங்குவதில்லை. அதேபோல் யாதொரு தனிநபர் துதிபாடலின்றி இயங்கும் நாம், நமக்கான கடமைகளை நமது எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தப்பித்தவறி தனிநபர் துதிபாடல் தலையெடுத்தால் அதையும் தவிடு பொடியாக்கி முன்னேறுவோம் தோழர்களே!*
🤝தோழமையுடன்;
*_கு.குணசேகரன்,_ மாவட்ட தலைவர்*
*_சண்முகசாமி,_ மாவட்ட செயலாளர்*
*_சு.தண்டபாணி,_ மாவட்ட பொருளாளர்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*+2 தேர்வு முடிவுகள் - அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2_60.html
*_மாவட்ட வாரியாக அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:_*
*⚡கன்னியாகுமரி-92.64%*
*⚡ஈரோடு-92.38%*
*⚡பெரம்பலூர்-91.8%*
*⚡திருப்பூர்-91.51%*
*⚡நாமக்கல்-90.6%*
*⚡கரூர்-90.57%*
*⚡திருநெல்வேலி-89.8%*
*⚡விருதுநகர்-89.4%*
*⚡தூத்துக்குடி-89.36%*
*⚡சிவகங்கை-89.23%*
*⚡திருச்சி-88.6%*
*⚡கோவை-88.58%*
*⚡இராமநாதபுரம்-88.09%*
*⚡சென்னை-87.54%*
*⚡புதுக்கோட்டை-87.43%*
*⚡தேனி-87.39%*
*⚡தஞ்சை-86.21%*
*⚡மதுரை-85.81%*
*⚡சேலம்-85.29%*
*⚡தர்மபுரி-84.85%*
*⚡அரியலூர்-84.72%*
*⚡உதகை-84.29%*
*⚡திருவண்ணாமலை-83.95%*
*⚡திண்டுக்கல்-83.62%*
*⚡நாகை-82.44%*
*⚡புதுச்சேரி-81.21%*
*⚡விழுப்புரம்-81.15%*
*⚡கடலூர்-80.85%*
*⚡காஞ்சிபுரம்-80.6%*
*⚡கிருஷ்ணகிரி-80.29%*
*⚡காரைக்கால்-80.05%*
*⚡வேலூர்-79.31%*
*⚡திருவாரூர்-78.62%*
*⚡திருவள்ளூர்-76.14%*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*+2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2_19.html
*_மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:_*
*⚡திருப்பூர்-95.37%*
*⚡ஈரோடு-95.23%*
*⚡பெரம்பலூர்-95.15%*
*⚡கோவை-95.01%*
*⚡நாமக்கல்-94.97%*
*⚡கன்னியாகுமரி-94.81%*
*⚡விருதுநகர்-94.44%*
*⚡திருநெல்வேலி-94.14%*
*⚡தூத்துக்குடி-94.23%*
*⚡கரூர்-94.07%*
*⚡சிவகங்கை-93.81%*
*⚡மதுரை-93.64%*
*⚡திருச்சி-93.56%*
*⚡சென்னை-92.96%*
*⚡தேனி-92.54%*
*⚡இராமநாதபுரம்-92.03%*
*⚡புதுச்சேரி-91.22%*
*⚡தஞ்சை-91.05%*
*⚡உதகை-90.87%*
*⚡திண்டுக்கல்-90.79%*
*⚡சேலம்-90.64%*
*⚡புதுக்கோட்டை-90.01%*
*⚡காஞ்சிபுரம்-89.09%*
*⚡அரியலூர்-89.68%*
*⚡தர்மபுரி-89.62%*
*⚡திருவள்ளூர்-89.49%*
*⚡கடலூர்-88.45%*
*⚡திருவண்ணாமலை-88.03%*
*⚡நாகை-87.45%*
*⚡கிருஷ்ணகிரி-86.79%*
*⚡திருவாரூர்-86.52%*
*⚡விழுப்புரம்-85.85%*
*⚡வேலூர்-85.47%*
*⚡காரைக்கால்-84.47%*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*+2 தேர்வு முடிவுகள் வெளியீடு - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2.html
🎤📖
*🌟வெள்ளிக்கிழமை (19.04.2019) இன்று காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு..*
*https://t.co/4BtIOaYS2B,*
*https://t.co/zO5w3tLKV6,*
*https://t.co/38xaxcoLPQ*
🎤📖
*🌟ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 14 April 2019
*தேர்தல் பணி, மதிப்பூதியம், வாகன வசதி, தபால் ஓட்டு & வாக்களித்தல் குறித்த TNPTF பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/tnptf.html
*TNPTF பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 15/2019*
*நாள் : 14.04.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
✉🎤
*🌟நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணிக்குச் செல்வதற்கான பயிற்சி வகுப்புகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றுள்ளன.*
✉🎤
*🌟தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆளும் கட்சி கூறியது. கற்பித்தல் பணி தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. நம்முடைய நியாயமான உரிமைகள் தொடர்பான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற முன்வராத ஆளும் தரப்பினர் இந்த கோரிக்கையையாவது நிறைவேற்ற முன் வந்ததில் மகிழ்ச்சி நமக்கு.*
✉🎤
*🌟ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என்ற உண்மையை உணர்ந்த தேர்தல் ஆணையம் அக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.*
✉🎤
*🌟தேர்தல் மட்டுமின்றி மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொருளாதாரக் கணக்கெடுப்பு, குடும்ப அட்டை கணக்கெடுப்பு ,வாக்காளர் சேர்க்கை நீக்கல் பணி, ஆதார் அட்டை கணக்கெடுப்பு என்று எந்த பணியையும் ஆசிரியர்கள் இல்லாமல் இங்கு செய்துவிட முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.*
✉🎤
*🌟கற்பித்தல் அல்லாத இதுபோன்ற பணிகளை மிகக் குறைந்த மதிப்பூதியத்தில் ஆசிரியர்களைக் கொண்டு செய்வதும், செய்ய மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று மிரட்டுவதும் காலங்காலமாக இங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. உண்மையில் இதுவும் உழைப்புச் சுரண்டலே. இத்தகு நிலைக்கு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் விதிவிலக்கல்ல.*
✉🎤
*🌟18.04.2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் என்பது மிகக் குறைவானது. பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கிய மதிப்பூதியத்தையே தற்போதும் வழங்குதல் என்பது நியாயத்துக்குப் புறம்பானதாகும்*
✉🎤
*🌟தேர்தல் பணிக்குச் செல்லும் ஒரு ஆசிரியருக்கு அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 முதல் 75 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று பயிற்சி வகுப்புகள், சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் தேர்தல் பணி, தேர்தல் பணியாற்றும் இடத்தில் இரண்டு நாள்கள் இருந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்ற வேண்டிய நிலை என்று இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்வதேயில்லை.*
✉🎤
*🌟கர்ப்பிணிகள், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்பவர்கள் / மேற்கொண்டவர்கள், தேர்தல் பணி செய்ய இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கைக் குழந்தையுடன் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மனிதாபிமானமின்றி தேர்தல் பணி ஆணைகளை வழங்குவதும், அவைகளை உடல் நிலையைக் காரணம்காட்டி ஏற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி மிரட்டுவதும் தேர்தல் ஆணையத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு உதாரணங்களாகும்.*
✉🎤
*🌟தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு தொடர்பான கருவிகள் மற்றும் ஆவணங்களை ஒப்படைப்பதற்கு பெரும்பாலும் நள்ளிரவு ஆன நிலையிலும் வாக்குச்சாவடியில் பணியாற்றும் பெண்களை நிற்கதியாய் விட்டுச் செல்வதை இந்த தேர்தலிலாவது தேர்தல் ஆணையம் பரிசீலித்து, வாக்குச்சாவடிக்கு செல்வதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து பிரதான பேருந்து நிலையத்திற்கு வருவதற்கும் வாகன ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு 100% தேர்தல் ஆணையமே பொறுப்பு என்பதை உணர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்திட வேண்டும்.*
✉🎤
*🌟மேலும் 100% வாக்குப்பதிவை அடைய முயற்சி மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகத் தேர்தல் பணியாளர்களுக்குத் தபால் வாக்குகள் அல்லது தேர்தல் பணிச் சான்று மூலம் வாக்களித்தலுக்கு 100% வாய்ப்பு அளிக்க வேண்டும்.*
✉🎤
*🌟கடந்த சில நாட்களாக தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான முயற்சிக்குப் பின்னர் 13.04.2019 பயிற்சி வகுப்பில் பெருமளவு தபால் வாக்குகள் & தேர்தல் பணிச் சான்றுகளைப் பெற்றுள்ளனர்.*
✉🎤
*🌟ஆனால் இன்னும் பலருக்கு தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச் சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.*
✉🎤
*🌟எனவே, 15.04.2019-ற்குள் அனைத்துத் தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் வாக்குகள் / தேர்தல் பணிச் சான்றுகள் வழங்கிட உடனடி நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.*
✉🎤
*🌟இப்பிரச்சினையில் நம் இயக்கத் தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, 15.04.2019-ற்குள் அனைத்துத் தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் வாக்கு அல்லது தேர்தல் பணிச் சான்று பெற்றுத்தர விரைந்து செயலாற்ற வேண்டும்.*
✉🎤
*🌟அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டையே நிர்வகிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாம் அளிக்கப்போகும் வாக்கு விலைமதிப்பில்லாதது.*
✉🎤
*🌟தமிழ்நாட்டின் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் & தேச நலன் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் நம் பேரியக்கத்தின் தோழர்கள், விலைமதிப்பற்ற வாக்குகளை விலை பேசி வாங்க துடிக்கும் அரசியல் வியாபாரிகளையும், வாக்கு அரசியலுக்காக மக்களை ஜாதி மதம் என்ற பெயரில் பிரித்தாள நினைக்கும் சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு அவற்றைத் தகர்த்தெறியும் நோக்கில் தமது விலைமதிப்பற்ற வாக்கினை அளித்துத் தேச நலன் காக்கும் அரசை தேர்ந்தெடுப்பதில் நம் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.*
*அரசியலில் நீங்கள்*
*தலையிடவில்லை என்றால்,*
*அது உங்கள் வாழ்க்கையில்*
*தலையிடும்*
*- புரட்சியாளர் லெனின்*
சென்னை.
14.04.2019
🤝தோழமையுடன்,
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 13 April 2019
*பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-2020 ம் கல்வியாண்டு முதல், பள்ளி, மாணாக்கர் மற்றும் ஆசிரியர் சார்ந்து மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் (EMIS web portal) மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - 2019-2020 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறுபள்ளிக்குமாற்றம்/ நீக்கம் பதிவுகளை எப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறை கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/2019-2020-emis-web-portal-2019-2020.html
🖥📱
*🌟ந.க.எண்:56/கே/இ1/2019 நாள்: 08.03.2019 மற்றும் 01.04.2019 ன் செயல்முறை கடிதத்தின்படி, 2018-2019 கல்வியாண்டின் இறுதியிலேயே அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதலே எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை 2019-20 ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.*
🖥📱
*🌟மேலும், அனைத்து வகை பள்ளிகளிலும் புதிய மாணவர்களின் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறுபள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் ஆகிய அன்றாட பணிகளை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) உள்ளீடு செய்து சார்ந்த பள்ளிகள் இணையதளத்தினை பராமரித்து வருகின்றனவா என்பது அவ்வப்போது மேற்பார்வை செய்யப்படவேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.*
🖥📱
*🌟2018-2019 கல்வியாண்டில் மாணவர்கள் தேர்ச்சியினை இணையதளத்தில் பதிவு செய்தல்/ வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தல்:*
*🌟கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) 2018-2019 கல்வியாண்டிலிருந்து 2019-2020 கல்வியாண்டிற்கு மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் பணி பள்ளி அளவில் தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக மாணவர் தேர்ச்சி அளிப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.*
🖥📱
*⚡http://emis.tnschools.gov.in/Home/emis_school_dash எனும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS), மேற்காணும் இணைப்பின் மூலம் தோன்றும் கீழ்காணும் பக்கத்தில் பெறப்படும் ஒவ்வொரு வகுப்பு மற்றும் ஒவ்வொரு பிரிவு வாரியான மாணவர் பட்டியலை பெற வேண்டும்.*
🖥📱
*⚡பெறப்பட்ட மாணவர் பட்டியில் தலைப்பில் இடது புறமுள்ள Select All மற்றும் வலதுபுறமுள்ள Promote / Transfer என்ற விருப்பத்தினை தெரிவு செய்து பட்டியலின் இறுதியில் உள்ள Submit செய்வதன் மூலம் இப்பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய இயலும்.*
🖥📱
*⚡Submit செய்தவுடன் Promote செய்வதற்கும் Movie to Common Poll செய்வதற்கும் என இரண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். Promote விருப்பத் தெரிவு செய்யும் போது இம்மாணவர்களை சேர்க்க வேண்டிய அடுத்த வகுப்பு மற்றும் பிரிவு தெரிவு செய்து Submit செய்தவுடன் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுவிடுவர். பள்ளியின் இறுதி வகுப்பிலுள்ள மாணவர்களை (terminal calss student) மாணவர்களை பொறுத்தவரை Move to Common Poll என்ற விருப்பத்தினை தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் அம்மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கை பெற இயலும்.*
🖥📱
*🌟2019 - 2020 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கை:*
*⚡கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) முகப்பு பக்கத்தில் அமைந்துள்ள Student/ Student Admission என்ற இணைப்பின் மூலம் அணைத்து விதமான பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள வேண்டும்.*
🖥📱
*⚡மேற்காணும் இணைப்பின் மூலம் பெறப்படும் இணைய பக்கத்தில் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்களைச் சேர்க்கவும் மற்றும் மற்ற வகுப்புகளுக்கு பிற பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களை சேர்க்கவும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் New students registration என்ற இணைப்பின் மூலம் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கலாம்.*
🖥📱
*⚡பிற பள்ளிகளிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு முடித்து (Terminal class students) மேல்வகுப்பு கல்வி பயில வரும் மாணவர்கள் 6,9,11 வகுப்புகளிலும் மற்றும் பொது மாறுதல்களால் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு சேர்க்கை கோரும் மாணவர்களை Admit students for common poll என்ற பின்வரும் இணைப்பினை பயன்படுத்தி உரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.*
🖥📱
*⚡மேற்காணும் இணைப்பினை பயன்படுத்தும் போது மாணவர்களின் எண், பெற்றோர் கைப்பேசி எண், ஆதார், பள்ளியின் UDISE ஆகியவற்றினை உள்ளீடு செய்து மாணவர் பொது தொகுப்பிலிருந்து வேறொரு பள்ளி மாணவரை சேர்க்கலாம்.*
🖥📱
*⚡மேற்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் LKG மற்றும் 1 ம் வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கும், 6 மற்றும் 9 வகுப்புகளில் தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*
🖥📱
*⚡அரசுப் பள்ளிகளில் 11 ம் வகுப்பில் மாணவர்கள் சேரிக்கையினைப் பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வருவதற்கு முன்னரே முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 11ம் வகுப்பில் தற்காலிகமாக சேர்க்கை அனுமதி வழங்கலாம் எனவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வந்த பின்னர் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் கோரும் பாடப்பிரிவினை வழங்குவது குறித்து பரிசீலித்து தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் எனவும், 11ம் வகுப்பில் மாணவரின் பாடப்பிரிவினை பின்னர் உள்ளீடு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.*
🖥📱
*🌟எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையினை 2019-20ம் கல்வியாண்டில் அதிகரிக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மாணவர்கள் சேர்க்கை / நீக்கத்தின் போது கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) அதற்கான பதிவுகளை உடனுக்குடன் உள்ளீடு செய்ய அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து பணிகளை கண்காணிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.*
*🌟மேலும் இது தொடர்பான விபரங்களை புகைப்படத்துடன் அறிய கீழே உள்ள link ஐ கிளிக் செய்து காணலாம் தோழர்களே!*
*👇👇👇👇👇👇👇👇*
https://tnptfayan.blogspot.com/2019/04/2019-2020-emis-web-portal-2019-2020.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 10 April 2019
*பிரான்ஸில் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசுப் பள்ளி ஆசிரியர்!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_30.html
*🌟பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கல்வியாளர்களுக்கான சர்வதேச கருத்தரங்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ.திலிப் அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து உரையாற்றினார்.*
*🌟ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கல்வியாளர்களுக்கான சர்வதேசகருத்தரங்கில் இந்தியாவில் இருந்து 13 பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*
*🌟தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ திலிப் அவர்கள் கலந்து கொண்டு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து விளக்கிக் கூறினார். மேலும், 5 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராகவும், ஆசிரியர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிக்கு நடுவராகவும் அவர் செயல்பட்டார்.*
*🌟இந்தக் கருத்தரங்கில் 110 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் கல்வி முறைகள் குறித்து விளக்கிக் கூறினர்.*
*🌟குறிப்பாக, கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறித்தும், தங்களின் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் புதிய முறைகள் குறித்தும் காட்சிப்படுத்தி இதில், தமிழக ஆசிரியர்கள் சிறப்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச கல்விக்கான தலைமை அலுவலர் திரு.அந்தோணிசால் சிட்டோ பாராட்டினார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_73.html
🎓🥁
*🌟எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகைச்சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.*
🎓🥁
*🌟மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.*
🎓🥁
*🌟அதில் பதிவான மொத்த ஒப்புகை சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
🎓🥁
*🌟திமுக உட்பட நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.*
🎓🥁
*🌟தற்போது ஒரு தொகுதியில் 1% ஒப்புகைச் சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
🎓🥁
*🌟5 % ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது இருப்பினும் மக்களின் கருத்து என்னவென்றால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்க வேண்டும். அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் நாளில் அந்த மையத்திலேயே எண்ண வேண்டும் என்பதே, தேர்தல் ஆணையம் உடனடியாக இத்தகைய கோரிக்கையினை நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*பள்ளிக் கல்வி-அரசு ஊழியர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்- தமிழகம் முழுவதும் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழுமையாக புதிய மருத்துவக் காப்பீடு (NHIS) மூலம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் யுனைடெட் இந்தியா நிறுவத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _மாண்புமிகு தமிழக முதல்வர்_ அவர்களுக்கும், _மதிப்புமிகு நிதித்துறை செயலாளர்_ அவர்களுக்கும் _மதிப்புமிகு ஆணையாளர்_ (கருவூலம் மற்றும் கணக்குத்துறை) அவர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்ப்பட்டது.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/04/nhis.html
*_பார்வை : 1. அரசாணை எண். 202 நிதித்துறை நாள்:30.06.2016_*
🏥💉🚑
*🌟தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.180/- அவர்களது வருமானத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது.*
🏥💉🚑
*_பார்வையில் கண்ட அரசாணை எண். 202 நிதித்துறை நாள்:30.06.2016-ன்படி_*
🏥💉🚑
*🌟அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். இதில் வரும் இடர்பாடுகளை அல்லது நோயாளிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என அரசாணையில் மாநில அளவில் திரு.மு.இராமகிருஷ்ணன் மற்றும் திரு.ஷாகித் பிரான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.*
🏥💉🚑
*🌟அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மனம், உடல் மற்றும் மருத்துவச் செலவு என பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்பதால் மேற்கண்ட இன்னல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் மருத்துவச் செலவினை இல்லாமல் செய்வதற்காக தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தனை அறிமுகம் செய்து அத்திட்டத்தின் மூலம் ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) என்று கூறி சில அறுவைச்சிகிச்சைகளுக்கு ரூ.7½ இலட்சம் எனவும் சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் என்றும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இவையனைத்தும் கட்டணமில்லா சிகிச்சையின் கீழ் (CASHLESS SCHEME) கொண்டு வரப்பட்டுள்ளது.*
🏥💉 🚑
*🌟ஆனால் இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா நிறுவனமும், MDINDIA நிறுவனமும் ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) யை எந்தவொரு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் வழங்கவில்லை.*
🏥💉🚑
*🌟ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை முடிந்து வெளிவரும் போது அதிகப்படியான பணத்தை கட்டிவிட்டுத் தான் வெளியேறுகின்றனர். _இது சார்ந்து இயக்கங்களுக்கு வரும் புகார் மீது இயக்க சார்பில் அரசாணையில் மாநில அளவில் _திரு.மு.இராமகிருஷ்ணன்_ மற்றும் _திரு.ஷாகித் பிரான் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் ஒன்று தொலைபேசியை எடுக்க மாட்டார்கள் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள்._ இதற்கு மிகப் பெரிய போராட்டத்தை இயக்கப் பொறுப்பாளர்கள் நடத்தித் தான் இப்பணத்தை பெற்றுக் கொடுக்க முடிகின்றது. இச் செயல் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.*
🏥💉🚑
*🌟தமிழக அரசு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்திய ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) முழுமையாக ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எட்டப்படவில்லை.*
*_இத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் மட்டும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகை நிலவரம்:_*
*⚡NAME :* SOUNDARIYA,
*அடையாள அட்டை எண் :* TLR/01/EJ407/ NHIS16/ 1215742
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* APPOLLO CHILDREN HOSPITAL, CHENNAI
*மருத்துவ செலவு :* ரூ.1,46,441/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.98981/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.47460/-
*⚡NAME :* KRISHNAVENI
*அடையாள அட்டை எண் :* TLR/01/EJ408/ NHIS16/ 55486
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai
*மருத்துவ செலவு :* ரூ.13081/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.12584/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.497/-
*⚡NAME :* GOPIRAJA
*அடையாள அட்டை எண் :* THN/01/EJ405/ NHIS16/1486300
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Preethi Hospital, Madurai
*NHIS நிறுவனத்தால் வழங்கப்பட்ட தொகை :* ரூ.69,100/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.62,90/-
*⚡NAME :* BABY of DEVI BALA
*அடையாள அட்டை எண் :* MDI5-TNEHS- 0001072217
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* MMM Hospital Chennai
*மருத்துவ செலவு :* ரூ.2,45,327/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.2,15,000/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.30327/-
*⚡NAME :* SAYARA BE SHAIK
*அடையாள அட்டை எண் :* TVM/01/SB5C2/ NHIS16/1032645
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Adayar Cancer Institute, Chennai
*மருத்துவ செலவு :* ரூ.15,659/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.13071/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.2588/-
*⚡NAME :* KARTHICK
*அடையாள அட்டை எண் :* VNR/01/SB308/ NHIS16/1042151
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Appollo Hospital Chennai
*மருத்துவ செலவு :* ரூ.84,150/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.67864/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.16286/-
*⚡NAME :* SANTHI
*அடையாள அட்டை எண் :* SVG/01/SB517/ NHIS16/1088273
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai
*மருத்துவ செலவு :* ரூ.2,00,000/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.56251/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.143749/-
*⚡NAME :* THUFAIL AHMED
*அடையாள அட்டை எண் :* VEL/01/SB305/ NHIS16/1501514
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai
*மருத்துவ செலவு :* ரூ.21,800/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.16736/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.5064/-
*⚡NAME :* BACKIA LAKSHMI
*அடையாள அட்டை எண் :* VNR/01/SB416/ NHIS16/1048372
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Velammal Hospital Madurai
*மருத்துவ செலவு :* ரூ.52,000/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.41,000/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.11,000/-
*⚡NAME :* YOGANANDAN
*அடையாள அட்டை எண் :* PSO/01/PB/304/ NHIS16/3654504
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Parvathi Hospital Chennai
*மருத்துவ செலவு :* ரூ.1,61,000/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.58,250/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.1,02,750/-
*⚡NAME :* NITHYA
*அடையாள அட்டை எண் :* VPM/01/SB417/ NHIS16/3591045
*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Ramachandra Hospital, Chennai
*மருத்துவ செலவு :* ரூ.25,000/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.3,000/-
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.22,000/-
*⚡TOTAL :*
*மருத்துவ செலவு :* ரூ.10,96,458/-
*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.651837/- (59%)
*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.444621/- (41%)
🏥💉🚑
*🌟ஆகவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்திய ‘கட்டணமில்லா சிகிச்சையை" (CASHLESS SCHEME) முழுமையாக உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.*
🏥💉🚑
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)